ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

அர்னாப் கைது – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்துக்கு குவியும் கண்டனங்கள்

அர்னாப் கைது – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்துக்கு குவியும் கண்டனங்கள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அர்னாப் கைது - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்துக்கு குவியும் கண்டனங்கள் அர்னாப் கோஸ்வாமி கைது தொடர்பாக, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்த கருத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. கடந்த 2018ம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், மும்பை காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார் பாரதீய ஜனதா ஆதரவு பத்திரிகையாளரான அர்னாப் கோஸ்வாமி அவரின், கைதுக்கு மோடி அரசின் பல அமைச்சர்கள் விரைந்து வந்து, தங்களின் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். அதில், மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஸ்மிருதி இரானி. “சுதந்திரமான பத்திரிகையாளர்கள், அர்னாப் கோஸ்வாமிக்கு ஆதரவாக இந்த சூழலில் குரல் கொடுக்கவில்லை என்றால், அவர்கள், தந்திரோபயமாக ஃபாசிஸத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்” என்றுள்ளார் ஸ்மிருதி இரானி அவரின், இந்த வார்த்தைகள் மிரட்டல் போன்று உள்ளதாக விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற...
தில்லுமுல்லுப் பேர்வழிகள் ஒட்டும் கேவலமான சுவரொட்டிகள் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தில்லுமுல்லுப் பேர்வழிகள் ஒட்டும் கேவலமான சுவரொட்டிகள் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தில்லுமுல்லுப் பேர்வழிகள் ஒட்டும் கேவலமான சுவரொட்டிகள் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை அநாமதேய தில்லுமுல்லுப் பேர்வழிகள் ஒட்டும் சுவரொட்டிகளை திமுக தொண்டர்கள் கிழிக்க வேண்டாம்! வாழ்க வசவாளர்கள்! மாநில உரிமைகளைப் பறிகொடுக்கும் கொள்ளைக் கூட்டம் அர்த்தராத்திரியில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தொடர்ந்தால், தமிழ் மக்கள் வழங்கும் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும்! “மக்களை – மாணவர் நலனை – தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க எள்ளளவும் முயற்சிக்காத எத்தர்கள் – சுயஅரிப்பைச் சொறிந்துகொள்ள ஒட்டுபவைதான் அநாமதேயச் சுவரொட்டிகள்; மக்கள் வழங்கும் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும்” தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வெட்கித்தலைகுனிந்து, பெயரோ முகவரியோ வெளியிடத் தெம்பும் திராணியுமற்ற சில திரைமறைவு தில்லுமுல்லுப்...
தமிழ் நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் – நீதிபதிகள் கேள்வி

தமிழ் நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் – நீதிபதிகள் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழ் நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் - நீதிபதிகள் கேள்வி தமிழ் வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என்றும், தமிழ் நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், தமிழ் வழியில் படித்து டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இதில் பலர் இடஒதுக்கீட்டை முறைகேடான வழியில் பெறுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி மருகி வருகின்றனர். தமி...
தமிழ் மொழியை தேசிய மொழியாக்க பாஜக கோரிக்கை வைக்குமா என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி

தமிழ் மொழியை தேசிய மொழியாக்க பாஜக கோரிக்கை வைக்குமா என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழ் மொழியை தேசிய மொழியாக்க பாஜக கோரிக்கை வைக்குமா என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா? என்று பதிவிட்டுள்ளார்....
இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் – ஸ்டாலின்

இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் – ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ​இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம், 11 பேர் உயிரைப் பறித்துள்ள நிலையில் – அது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டு – அது தொடர்பாக முடிவு எடுக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று எடப்பாடி அ.தி.மு.க. அரசு கேட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் இது தொடர்பாக வழக்குகள் ஏற்கனவே தொடரப்பட்டு – ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் எனக் கடந்த ஜூலை மாதமே அ.தி.மு.க. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அ.தி.மு.க. அரசு, உயர்நீதிமன்ற மதுர...
கைது செய்ய முயன்றபோது பெண் காவலரை  தாக்கியதாக அர்னாப் மீது வழக்குப்பதிவு

