செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

கடல் நீரை மேகம் உறுஞ்சும் அதிசயம் அமெரிக்காவில்…!

கடல் நீரை மேகம் உறுஞ்சும் அதிசயம் அமெரிக்காவில்…!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய காட்சி வெளியாகி உள்ளது. லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா பகுதிகளில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்தவர்கள் கடலில் பேரதிசயத்தைக் கண்டனர். ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்று இந்தக் காட்சி இருந்ததாக இதனைப் படம் பிடித்தவர்கள் தெரிவித்துள்ளனர்....
வாகன ஆவணஙகளையும்,  டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கவும் டிசம்பர் 31வரை கால அவகாசம்

வாகன ஆவணஙகளையும்,  டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கவும் டிசம்பர் 31வரை கால அவகாசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வாகன ஆவணஙகளையும்,  டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கவும் டிசம்பர் 31வரை கால அவகாசம் வழஙகி உள்ளது மத்திய அரசு!   கொரோனா பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து,  பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பிறகு காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை  மத்திய  அரசு நீட்டித்து வருகிறது.  செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதிவரை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்களில் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கொரோனா  பெருந்தொற்று சூழல் இன்னும் முழுமையாக நீங்காததால், இதை கருத்தில் கொண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது....
அதானி குழுமத்திற்கு விமான நிலையம் குத்தகை விடும் மத்திய அரசுக்கு எதிராக கேரளாவில் தீர்மானம்!

அதானி குழுமத்திற்கு விமான நிலையம் குத்தகை விடும் மத்திய அரசுக்கு எதிராக கேரளாவில் தீர்மானம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கேரள சட்டசபையில் தீர்மானம். திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்கள் அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுத்தது. அந்த முடிவுக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விட கூடாது என வலியுறுத்தி நேற்று கேரளா முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சி அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று கேரள விமானநிலையங்களை, குத்தகைக்கு விடும் மத்திய அரசின் தீர்மானத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் கேரள முதல்வரால் முன் வைக்கப்பட்ட தீர்மானம் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது....
மயில்களுக்கு உணவளித்த பிரதமர் மோடி!

மயில்களுக்கு உணவளித்த பிரதமர் மோடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  தேசிய பறவையான மயிலுடன் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சுமார் 1.47 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது பக்கத்தில் பிரதமர் வெளியிட்டார். டில்லி லோக் கல்யாண் மார்க் வீட்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவுடன், 'விலைமதிப்பற்ற தருணங்கள்' என்ற தலைப்பில் ஹிந்தியில் எழுதிய கவிதை ஒன்றையும் மோடி பகிர்ந்துள்ளார்....
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி குற்றவாளியா செப்.30ல் தெரியும்!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி குற்றவாளியா செப்.30ல் தெரியும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி குற்றவாளியா செப்.30ல் தெரியும்!   அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறி, கர சேவகர்கள் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அதை இடித்து தரை மட்டமாக்கினர். இது தொடர்பாக பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங், வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா உள்ளிட்டவர்கள் மீது உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் குற்ற வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் தனிக்கோர்ட்டு விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் 8-ந் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 32 பேரிடம் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 313-ன் கீழான விசாரணையை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நடத்தி முடித்து விட்டது....
ரூ.2.5 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் கண் கண்ணாடி!

ரூ.2.5 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் கண் கண்ணாடி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    ரூ.2.5 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் கண் கண்ணாடி! மகாத்மா காந்தி வட்ட வடிவ மூக்கு கண்ணாடி அணிவது வழக்கம். அவரது, தங்க பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி ஒன்று இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் ஹன்ஹாம் என்ற இடத்தில் உள்ள ஈஸ்ட் பிரிஸ்டல் ஆக்சன்ஸ் ஏல மையத்தில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. இந்த கண்ணாடி 10 ஆயிரம் பவுண்டு முதல் 15 ஆயிரம் பவுண்டு வரை ஏலம் போகலாம் என்று அந்த நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் அந்த மூக்கு கண்ணாடி 2 லட்சத்து 60 ஆயிரம் பவுண்டுக்கு (சுமார் ரூ.2 கோடியே 55 லட்சம்) ஏலம் போய் உள்ளது. அபூர்வமான இந்த மூக்கு கண்ணாடி நம்பமுடியாத விலைக்கு விற்பனையாகி இருப்பதாக அதை ஏலம் விட்ட ஈஸ்ட் பிரிஸ்டல் ஆக்சன்ஸ் ஏல மையத்தைச் சேர்ந்த ஆன்டி ஸ்டோவ் தெரிவித்தார். இங்கிலாந்தில் உள்ள மங்கோட்ஸ்பீல்டு என்ற இடத்த...
வைரஸ் பீதியால் கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் நடத்த திட்டம்!

வைரஸ் பீதியால் கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் நடத்த திட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வைரஸ் பீதியால் கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் நடத்த திட்டம்! கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தை நடத்தலாமா என சபாநாயகர் தனபால் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டனர். கொரோனா அச்சுறுத்தலால் இடநெருக்கடி காரணமாக மாற்று இடத்தில் சட்டசபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 24க்குள...
மாரியப்பன் தங்கவேலுவுக்கு கேல் ரத்னா விருது!

மாரியப்பன் தங்கவேலுவுக்கு கேல் ரத்னா விருது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் போன்ற விருதுகள் வழங்கப்படும். அதன்படி இந்தாண்டு விருது வாங்குவோர் பட்டியலில் 500க்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் மற்றும் கேல் ரத்னா விருது பெறுவோரின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய விளையாட்டு வீரர்கள் 5 பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவித்துள்ளது. இந்த விருது பெறுவோரில், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக தடகள வீரர் மாரியப்பனுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது...
ஸ்ரீசைலம் அணையை ஒட்டி உள்ள நீர்மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து

ஸ்ரீசைலம் அணையை ஒட்டி உள்ள நீர்மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையை ஒட்டி உள்ள நீர்மின் நிலையத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். தீ சூழ்ந்ததால் சில ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் 6 பேருக்கு மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் 9 பேர் மின் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிய உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். இதுபற்றி தெலுங்கானா அமைச்சர் ஜி.ஜகதீஷ்வர் ரெட்டி கூறுகையில் ‘நேற்று இரவு ...