கற்பழிப்பு பற்றி யாரிடமும் சொல்ல கூடாது மாணவியின் தந்தையை மிரட்டிய DSP..!
கற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி
எனது மகள் கற்பழிப்பு சம்பவம் நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார் என்று மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
மாணவியின் தந்தை அண்ணாமலை கூறியதாவது:-
எனது மகள் தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று நான் ஆடு மேய்க்க சென்று விட்டேன். எனது மனைவி தோட்டத்து வேலைக்காக சென்று விட்டார். வீட்டில் என் மகள் மட்டும் தனியாக இருந்தார். அவர் மலம் கழிக்க வீட்டில் இருந்து ஒரு பர்லாங் தூரத்தில் உள்ள காட்டு பகுதிக்கு சென்றார். அப்போது சதீஸ், ரமேஷ் ஆகிய 2 வாலிபர்களும் என் மகளை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்ட போலீசில் நான் புகார் செய்தேன். ஆனால் போலீசார் புகார் மனுவை வாங்க ம...









