ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதிலும் தொடர்ந்து பாடுபடுவோம் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதிலும் தொடர்ந்து பாடுபடுவோம் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நவ.1ஆம் தேதி தமிழ்நாடு தினம் தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதிலும் தொடர்ந்து பாடுபடுவோம் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தியா சுதந்திரம் பெற்று எட்டு ஆண்டு காலம் ஆகியும், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களை உள்ளடக்கி “மெட்ராஸ் பிரசிடென்சி” என்ற பெயரிலேயே செயல்பட்டு வந்தது. இதை மாற்றக்கோரி சென்னை பொட்டி ஸ்ரீராமுலு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் துறந்தார். இதையடுத்து 1953ஆம் ஆண்டு மத்திய அரசால் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, காமராசர் உள்படப் பலர் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாய் 1956ம் ஆண்டு நவ., முதல் தேதி கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் பிரிப்புக்குப் பின் இன்றைய மெட்ராஸ் ஸ்டேட் உருவானது. பின்னர்...
தமிழக முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும் இதயம் கனிந்த நன்றி – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு

தமிழக முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும் இதயம் கனிந்த நன்றி – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழக முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும் இதயம் கனிந்த நன்றி - தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை வரும் 10 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட வேண்டும் வணிக வளாகங்கள், மல்டிபிளக்ஸ் வளாகங்களில் உள்ள திரையரங்குகளுக்கும் 50% இருக்கை விதி பொருந்தும். இந்நிலையில் முன்னாள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை துணை தலைவருமான கலைப்புலி எஸ் தாணு, “தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மார்ச் முதல் அக்டோபர் வரை பல மாதங்களாக திரையரங்குகள் மூடிக்கிடந்தது. தற்போது நவம்பர் 10ம் தேதி முதல் 50% இருக்கைகளு...
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, ஊரடங்கு நீட்டிப்புகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழகத்தில் அமலில் இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் (அக்டோபர் 31) முடிவுக்கு வருகிறது.   இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் உள்ள தளர்வுகள்:- * 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் நவம்பர் 16-ம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது * பள்ளி, கல்லூரிகள், பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது * தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை வரும் 10 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வ...
சிலிண்டர்கள் வாங்க ஓடிபி கட்டாயம்!

சிலிண்டர்கள் வாங்க ஓடிபி கட்டாயம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சிலிண்டர் விநியோகம், ரயில்கள் நேர மாற்றம், எல்.பி.ஜி விலை நிர்ணயம், வங்கி சேவைக்கு கட்டணம் என பல்வேறு புதிய மாற்றங்கள் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இது சாமானியர்களின் வாழ்வில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இதைப் பற்றி அனைவரும் விரிவாக அறிந்திருக்க வேண்டியது அவசியம் எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் மூலம் பதிவு செய்வர். இதையடுத்து அவர்களின் வீடுகளுக்குச் சென்று சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். வழக்கமாக ரசீதில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சிலிண்டரை விநியோகம் செய்துவிட்டு ஊழியர்கள் கட்டணம் பெற்றுச் செல்வர். இனி OTP-ம் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரும் நவம்பர் ஒன்றாம் தேதி அமலுக்கு வருகிறது. முதல்கட்டமாக நாட்டின் 100 ஸ்மார்ட் நகரங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுற...
சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,080 ரூபாய்க்கு விற்பனை!

சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,080 ரூபாய்க்கு விற்பனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. மாதத்தின் முதல் நாள் (1ம் தேதி) 1 சவரன் தங்கம் 38,520க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை நிலவரம் நேற்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,734 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,140 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி 1 கிராம் 65.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது...
ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை கொடுப்பவர்களுக்கு “செக்” வைத்த RBI

ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை கொடுப்பவர்களுக்கு “செக்” வைத்த RBI

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பெரிய தொகைக்கான அதாவது ரூ.50 ஆயிரத்திற்கும்மேல் காசோலைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும்போது சம்மந்தப்பட்ட வங்கிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த காசோலை மூலம் பணம் பெறவோ, பணம் செலுத்தவோ முடியாது என்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி ஜனவரி 1 முதல் அறிமுகம் செய்யவுள்ளது. வணிகம், சொந்த செலவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பணம் பெறவோ, பணத்தை செலுத்தவோ வங்கிகளில் நாம் காசோலைகளை கொடுக்கிறோம். இந்த காசோலைகளை பணமாக மாற்றும்போது பணம் பெறும் நபரின் வங்கி கணக்கு எண், பெயர் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். இந்த நிலையில் கையெழுத்திட்ட காசோலைகள் தொலைந்து விட்டாலோ, தவற விட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அந்த காசோலை மூலம் வேறு நபர்கள் வங்களில் பணம் பெற வாய்ப்பு ஏற்பட்டு விடும். இதை தடுக்க காசோலை தொலைந்தவுடன் சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு தகவல் தெரிவித்து...
தீபாவளி வசூல்வேட்டை: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி சிக்கியது

தீபாவளி வசூல்வேட்டை: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி சிக்கியது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தீபாவளி வசூல்வேட்டை: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி சிக்கியது தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பண்டிகைகாலத்தையொட்டி, அரசு அலுவலகங்களில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, லஞ்சஒழிப்பு காவல்துறையினர், பல அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, கடந்த ஒரு மாதத்தில் சுமார் 35 அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்களிடம் இருந்து கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பணம் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், . சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த சோ...
இனப்பெருக்கத்திற்காக ஜெர்மன் நாட்டில் இருந்து 105 காளை மாடுகளை இறக்குமதி செய்த தமிழகஅரசு!

இனப்பெருக்கத்திற்காக ஜெர்மன் நாட்டில் இருந்து 105 காளை மாடுகளை இறக்குமதி செய்த தமிழகஅரசு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
இனப்பெருக்கத்திற்காக ஜெர்மன் நாட்டில் இருந்து 105 காளை மாடுகளை தமிழகஅரசு இறக்குமதி இனப்பெருக்கத்திற்காக ஜெர்மன் நாட்டில் இருந்து 105 காளை மாடுகளை தமிழகஅரசு இறக்குமதி செய்துள்ளது. இந்த காளைகள் விமான நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் பால்உற்பத்தியை பெருக்கும் வகையிலும், மாடுகளிடையே இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையிலும் வெளிநாடுகளில் இருந்து காளைகள், பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் இருந்து ஜெர்சி இன மாடுகள் விமானம் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். இதற்கான பணிகளை தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை தேசிய பால்வள அபிவிருத்தி வாரியத்தின் அனுமதியுடன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. அதன்படி, தற்போது இனப்பெருக்கத்திற்காக 105 ஜ...
கமிஷனுக்காக விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்துமே தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

கமிஷனுக்காக விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்துமே தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கமிஷனுக்காக விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்துமே தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை   நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம், எடப்பாடி அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும் தலைவிரித்தாடும் ஊழலை அம்பலப்படுத்தி இருக்கிறது. கமிஷனுக்காக விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்துமே தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்பட்டு - டெண்டர் முறைகேடுகள் தொடர்பான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். அதிலிருந்து அ.தி.மு.க. அமைச்சர்களோ, துணைபோகும் அதிகாரிகளோ தப்ப முடியாது" என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: ...
வாக்குகளில் மோசடி செய்துதான் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் டிரம்ப் – இந்தியா ஜோதிடர் கணிப்பு

வாக்குகளில் மோசடி செய்துதான் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் டிரம்ப் – இந்தியா ஜோதிடர் கணிப்பு

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  மீண்டும் வெற்றி பெற்றாலும் வாக்குகளில் மோசடி செய்துதான் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் டிரம்ப் - இந்தியா ஜோதிடர் கணிப்பு அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பிடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க மக்களின் வாக்குகளை கவர்வதற்காக ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் தீவிர இறுதி கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து உலக அளவில் பெரும் விவாதங்களும், பல கோடி ரூபாய் அளவில் சூதாட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் அத...