கைது செய்ய முயன்றபோது பெண் காவலரை தாக்கியதாக அர்னாப் மீது வழக்குப்பதிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மும்பை அலிபாக் பகுதியில் 2018ம் ஆண்டு இன்டீரியர் டிசைனர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாய் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். . அவர் தனது மரணத்துக்கு ரிபப்ளிக் டிவி முதன்மை செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி காரணம் என எழுதி வைத்துள்ளார். அதன் அடிப்படையில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர். அதற்காக அர்னாப் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினருக்கும் அர்னாப் கோஸ்வாமிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதில் பெண் காவல் அதிகாரி ஒருவரை அர்னாப் கோஸ்வாகி தாக்கியதாகக் கூறப்படுகிறது. மும்பையில் உள்ள வீட்டில் இருந்து தன்னை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றதாக அர்னாப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அர்னாப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பையில் உள்ள இல்லத்தில் சென்று கைது செய்ய முயன்றபோது பெண் காவலரை அர்னாப் தாக்கியதாக வழக...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மையை உளறிய சமந்தா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மையை உளறிய சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார். அதை தொடர்ந்து நான்காவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் ஒயில்ட் டாக் படப்படிப்பில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் நாகர்ஜுனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். நாகர்ஜுனா இல்லாத நேரத்தில் அவரின் மருமகளான சமந்தா பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் தொகுத்து வழங்கினார். ஒயில்ட் டாக் ஷூட்டிங் இன்னும் முடியாததால் இந்த வாரமும், அடுத்த வாரமும் சமந்தா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார் சமந்தா. மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை க...
வேல் யாத்திரை மூலம் சமூக அமைதியை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேட தமிழக பா.ஜ.க. முயற்சி செய்கிறது – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

வேல் யாத்திரை மூலம் சமூக அமைதியை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேட தமிழக பா.ஜ.க. முயற்சி செய்கிறது – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- முருகன் பெயரை வைத்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர், வேல் யாத்திரை நடத்தி தமிழகத்தில் ரத்தக் களரியை ஏற்படுத்த தூபம் போட்டு வருகிறார். கடந்த காலத்தில் சூலாயுதத்தினால் ஏற்பட்ட விளைவுகளைப் போல, வேல் யாத்திரை மூலம் சமூக அமைதியை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேட தமிழக பா.ஜ.க. முயற்சி செய்கிறது. இந்த முயற்சிகளை ஜனநாயக, மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள சக்திகள் முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மத்திய வேளாண் சட்டங்களினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதை மக்களிடையே பரப்புரை செய்வதற்காக 150 இடங்களில் இருந்து விவசாய டிராக்டர்களில் ஏர் கலப்பை பொறுத்தப்பட்ட ஊர்வலம் காங்கிரஸ் கட்சி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த ஊர்வலத்தின் மூலமாக வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக...
மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபர் கைது!

மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபர் கைது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த வெள்ளியன்று மாலை மசூதியின் தெற்கு நுழைவாயிலை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. இடையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சாலைத் தடுப்புகளையும் மோதித்தள்ளி விட்டு வேகமாகச் சென்ற அந்த கார் சுவற்றில் மோதி நின்றது கார் வேகமாகச் செல்வதைக் கண்டதும் அதனைப் பின் தொடர்ந்து ஓடிவந்த போலீசார் விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்தனர். அந்த நபர் அசாதாரண நிலையில் இருந்ததாகக் குறிப்பிட்ட போலீசார் அவர் குறித்த விவரங்களை வெளியிடவில்லை. மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்....
கட்டிய மனைவியை அடித்து நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்திய பாஜக அஸ்வத்தாமன் – வன்னியரசு பகீர் ஆதாரங்கள்

கட்டிய மனைவியை அடித்து நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்திய பாஜக அஸ்வத்தாமன் – வன்னியரசு பகீர் ஆதாரங்கள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கட்டிய மனைவியை நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்திய பாஜக அஸ்வத்தாமன்! தந்தி தொலைக்காட்சியில் இன்று வேல் யாத்திரை குறித்த விவாதத்தில் பங்கேற்றேன். பெண்களை இழிவுபடுத்திவிட்டார்கள் என தொடர்ந்து புளுகிக்கொண்டே வந்தார் அஸ்வத்தாமன் என்னும் பாஜக நபர். நான் சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்தேன். வைத்ததுமே பதற்றமாகி ஆட்டத்தை குலைக்கிற வகையில் குறுக்கும் நெடுக்குமாக கத்திக்கோண்டே இருந்தார். நெறியாளரும் எனக்கு வாய்ப்பை மறுத்தார். தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என கடந்து போனார். பெண்களுக்காக வழக்கு போடும் ஒரு நபர் தமது சொந்த வாழ்வில் பெண்ணை அதுவும் தான் கட்டிய மனைவியை நிர்வாணப்படுத்தி அடிப்பது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை இல்லையா? இது பெண்களுக்கான குரல்தானே! சரி என்ன குற்றச்சாட்டை முன்வைத்தேன் என்றால், 1.சொந்த மனைவியை நிர்வாணப்படுத்தி அடித்து வரதட்சணை கேட்ட வழக்கு 2. தம் ம...