நீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் – மாணவர்களுக்கு இயக்குனர் அமீர் வேண்டுகோள்
*நீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் - மாணவர்களுக்கு இயக்குனர் அமீர் வேண்டுகோள்*
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மே மாதம் 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்வை நடத்த வேண்டாம் என சில மாநில அரசுகள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரை பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தேர்வு நடத்தியே தீருவோம் என்ற முனைப்பில் மத்திய அரசு தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் அமீர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருக...









