சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

குடியரசு தின விழா அணிவகுப்பில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு – மம்தா பானர்ஜி அதிர்ச்சி

குடியரசு தின விழா அணிவகுப்பில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு – மம்தா பானர்ஜி அதிர்ச்சி

HOME SLIDER, NEWS, செய்திகள்
     குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி புதுடெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில்  மேற்கு வங்காளத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது : இந்த முடிவால் நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மத்திய அரசின் இந்த அணுகுமுறையால் மேற்கு வங்க மக்கள் அனைவரும் மிகவும் வேதனையடைந்துள்ளனர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வங்கம் முன்னணியில் இருந்தது மற்றும் பிரிவினையின் மூலம் நாட்டின் சுதந்திரத்திற்காக மிகப்பெரிய விலையை செலுத்தியுள்ளது. நேதாஜி மற்றும் நாட்டின் சுதந்திரத்த...
சிறுநீர் கழித்ததாக கூறப்படும் மாணவர் புகாரில் உண்மையில்லை -சென்னை காவல்துறை

சிறுநீர் கழித்ததாக கூறப்படும் மாணவர் புகாரில் உண்மையில்லை -சென்னை காவல்துறை

HOME SLIDER, NEWS, செய்திகள்
    police-attack முக கவசம் அணியவில்லை என்பதால் தன்னை போலீசார் அடித்து துன்புறுத்தியதாகவும், முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் சட்ட கல்லூரி மாணவர் புகார் அளித்திருந்த நிலையில், இந்த புகாரில் உண்மையில்லை என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் (22). இவர் தரமணியில் உள்ள  சட்டப்பல்கலைக்கழகத்தில் 5ம் ஆண்டு படித்து வருகிறது. கல்லூரியில் படித்துகொண்டே பகுதி நேர வேலையும் அவர் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பணி முடிந்து ரஹீம் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் முகக் கவசம் அணியவில்லை என்பதால் போலீசார் ரஹீமை தடுத்து நிறுத்தியதாகவும், இதை தொடர்ந்து இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தன்னை ந...
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

HOME SLIDER, NEWS, செய்திகள்
    உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கியது. வாடிவாசலில் இருந்து வெளியே சீறி பாயும் காளைகளை அடக்க காளையர்கள் வீரத்துடன் முயன்று வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது தமிழர்களின் பண்பாடு ஆகும். அதன்படி, அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருந்த் நிலையில், ஊரடங்கு காரணமாக இன்று ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 7.00 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 700காளைகளுடன் ,  300மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழ் வைத்துள்ள காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற...
ஆப்கானிஸ்தான் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடுங்கி நடு வீதியில் தீயிட்டு கொளுத்திய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தான் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடுங்கி நடு வீதியில் தீயிட்டு கொளுத்திய தலிபான்கள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
ஆப்கானிஸ்தான் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடுங்கி நடு வீதியில் தீயிட்டு கொளுத்திய தலிபான்கள்! ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் பல்வேறு சமூக, கலாச்சார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக இசையும் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோர் இசை கேட்கவும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இசை வாத்தியங்களை ஒலிக்கவும் தலிபான்கள்  தடை விதித்திருந்தனர். இந்நிலையில் தற்போது உள்ளூர் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடுங்கி நடு வீதியில் தீயிட்டு எரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது ஆப்கானிஸ்தான் பாக்தியா மாகாணத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இசையமையாளர் ஒருவரிடம் இருந்து இசைக்கருவி பிடுங்கப்பட்டு, நடுரோட்டில் தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதை கண்டு அந்த இசையமைப்பாளர...
தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாட்டம்!

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப்பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திரு உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள் தமிழக மக்களால் மக்கள் திலகம் என்றும் புரட்சித்தலைவர் என்றும் அன்புடன் அழைக்கப்படும் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் இலங்கையில் கண்டி அருகேயுள்ள நாவலப் பிட்டியில். 1917-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ல் பிறந்தார். தனது சிறுவயது முதற்கொண்டு நாடகத்தில் நடிக்கத் தொடங்கி பின்னர் இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றுத் திரைத்து...
வைரல் ஆன காமெடி ஷோவுக்கு நடவடிக்கை… மத்திய இணையமைச்சர் சொன்னதாக பாஜக அண்ணாமலை டிவீட்டால் பரபரப்பு!

வைரல் ஆன காமெடி ஷோவுக்கு நடவடிக்கை… மத்திய இணையமைச்சர் சொன்னதாக பாஜக அண்ணாமலை டிவீட்டால் பரபரப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் காமெடி ரியாலட்டி ஷோவில் இரண்டு சிறுவர்கள் வயிறு குலுங்க வைக்கும் காமெடி நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள். அந்த நிகழ்ச்சியின் போது அரங்கில் இருந்தவர்களும் அதை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் விழுந்து விழுந்து சிரித்ததால் அந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் இணையத்தில் வைரலானது. அந்த காமெடி மூலம் பிரதமர் மோடியை இழிவு படுத்திவிட்டார்கள் என்றும் விரைவில் அந்த டிவி மீதும், அந்த நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீதும் நடவாடிக்கை எடுக்கப்படும்  என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு டிவிட் பதிவு போட... https://twitter.com/annamalai_k/status/1482736172636213249?s=20 அரசியல் கட்சியினர் பலரும் அந்த வீடியோவை தேடிப்பிடித்து வைரலாக்க ஆரம்பித்தனர். கூடவே பாஜகவை கடுமையாக விமர்சித்து பதிவும் போட்டனர். மத்திய இணை அமைச்சர் சொல்கிற ப...
மாஸ்க் அணியாத சட்டக்கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து முகத்தில் சிறுநீர் கழித்த போலீசார்!? பகீர் குற்ற்ச்சாட்டால் ஆடிப்போயிருக்கும் சென்னை போலீஸ்!!

