ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

சட்டப்பேரவையில் வேளாண் சட்ட நகல்களை கிழித்தெறிந்த முதல்வர் கெஜ்ரிவால்!

சட்டப்பேரவையில் வேளாண் சட்ட நகல்களை கிழித்தெறிந்த முதல்வர் கெஜ்ரிவால்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள டெல்லி அரசு, போராட்டங்களில் ஈடுபட்டிருப்போருக்கு குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தையும் அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆங்கிலேயேர்களை விட மோசமாக மத்திய அரசு மாறிவிடக் கூடாது என்று குறிப்பிட்டார். எனவேதான் ஒவ்வொரு விவசாயியும் பகத் சிங்கைப் போல மாறி போராடி வருவதாக அவர் கூறினார். உரையாற்றிக் கொண்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு கட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் நகல்களை கிழித்தெறிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்...
ஸ்டாலின் மனைவி யாருக்கு ஓட்டு போடுவார் தெரியுமா? – கொளுத்தி போடும் அமைச்சர் செல்லூரார்

ஸ்டாலின் மனைவி யாருக்கு ஓட்டு போடுவார் தெரியுமா? – கொளுத்தி போடும் அமைச்சர் செல்லூரார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவியே அதிமுகவுக்கு தான் ஓட்டுப் போடுவார் - அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேச எதிர்க்கட்சி எந்த அறுகதையும் இல்லை. அவர்கள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள்?. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த முதல் கட்சி அதிமுக தான். கமல் எல்லாம் ஒரு தலைவரே இல்லை. பிரச்சாரத்தில் அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை” என தெரிவித்தார். தொடர்ந்து, “அம்மா சிமெண்ட் அம்மா குடிநீர் திட்டத்தை பற்றியெல்லாம் கமலுக்கு என்ன தெரியும்? விலையை கட்டுப்படுத்த தான் இந்த திட்டங்கள் எல்லாம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. திமுக ஆட்சியில் என்ன கொண்டு வந்தார்கள்? அதை பற்றி அவர்களுக்கு பேச தெம்பு இருக்கிறதா?. தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக குறிப்பிட்டிருக்கும் திமுக,...
கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பமும் உருப்படாது – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பமும் உருப்படாது – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பமும் உருப்படாது - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சீரமைப்போம் தமிழகத்தை என்று கடந்த ஒரு வாரமாக தொடர் பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். பிரச்சாரத்தில் அவர் அதிமுக ஆட்சியை கடுமையாக சாடி வருகிறார். போதாத குறைக்கு எம்.ஜி.ஆரின் நீட்சி, எம்.ஜி.ஆரின் வாரிசு என்றும் சொல்லி வருகிறார். இந்நிலையில் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கமல்ஹசானை கடுமையா தாக்கி பேசினார். ‘’70வயதில் பிக்பாஸ் நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியை நடத்துகிறவர் அரசியலுக்கு வந்தால் சரியாக இருக்குமா? நாட்டுக்கு நல்ல செய்ய கமல் வரவில்லை. நல்லா இருக்குற குடும்பங்களை கெடுத்து வருகிறார் கமல். பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கெட்டுத்தான் போவார்கள். ஒர...
தப்ளிக் ஜமாத் மீது பொய் குற்றச்சாட்டு கூறிய உள்துறை அமைச்சகமும் மத்திய அரசும் மன்னிப்பு கேட்க வேண்டும் -சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தப்ளிக் ஜமாத் மீது பொய் குற்றச்சாட்டு கூறிய உள்துறை அமைச்சகமும் மத்திய அரசும் மன்னிப்பு கேட்க வேண்டும் -சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தப்ளிக் ஜமாத் மீது பொய் குற்றச்சாட்டு கூறிய உள்துறை அமைச்சகமும் மத்திய அரசும் மன்னிப்பு கேட்க வேண்டும் -சமூக ஆர்வலர்கள் கோரிக்கை   கொரோனா பரவலுக்கு காரணமானவர்கள் என்று கைது செய்யப்பட்ட தப்ளிக் ஜமாத் அமைப்பை சேர்ந்த மேலும் 36 பேரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பரவலுக்கு காரணம் என்று கூறி கைது செய்யப்பட வெளிநாட்டவர் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எந்தவித ஆதாரமின்றி மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டெல்லி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் கொரோனா தீவிரமாக பரவ தொடங்கியிருந்த கால கட்டத்தில் டெல்லியில் இஸ்லாமிய சர்வதேச மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி...
சபரிமலையில்  20ம் தேதி முதல் தினமும் 5,000 பக்தர்கள் அனுமதி!

