சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

செல்வாக்கு சரிந்து போனதை 5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.,வுக்கு உணர்த்துகிறது – ரஜினி

செல்வாக்கு சரிந்து போனதை 5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.,வுக்கு உணர்த்துகிறது – ரஜினி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த்-ஐ சந்தித்த செய்தியாளர்கள்  5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவரது கருத்தை அறிய முயன்றனர். அவர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதை காட்டுவதாக தெரிவித்தார். இந்த முடிவுகள் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்....
விஜய் மல்லையாவை நாடு கடத்த பல மாதங்கள் ஆகலாம் – லண்டன் சட்ட நிறுவனம் கருத்து

விஜய் மல்லையாவை நாடு கடத்த பல மாதங்கள் ஆகலாம் – லண்டன் சட்ட நிறுவனம் கருத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு பற்றி லண்டன் நகரில் உள்ள ஜைவாலா என்ற சட்ட நிறுவனத்தின் நிறுவனர் சாரோஷ் ஜைவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது. எனினும் அதுவரை அவரை கைது செய்ய முடியாது. அவர் தொடர்ந்து ஜாமீனிலேயே இருப்பார். ஐகோர்ட்டு உத்தரவு விஜய் மல்லையாவுக்கு எதிராக வந்தாலும் கூட அவரால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியும். அப்போது இந்த வழக்கு விசாரணை மேலும் 6 மாதங்கள் வரை நீடிக்கும். எனவே விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு மேலும் பல மாதங்கள் வரை ஆகலாம்” என்றார். இந்தநிலையில் தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டில் விஜய் மல்லையா மேல் முறையீடு செய்வார் என்று கூறப்படுகிறது....
உர்ஜித் படேல் ராஜினாமா; அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் – ரகுராம் ராஜன்

உர்ஜித் படேல் ராஜினாமா; அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் – ரகுராம் ராஜன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ரிசர்வ் வங்கி கவனர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உரசல் நிலவி வந்த நிலையில் உர்ஜித் படேல் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில், உர்ஜித் படேல் ராஜினாமா எதிர்ப்பை பதிவு செய்வதாகும். ராஜினாமா பற்றி அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அருண் ஜெட்லி மத்திய வங்கியை விமர்சனம் செய்த நிலையில் உர்ஜித் படேல் ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்.பி.ஐ. கவர்னர் உஜ்ஜிதே படேல் பதவி விலகல் பெரும் கவலைக்குரிய விஷயமாகும். அரசு அதிகாரி தன்னுடைய ராஜினாமாவை அறிவிப்பது என்பது எதிர்ப்பை பதிவு செய்யும் விஷயமாகும். அவர்கள் தீர்க்க முடியாத சூழ்நிலையை எதிர்க்கொள்ளும் நிலையில் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்...
சர்கார் பட சர்ச்சை காட்சி – ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சர்கார் பட சர்ச்சை காட்சி – ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.இப்படம் வெளியாகும் முன்பே கதை பிரச்சனையில் சிக்கியது. ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு இப்படம் வெளியானது. அதன்பின், இப்படத்தில் அரசின் இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றதால் பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் அரசின் இலவசப் பொருட்களை தவறாக விமர்சித்துள்ளதாக புகார் அளித்திருந்தார். தேவராஜன் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் அரசின் இலவச பொருட்களை இனி விமர்சிக்கமாட்டேன் என்றும் ஏற்கனவே சர்கார் படத...
நாட்டு மக்களை ஒரு ராத்திரியில் திடீரென நடுத்தெருவில் நிற்க வைத்த பெருமைக்குரிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் திடீரென ராஜினாமா

நாட்டு மக்களை ஒரு ராத்திரியில் திடீரென நடுத்தெருவில் நிற்க வைத்த பெருமைக்குரிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் திடீரென ராஜினாமா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து மோதல் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா முடிவை தேர்வு செய்ததாகவும் ரிசர்வ் வங்கியின் ஆளுனராக பதவி வகித்ததை பெருமிதமாக நினைப்பதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களை ஒரு ராத்திரியில் திடீரென நடுத்தெருவில் நிற்க வைத்த பெருமைக்குரிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் திடீரென பதவியை ராஜினாமா செய்தார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம்ராஜன் திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதில் உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டார். மத்திய மோடி அரசின் இந்த நடவடிக்கை அப்போதே பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் திடீரென செப்டம்பர் 8ம் தேதி ...
கேள்விக்கு பதில் சொன்னால் பணம் இயக்குனர் அறிமுகப்படுத்திய விளையாட்டு!

கேள்விக்கு பதில் சொன்னால் பணம் இயக்குனர் அறிமுகப்படுத்திய விளையாட்டு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என்று பன்முகம் கொண்டவர் சுரேஷ் சந்திர மேனன். நடிகை ரேவதியின் முன்னாள் கணவர்.திரைப்படம் மற்றும் சீரியல் தயாரிப்பு, டாக்குமெண்டரி தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு என்று கடந்த 40 வருடங்களாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் சுரேஷ் சந்திர மேனன், தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘ஜுங்கா’ ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது ‘காளிதாஸ்’, ’பொன் மாணிக்கவேல்’, ‘அடங்கமறு’, ‘லூசிஃபர்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். சினிமாவின் பல்வேறு துறைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் சுரேஷ் சந்திர மேனன், சினிமாவை தாண்டி பல்வேறு சமூக வளர்ச்சி திட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். சென்னையின் முக்கிய பகுதிகளில் டிராபிக்கை கட்டுப்படுத்துவதற்கான சில யோசனைகளை காவல்துறைக்கு வழங்கி வ...
லண்டனில் இருந்து நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா? நாளை தீர்ப்பு!

லண்டனில் இருந்து நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா? நாளை தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வங்கிகளில் ரூ 9,000 கோடி கடன் பெற்று தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவை லண்டனிலிருந்து நாடு கடத்தும் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது. இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் ரூ 9,000 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த கடன் மோசடி தொடர்பாக சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்...
அதிமுகவில் இணைந்த நடிகர் கஞ்சா கருப்பு..!

அதிமுகவில் இணைந்த நடிகர் கஞ்சா கருப்பு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் தன்னை இன்று இணைத்துக் கொண்டார்.இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமியை அவரது வீட்டில் நடிகர் கஞ்சா கருப்பு இன்று சந்தித்தார். அப்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் என தெரிவித்துள்ளது....
டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ந்தேதி (ஞாயிறு) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். அன்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திலும் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல் மந்திரி பிணராயி விஜயன், புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்த விழா அழைப்பிதழை சோனியா காந்தியிடம் நேரில் வழங்குவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். சோனியா காந்திக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவரது வீட்டுக்கு நேரில் சென்று முக ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்...