மாஸ்க் அணியாத சட்டக்கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து முகத்தில் சிறுநீர் கழித்த போலீசார்!? பகீர் குற்ற்ச்சாட்டால் ஆடிப்போயிருக்கும் சென்னை போலீஸ்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மாஸ்க் அணியாத சட்டக்கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி இரவு முழுதும் அடித்து உதைத்து முகத்தில் சிறுநீர் கழித்த போலீசார்! பகீர் குற்ற்ச்சாட்டால் ஆடிப்போயிருக்கும் சென்னை போலீஸ்!! மாஸ்க் அணியவில்லை என கூறி சட்டக்கல்லூரி மாணவர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதோடு அவரின் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் (22). இவர் தரமணியில் உள்ள  சட்டப்பல்கலைக்கழகத்தில் 5ம் ஆண்டு படித்து வருகிறது. கல்லூரியில் படித்துகொண்டே பகுதி நேர வேலையும் அவர் செய்து வருகிறார். நேற்று இரவு 11.30 மணியளவில் பணி முடிந்து ரஹீம் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். முகக் கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் கட்டுமாறு ரஹீஇமிடம் போலீசார் கூறியுள்ளனர். அ தற்கு ரஹீம...
பயங்கரவாதி தங்கையை விடுவிக்க, சர்ச்சுக்குள் புகுந்து மக்களை பணயக்கைதியாக பிடித்த அண்ணன்.!

பயங்கரவாதி தங்கையை விடுவிக்க, சர்ச்சுக்குள் புகுந்து மக்களை பணயக்கைதியாக பிடித்த அண்ணன்.!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  பயங்கரவாதி அக்காவை விடுவிக்க, சர்ச்சுக்குள் புகுந்து மக்களை பணயக்கைதியாக பிடித்த தம்பி.! அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணம், கோவில்லே நகரில் யூதர்களின் பெத் இஸ்ரேல் சபை வழிபாட்டுத்தலம் உள்ளது. நேற்று யூதர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த நிலையில், ஆயுதத்துடன் வந்த மர்ம நபர் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த மக்களை தாக்கியுள்ளார். இதனால் மக்கள் பதறியபடி அங்கிருந்து வெளியேறிய நிலையில், 4 பேரை அவர் பணயக்கைதியாக பிடித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சம்பவ இடத்தை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர் இதற்கிடையில், மர்ம நபர் முகநூலில் வெளியிட்ட ஆடியோவில், "எனது தங்கையுடன் போனில் தொடர்புகொள்ள வேண்டும். நான் இறந்துவிடுவேன். அமெரிக்காவுடன் பிரச்சனை உள்ளது" என்று பேசி இருந்தார். அவரின் சகோதரி யார்? என ஆய்வு செய்கையில், அவர்...
வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு இரவில் மனைவியை “விருந்தாக்கும்” விநோதமான கணவர்கள்!

வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு இரவில் மனைவியை “விருந்தாக்கும்” விநோதமான கணவர்கள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  விருந்தினர்களுக்கு இரவில் மனைவியை "விருந்தாக்கும்" மக்கள் ஆப்ரிக்காவின் தென் பகுதியில் உள்ள நாடு நமிபியா, இந்தநாட்டில் ஓவாஹிம்பா, ஓவாஸிம்பா ஆகிய பழங்குடின மக்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் “Okujepisa omukazendu” என்ற விநோதமான பழக்கம் இருக்கிறது. அதன் அர்த்தம் "விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக்கு". இந்த விநோத பழக்கத்தின் “Okujepisa omukazendu” என பெயர். இதன்படி ஒருவர் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் அந்த விருந்தினருக்கு அன்று இரவு அவர்கள் வீட்டில் தங்கினால் அப்பொழுது கணவன் தன் மனைவியை அந்த விருந்தினருக்கு "விருந்தாக்க" வேண்டுமாம். இதுதான் அந்த பழங்குடியின மக்களின் பழக்கமாம் இப்படியாக தன் மனைவி விருந்தினருடன் சந்தோஷமாக இருக்கும் போது கணவன் வேறு அறையில் தங்கி கொள்ள வேண்டும், வேறு அறை இல்லை என்றால் வீட்டிற்கு வெளியில் படுத்துக்கொள்ள வேண்டும் எக்காரணத்தை க...
அமெரிக்காவின் தென் கிழக்கு மாகாணங்களுக்கு பனிபுயல் எச்சரிக்கை! ஆயிரம் விமானங்கள் ரத்து!!

அமெரிக்காவின் தென் கிழக்கு மாகாணங்களுக்கு பனிபுயல் எச்சரிக்கை! ஆயிரம் விமானங்கள் ரத்து!!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களான கென்டக்கி, ஓஹியோ, மேற்கு வர்ஜீனியா, அட்லாண்டா உள்ளிட்ட 10 மாகாணங்களை பனிப்புயல் தாக்கக் கூடும் என்று குளிர்கால புயல் கண்காணிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வெள்ளியன்று வேகமாக நகர்ந்து வரும் பனிப்புயலால் மத்திய மேற்குப் பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல பள்ளிகள் மூடப்பட்டன. பல பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டன. டெஸ் மொயின்ஸில் உள்ள விமான நிலையத்தில் 14 அங்குலத்திற்கும் அதிகமான பனிப்பொழிவு காணப்பட்டதாக தேசிய வானிலை சேவை ஆய்வாளர் பிராட் ஸ்மால் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் தெற்கு அயோவாவில் ஒரு அடி உயரத்திற்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.  டென்னசியின் சில பகுதிகள் 14 சென்டிமீட்டர் அளவிற்கு பனி பொழிவை பெறக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர். வ...