ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

சதுப்பு நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

சதுப்பு நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சதுப்பு நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் யூசுப் அலி சென்ற தனியார் ஹெலிகாப்டர், கொச்சியின் புறநகர்ப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லூலூ குழுமத்தின் தலைவரான யூசுப் அலி, பயணித்த ஹெலிகாப்டர் கொச்சியின் புறநகர்ப் பகுதியில் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் இவருடன் 6 பேர் பயணித்தனர். அப்பகுதியில் கடும் காற்றுடன் மழையும் பெய்ததால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். விமானி சமாளித்து விமானத்தைச் செலுத்தியதால், சதுப்பு நிலப் பரப்பில் விமானம் தரையிறக்கப்பட்டது.  யூசுப் அலி மற்றும் அவருடன் பயணித்த 6 பேரும் மயிரிழையில் உயிர் தப்பினர். மேலும் அவர்களுக்குச் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அருகில் இருக்கும் தனியார் மருத்...
கூஜ்பெகரில் நடந்தது இனப்படுகொலை -மம்தா

கூஜ்பெகரில் நடந்தது இனப்படுகொலை -மம்தா

HOME SLIDER, NEWS, politics
மேற்கு வங்காள மாநிலத்தில் நான்காம் கட்ட தேர்தலின்போது, கூஜ்பெகர் மாவட்டம், சிடால்குச்சி தொகுதியில் உள்ள 126வது வாக்குச்சாவடியில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பாஜகவின் சதி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து கூஜ்பெகர் மாவட்டத்திற்குள் அரசியல் கட்சி தலைவர்களி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சிலிகுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூஜ்பெகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டது இனப்படுகொலை என்றும், மார்பு மற்றும் கழுத்தை குறிவைத்து சுடப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். சிஐஎஸ்எப் வீரர்கள், தொழிலக விவகாரங்களை கையாள மட்டுமே பயிற்சி பெற்...
அண்ணா பல்கலைக்கழகத்தின் சர்ச்சை துணை வேந்தர் பணி ஓய்வு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் சர்ச்சை துணை வேந்தர் பணி ஓய்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அண்ணா பல்கலைக்கழகத்தின் சர்ச்சை துணை வேந்தர் பணி ஓய்வு பெற்றார். தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த பல்கலைக்கழகத்திற்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்வியாளர் சூரப்பா நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்திற்கு அப்போதே கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களும், சர்ச்சைகளும் வெடித்தன. இந்த நிலையில் இன்றுடன் அவரது பதவி காலம் முடிவடைந்தது. ஏற்கனவே இரண்டு பல்கலைக் கழக துணைவேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டதால், இவருக்கும் பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அதற்கு வாய்ப்...
தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா… என்ன விசேஷம் தெரியுமா!

தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா… என்ன விசேஷம் தெரியுமா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா... என்ன விசேஷம் தெரியுமா! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் ஆகியவற்றின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா, கேரளாவிற்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். விமான பயணத்தின் போது எடுத்த வீடியோவையும், புகைப்படத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கேரளாவில் வருகிற ஏப்ரல் 14ம் தேதி மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்காக தான் அவர்கள் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு ஓணம் பண்டிகையை கொண்டாட இருவரும்,...
‘கர்ணன்’ படம் பார்த்ததும் மாரி செல்வராஜை முத்தமிட்டு வாழ்த்திய விஜய் சேதுபதி!

‘கர்ணன்’ படம் பார்த்ததும் மாரி செல்வராஜை முத்தமிட்டு வாழ்த்திய விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘கர்ணன்’ படம் பார்த்ததும் மாரி செல்வராஜை முத்தமிட்டு வாழ்த்திய விஜய் சேதுபதி! மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் ஹீரோயினாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, நட்டி நட்ராஜ், யோகிபாபு, லால், கவுரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தாணு தயாரித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் உட்பட படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் ‘கர்ணன்’ படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளனர். இதனிடையே, படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்காக ‘கர்ணன்’ படத்தின் சிறப்புக் காட...
இயக்குனர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாதிப்பு!

இயக்குனர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாதிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இயக்குனர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், தற்போது, நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குனருமான சுந்தர்.சி-யும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குஷ்பு டுவிட்டரில் கூறியதாவது: “எனது கணவர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அவர் நலமாக உள்ளார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்” என குஷ்பு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகை குஷ்பு, பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். நடிகை குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது கணவர் சுந்தர் சி-யும் வீடுவீடாக சென்று...
ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!

ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சில மாநிலங்களில் படுக்கை தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து செலுத்த அதிக அளவில் மருந்து தேவைப்படுகிறது. கொரோனா தொற்றை குணப்படுத்துவதில் ரெம்டெசிவிர் ஊசி மருந்து சிறப்பான வகையில் பயனளிக்கிறது. இதனால் உலகளவில் இந்த மருந்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான நாட்டிற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகிறது. தற்போது இந்தியாவில் அதிகமான தேவை இருப்பதால், கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரும்வரை ரெம்டெசிவிர் ஊசி மரு...
திருப்பதியில் கொரோனா பரவல் அதிகரிப்பு- ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரம் ரத்து!

திருப்பதியில் கொரோனா பரவல் அதிகரிப்பு- ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரம் ரத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பதியில் கொரோனா பரவல் அதிகரிப்பு- ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரம் ரத்து! ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதி எம்.பி.யாக இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்லி துர்கா பிரசாத் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சென்னை ஆஸ்பத்திரியில் இறந்தார். திருப்பதி எம்.பி. பதவிக்கான இடைத்தேர்தல் வரும் 17-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் குருமூர்த்தி, தெலுங்கு தேசம் சார்பில் பனபாகாலட்சுமி, பா.ஜ.க., ஜனசேனா (பவன்கல்யாண்) கூட்டணி சார்பில் ரத்தினபிரபா போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களும் ஓட்டு சேகரித்து வருகின்றனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குருமூர்த்தியை ஆதரித்து ...
மாதவராவ் ஜெயித்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

மாதவராவ் ஜெயித்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மாதவராவ் ஜெயித்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்! ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மரணம் காரணமாக அந்த தொகுதியில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. வேட்பாளர் மரணத்தால் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட மாட்டாது. அந்த தொகுதியில் பதிவான வாக்குகள் திட்டமிட்டபடி மே 2-ந்தேதி எண்ணப்படும். அந்த தொகுதி தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதன் அடிப்படையில் தான் அடுத்தகட்ட முடிவுகள் மேற் கொள்ளப்படும். மாதவராவ் அந்த தொகுதியில் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்....
துரை முருகன் கொரானா பாதிப்பால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி!

துரை முருகன் கொரானா பாதிப்பால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக பொது செயலாளர் .துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோணா தொற்று காரணமாக விட்டில் தன்னை தனிமைப் படுத்திக் கொண்ட அவர், இன்று மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மகனும் வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த்திற்கும் துரைமுருகன் சகோதரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது....