ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கொடுக்கலாம்- தலைவர்கள் கருத்து!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கொடுக்கலாம்- தலைவர்கள் கருத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கொடுக்கலாம்- தலைவர்கள் கருத்து! கொரோனா தொற்று 2-ம் அலை நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தநிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளில் பலருக்கு கடுமையான சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கவலைப்படும் வகையில் அதிகரித்து வருகிறது. மூச்சுத்திணறலுக்கு உள்ளாகும் கொரோனா நோயாளிகளுக்கு செயற்கை சுவாசத்துக்கான ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சில மாநிலங்களில் ஆக்சிஜன் கிடைப்பது தாமதம் ஆகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் பக்கத்து மாநிலங்கள...
தமிழகத்தில் முழு ஊரடங்கு – எந்தெந்த பணிகளுக்கு அனுமதி?

தமிழகத்தில் முழு ஊரடங்கு – எந்தெந்த பணிகளுக்கு அனுமதி?

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் முழு ஊரடங்கு - எந்தெந்த பணிகளுக்கு அனுமதி? தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இன்று அமலில் இருக்கும் முழு ஊரடங்கில் அரசு விலக்கு அளித்துள்ள பணிகள் விவரம் வருமாறு: பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம் வழக்கம்போல் நடைபெறலாம். ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் வழக்கம்போல் பணியாற்றலாம். மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருத்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் நடைபெறலாம். அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளைப்பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள், பெட்ரோல்-டீசல், எல்.பி.ஜி. கியாஸ் போன்ற எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கலாம். தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படலாம். ஓட்டல்...
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது – விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல்!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது – விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது - விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல்! வேகமாக பரவும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் அவர்கள் பயணித்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து, கடந்த 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கின்போது, தனியார் மற்றும் பொது போக்குவரத்து, வாடகை ஆட்டோ, வாடகை கார் மற்றும் தனியார் வாகன போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக, தொலைதூரம் செல்லும் பஸ்கள் தற்போது பகல் நேரத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும்...
கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய தமிழக அரசு!

கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய தமிழக அரசு! தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, *தனியார், அரசு பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்கலாம். *ஐடி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம். *கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை. *சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி.  *திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை. *அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. *உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி. *உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. ...
மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்- மத்திய அரசு!

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்- மத்திய அரசு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்- மத்திய அரசு! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: * கொரோனா தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும். * மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. * கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் ரூ.150-க்கு கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக தரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது....
16 சிறப்பு ரெயில்கள் நாளை ரத்து- தெற்கு ரெயில்வே!

16 சிறப்பு ரெயில்கள் நாளை ரத்து- தெற்கு ரெயில்வே!

HOME SLIDER, NEWS, செய்திகள்
16 சிறப்பு ரெயில்கள் நாளை ரத்து- தெற்கு ரெயில்வே! முழு ஊரடங்கு நாளை அமல்படுத்தப்படுவதால் மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் செல்லக்கூடிய அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வழக்கம் போல இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரெயில் சேவை நாளை குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர 16 பயணிகள் சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு ரெயில் நாளை ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர்-புதுச்சேரி, திருச்சி-கரூர், திருச்சி- காரைக்கால், விழுப்புரம்-மதுரை ஆகிய பகுதிகளுக்கு இடையே இயக்கப்படுகின்ற பயணிகள் ரெயில்கள் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரெயில்கள் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யக்கூடிய சிறப்பு ரெயில்களாக இதுவரையில் இயக்கப்பட்டு வந்தது. கொல்லம்-ஆழப்புழா, ஆழப்புழா-கொ...
நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்!

நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்! சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் வானத்தைபோல தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறேன். நான் கடந்த 2019-ம் ஆண்டு சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கருத்து வேறுபாடு காரணமாக அவரை நான் பிரிந்து விட்டேன். விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தொலைக்காட்சி தொடர்களில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நவீன்குமார் என்பவர் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை காட்டினார். அந்த ஆசையில் அவர் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தேன். அவருக்கு தொலைக்காட்சி தொடர் துணை இ...
4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட டிராகன் விண்கலம்

4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட டிராகன் விண்கலம்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காகவும், விண்வெளி வீரர்களை அனுப்புவதற்காகவும் விண்கலங்கள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்பப்படும் வீரர்கள், குறிப்பிட்ட காலம்வரை விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அவ்வகையில், நாசா-ஸ்பேஸ்எக்ஸ் சார்பில் டிராகன் விண்கலத்தை நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை அமெரிக்காவின் கேப் கெனரவலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர், ஜப்பான், பிரான்சைச் சேர்ந்த ஒருவர் என 4 விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். ராக்கெட்டில் இர...
பிரபல நடிகரை கலாய்த்த பிரியா பவானி சங்கர்!

பிரபல நடிகரை கலாய்த்த பிரியா பவானி சங்கர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா - பிரபல நடிகரை கலாய்த்த பிரியா பவானி சங்கர்! மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யின் 33-வது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை நடிகர் சதீஷ் கிண்டல் செய்து பதிவு செய்திருந்தார். தற்போது சதீஷின் புகைப்படத்தை வைத்து பிரியா பவானி சங்கர் கிண்டல் செய்து இருக்கிறார். சன்னிலியோனுடன் சதீஷ் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு, இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு என்று கிண்டல் ச...
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஆக்ஸிஜன் ஆலைகள் அனைத்தையும் மத்தியஅரசு கையகப்படுத்தி,  ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் –  அரவிந்த் கெஜ்ரிவால்

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஆக்ஸிஜன் ஆலைகள் அனைத்தையும் மத்தியஅரசு கையகப்படுத்தி,  ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் –  அரவிந்த் கெஜ்ரிவால்

HOME SLIDER, NEWS, politics
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஆக்ஸிஜன் ஆலைகள் அனைத்தையும் மத்தியஅரசு கையகப்படுத்தி,  ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் -  அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடி, இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடி வருகிறார். இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஆக்ஸிஜன் ஆலைகள் அனைத்தையும் மத்தியஅரசு கையகப்படுத்தி,  ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என யோசனை தெரிவித்தார் நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 82 சதவிகித தொற்று பாதிப்பு டெல்லி, தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் மட்டுமே காணப்படுகிறது. தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, நோயாளிகளுக...