ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற  வலியுறுத்தி  எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற  வலியுறுத்தி  எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற  வலியுறுத்தி  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் ராகுல்காந்தி, சரத்பவார், டி.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர்.   இந்த சந்திப்புக்கு பிறகு கூட்டாக எதிர்க்கட்சியினர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:   விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் திரும்பப் பெறுவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதியிடம் தெரிவித்தோம்.  முறையான விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வேளாண் மசோதா குறித்து ஆழமான விவாதம் நடத்த வேண்டும் என நாங்கள் கோரினோம். இந்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டோம். ஆனால், எங்களின் எந்த பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவசர கதியில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன” என்றனர்...
வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக இராணிப்பேட்டையில் திமுக ஆர்ப்பாட்டம்!!

வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக இராணிப்பேட்டையில் திமுக ஆர்ப்பாட்டம்!!

NEWS
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராடி வருகின்றன. அவர்களுக்கு ஆதரவாக திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராணிப்பேட்டை மாவட்டம் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி, கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களின் ஆணைப்படியும் எஸ் ஜெகத்ரட்சகன் MP அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர், அவர்களின் வழிகாட்டுதலில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இராணிப்பேட்டை மாவட்ட கழக சார்பில் மாவட்ட தலைவர் திரு. காந்தி எம் எல் ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடன் திரு. பா. எழில் இனியன் (மாவட்ட துணை அமைப்பாளர், வழக்கறிஞர் பிரிவு, A அன்பு லாரன்ஸ் நகர கழக துணை செயலாளர், VSR ரவிச்சந்திரன் மாவட்ட பிரதிநிதி, ...
வெள்ளத்தில் மக்களின் பசியை போக்கிய அமைச்சர்; வியந்து போன மக்கள்!

வெள்ளத்தில் மக்களின் பசியை போக்கிய அமைச்சர்; வியந்து போன மக்கள்!

NEWS
நிவர் புயலின் தாக்கம் சென்னையில் பேய் மழையாய் கொட்டித் தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தன, தலைநகரம் தண்ணீர் நகரமாய் மாறிப்போனது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சமைக்க முடியாமல் வட சென்னையின் பல பகுதி மக்கள் உணவு கிடைக்காமல் திண்டாடினர். இந்தக் காட்சி மழைக்காலத்தில் வீதிவீதியாக சென்று நிவாரணப் பணிகளில் தீவிரம் காட்டிய அமைச்சர் ஜெயக்குமாரின் கண்களில் பட்டது.பசியால் குழந்தைகள்,முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வாடுவதை பார்த்தார். உடனடியாக தன் சொந்தப் பணத்தில் தரமான வெஜ்பிரியாணியை பல இடங்களில் சமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கடகடவென வேலைகள் தொடங்கி கமகமவென வெஜ்பிரியாணி தயாரானது. பெரிய அண்டாவை ஒரு சைக்கிளில் எடுத்து வைத்துக்கொண்டு பல இடங்களுக்கும் அவரே நேரில் சென்று பலருக்கும் பரிமாறி பசியாற்றினார்.மரங்களை அப்புறப்படுத்துவது, மீனவர்களை பாதுகாப்பது,நிவாரண முகாம்களை அமைப்பது என எத...
பாமக- வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும் -ஐகோர்ட்டில் முறையீடு

பாமக- வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும் -ஐகோர்ட்டில் முறையீடு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க கோரி, பாமக மற்றும்  வன்னியர் சங்கத்தினர், சென்னையில் நேற்று போராட்டம் நடத்தினர். சென்னை வந்த பாமகவினரின் வாகனங்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தடுத்தனர். இதனால் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். பெருங்களத்தூரில் ரெயில் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்களை வீசி அதை தடுத்து நிறுத்தினர். சென்னையின் பல்வேறு இடங்களில் பாமகவினர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு...
பி.எம்.கேர்ஸ் நிதி ஏன் தணிக்கை செய்யப்படவில்லை? பா.ஜனதா ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை – மம்தா பானர்ஜி

பி.எம்.கேர்ஸ் நிதி ஏன் தணிக்கை செய்யப்படவில்லை? பா.ஜனதா ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை – மம்தா பானர்ஜி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பி.எம்.கேர்ஸ் நிதி ஏன் தணிக்கை செய்யப்படவில்லை? பா.ஜனதா ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை - மம்தா பானர்ஜி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- மத்தியில் உள்ள பா.ஜனதா அரசின் விருப்பத்திற்கு ஏற்ப எனது தலைமையிலான மாநில அரசாங்கம் செயல்படாது. விசாரணை முகமைகள் மூலம் எங்களை அவர்கள் அச்சுறுத்துகிறார்கள். அதற்கெல்லாம் நாங்கள் பயப்படவில்லை. அது (பா.ஜனதா) ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை. பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே போய் விட்டது? அதன் எதிர்காலம் என்ன என்று யாருக்காவது தெரியுமா? ஏன் அது தணிக்கை செய்யப்படவில்லை?. கொரோனாவை கட்டுப்படுத்த அவர்கள் எங்களுக்கு என்ன கொடுத்தார்கள். ஆனால் பாடம் எடுக்கிறார்கள். புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரச்சினையில் பா.ஜனதாவை எந்த கட்சிகளும் ஆதரிக்கவில்லை....
தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்

HOME SLIDER, NEWS, செய்திகள்
இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடலை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வரும் 2-ந்தேதி தென் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும். இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 1-ந்தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்...
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுவடைய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில், புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும். மேலும், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டிசம்பர் 2-ந்தேதி தென் தமிழகத்தில் அதி கனமழையும், வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பெயரை உலக அரங்கில் கொச்சைப்படுத்த சதி!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பெயரை உலக அரங்கில் கொச்சைப்படுத்த சதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழனின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை கொச்சைப் படுத்தவும், ஜல்லிக்கட்டு என்றாலே காளைகளை அடக்கி வெட்டி கொன்று தின்னும் காட்டுமிராண்டித்தனமான நிகழ்வுதான் ஜல்லிக்கட்டு என உலக அரங்கில் பதிய வைத்து தமிழனின் மரபு கலாச்சாரம் சார்ந்த பாரம்பரிய வீர விளையாட்டை அழிக்கவும் மாபெரும் சதி நடக்கிறது. அதனால்தான் மலையாள மொழியில் எடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் தமிழனின் வீர விளையாட்டை அழிக்கும் சதி. ஜல்லிக்கட்டு ஆஸ்கர் பரிந்துரை புறக்கணிப்போம் - கோடங்கி https://youtu.be/rrpC85Axkoc...
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் பரிசு

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் பரிசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் பரிசு திமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் இளைய சூரியன் Udhayanidhi Stalin பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பட தயாரிப்பாளரும்,  இராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் Ezhil Iniyan MTech,MBA,ML அவர்கள் ஏற்பாட்டில் அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் பரிசாக வழங்கப்பட்டது. அதோடு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரக்கோணம் நகர கழக துணைச் செயலாளர் A. அன்பு லாரன்ஸ் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் V.S.R.ரவிச்சந்திரன், பூக்கடை.N.அரி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்....