சபரிமலையில்  20ம் தேதி முதல் தினமும் 5,000 பக்தர்கள் அனுமதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சபரிமலையில்  20ம் தேதி முதல் தினமும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் சபரிமலையில் தினமும் 5000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு கால பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. நவம்பர் 17-ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை உள்ள ஐந்து நாட்கள் தினமும் ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்களும், மகரவிளக்கு அன்று 5,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என முதலில் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆன்லைன் புக்கிங் கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது. புக்கிங் தொடங்கிய 2 மணி நேரத்தில் அனைத்து நாள்களுக்கு...
தொண்டு நிறுவனங்களுக்கு இந்திய மதிப்பில் 29 ஆயிரம் கோடியை நன்கொடையாக வாரி வழங்கிய பெண்!

தொண்டு நிறுவனங்களுக்கு இந்திய மதிப்பில் 29 ஆயிரம் கோடியை நன்கொடையாக வாரி வழங்கிய பெண்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட் 4 மாதங்களில் 4 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29 ஆயிரத்து 437 கோடி) 384 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். அப்போது அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளை தனது மனைவி மெக்கன்சிக்கு ஜெப் பெசோஸ் ஜீவனாம்சமாக வழங்கினார். இதன் அப்போதைய மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் கோடி ஆகும். தற்போது மெக்கன்சியின் சொத்து மதிப்பு 60.7 பில்லியன் அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. இதன் மூலம் அவர் உலகின் 18-வது பணக்காரராகவும், உலக அளவில் பெண்க...
முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய சுதாகரனின் மனுவை ஏற்றது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் !

முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய சுதாகரனின் மனுவை ஏற்றது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேர் கர்நாடக மாநில பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆண்டுகள் தண்டனை காலம் முடிவடைகிறது. விடுமுறை மற்றும் நன்னடத்தை காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று அவரது வக்கீல்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது தண்டனை காலம் முடிந்து ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்பட இருக்கிறார். இந்த தகவலை கர்நாடக சிறைத்துறை ஏற்கனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவித்து உள்ளது. இதனிடையே சசிகலா, இளவரசி 2 பேரும் விசாரணை கைதியாக 33 நாட்கள் சிறையிலிருந்தார்கள். அந்த 33 நாட்கள் மற்றும் சசிகலா 2 முறை பரோலில் சென்ற 17 நாட்கள் கழித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலையாக வாய்ப்ப...
ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
3 நாள் விசா... ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பான தகவல்களை அவ்வப்போது வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார். கைலாசா தொடர்பான பல்வேறு வதந்திகளும் பரவத் தொடங்கின. கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள், புதிய தங்க நாணயம் என அதிரடி அறிவிப்பை நித்யானந்தா வெளியிட்டார். விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில், கைலாசா பயணம் தொடர்பாக நித்யானந்தா பேசுவது போன்ற ஒரு புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கைலாசா நாட்டிற்கு வருபவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாகவும், இதற்காக 3 நாட்கள் கொண...
மு.க.ஸ்டாலின்-தி.மு.க. கூட்டணி தலைவர்கள் உண்ணாவிரதத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

மு.க.ஸ்டாலின்-தி.மு.க. கூட்டணி தலைவர்கள் உண்ணாவிரதத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லியில் 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நாளை (18-ந்தேதி) சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்துக்கு முறைப்படி போலீசாரிடம் அனுமதியும் கேட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டங்கள் நடைபெறும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க தி.மு.க. சார்பில் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இது தொடர்பான கடிதமும் தி.மு.க.வுக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போலீஸ் தடையை மீறி நாளை திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடத்த தி.மு.க...
ஜெயலலிதா நினைவிட பணிகளுக்காக சிறப்பு அதிகாரி நியமனம்

ஜெயலலிதா நினைவிட பணிகளுக்காக சிறப்பு அதிகாரி நியமனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இருந்தாலும் நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா ...