ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும்… சினிமா பிரபலங்களும்…

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும்… சினிமா பிரபலங்களும்…

HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும்... சினிமா பிரபலங்களும்... கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சினிமா நடிகைகள் பலரும் கிறிஸ்துமஸ் விழாவை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். சில நடிகைகள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் கிறிஸ்துமஸ் கருப்பொருளில் உடை அணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாடி அந்த படங்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகையாக அறிமுகம் ஆனவர் ஷாலு‌ஷம்மு. இரண்டாம் குத்து படத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்துக்கு மாறினார். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பச்சை நிற கிளிட்டர் உடை அணிந்து தலையில் சாண்டா தொப்பி மாட்டிக்கொண்டு அழகாக போஸ் கொடுத்துள்ளார். சிவாவுடன் ‘தமிழ்ப் படம்-2’ ஹிப்ஹாப் ஆதியுடன் ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யாமேனன். இவர் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்ததோடு தனது செல்ல பிராணிக்கும் சாண்டா...
ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது – அப்பல்லோ நிர்வாகம்

ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது – அப்பல்லோ நிர்வாகம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, ‘கொரோனா குறித்து எந்த அறிகுறியும் இல்லை. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தற்போது மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளது...
வரும் தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை – மு.க.அழகிரி

வரும் தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை – மு.க.அழகிரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி அவர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளதால், அவர், தி.மு.க., வில் சேர்க்கப்படுவாரா அல்லது புதுக்கட்சி துவக்கி, நடிகர் ரஜினியுடன் கூட்டணி அமைப்பாரா என, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். மேலும், மு.க.அழகிரி பாஜகவில் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அழகிரியை, மீண்டும் தி.மு.க.,வில் சேர்க்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் விரும்புவதாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில், மு.க.அழகிரி சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்து அவரது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, எனது எதிர்கால அரசியல் திட்டம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து எனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஜனவரி 3ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளேன். அங்கு எனது...
ஆஸ்திரேலியா தேவாலயத்தில் தமிழக வீரர் நடராஜன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.!

ஆஸ்திரேலியா தேவாலயத்தில் தமிழக வீரர் நடராஜன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
ஆஸ்திரேலியா தேவாலயத்தில் தமிழக வீரர் நடராஜன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.! இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடிய சேலம் - சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் விளையாடி, கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் நடராஜன் ஈர்த்தார். ஐபிஎல் தொடரில் தன்னுடைய அசத்தலான பந்துவீச்சால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடராஜனுக்கு ஆஷிரேலியாவுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் முக்கியமான இரண்டு விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். பின்னர், டி20 தொடரின் 3 போட்டிகளிலும் விளையாடி 6 விக்கெட்டை வீழ்த்தி T20 தொடரை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். T20 தொடரை வென்ற பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடரை வென்றதற்கான கோப்பையையும், ஹர்திக் பாண்யா தொடர் நாயகன் விருது வென்றதற்கான கோப்பையையும் நடராஜன்...
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  உலகம் முழுவதும் இன்று இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்றைய தமது கிறிஸ்துமஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக  வாட்டிகனில் கிறிஸ்துமஸ் விழா எளிமையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற நள்ளிரவு பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள்  நடத்தப்பட்டு முகக்கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். உலக மக்களின் பாவங்கள் நீங்க தன்னுடலை சிலுவையில் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான இன்று அவர் பிறந்த பெத்லஹேம் நகரில் கிறிஸ்மஸ் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25 ஆம் திகதி உலகம்...
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறது காங்கிரஸ்!

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறது காங்கிரஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட 5 மாநிலங்களில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்காளத்தில் 1977ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 35 ஆண்டுகள் இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி ஆட்சியை வீழ்த்தி திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியை எப்படியும் வீழ்த்தி பாஜக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக இடதுசாரிகளும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சுகள் எழுந்துள்ளன. 2016ம் ஆண்டு நடந்த சட்ட...
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக சிப்காட் தொழிற் பூங்காக்களில் 2.63 லட்சம் மரக்கன்றுகள்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக சிப்காட் தொழிற் பூங்காக்களில் 2.63 லட்சம் மரக்கன்றுகள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக சிப்காட் தொழிற் பூங்காக்களில் ரூ.10.36 கோடியில் 2.63 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் தொழில் பூங்காக்கள் உள்ள இடங்களை மேம்படுத்தும் வகையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அரசுக்கு துணை நின்று, பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றது. தமிழகத்தில் 33,776 ஏக்கர் நிலப்பரப்பளவில், 15 மாவட்டங்களில், 7 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட 23 தொழில் பூங்காக்களுடன் தொழில் வளர்ச்சி நிறுவனங்களில் மிகப்பெரும் நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு, ஜூலை மாதம், அனைத்து தொழில் பூங்காக்களிலும் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை சரிவர பேணி, திரும்பும் திசையெல்லாம் பச்சைப்பசேலென செடிகளும், செடிகள் வளர்ந்த நிலை...
மீண்டும் புதிய கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் இங்கிலாந்தை தனிமைப்படுத்தியுள்ள உலக நாடுகள்!

மீண்டும் புதிய கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் இங்கிலாந்தை தனிமைப்படுத்தியுள்ள உலக நாடுகள்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
  உலக நாடுகளை மீண்டும் புதிய கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் உலக நாடுகள் இங்கிலாந்தை தனிமைப்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் உலக நாடுகளே ஸ்தம்பித்து போனது. ஒவ்வொரு நாடுகளிலம் மக்கள் கொரோனாவால் பாதிப்பட்டு பல இன்னல்களை சந்தித்தனர். மக்களை பாதிக்கமால் இருக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொருளாதாரம், வர்த்தகம் கடும் பாதிப்படைந்தன. கடும் நடவடிக்கை மற்றும் கொரோனா தடுப்பில் தீவிரம் காட்டி வந்ததால் கொரோனா வீரியம் குறைய ஆரம்பித்தது. 2020ஆம் ஆண்டு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மீண்டும் புதிய வகை கொரோனா இங்கிலாந்து நாட்டில் பரவியது. புதிய வகை கொரோனா தொற்று இங்கிலாந்து பரவ தொடங்கியிருப்பது உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொரோனா தொற்று தங்கள் நாட்டில் பரவாமல் தடுக்க இங்கிலாந்தை தனிமைப்படுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுத்துள...
இங்கிலாந்தில் இருந்து கோவைக்கு வந்து தனிமைப் படுத்தப்பட்ட 133 பயணிகள்!

இங்கிலாந்தில் இருந்து கோவைக்கு வந்து தனிமைப் படுத்தப்பட்ட 133 பயணிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இங்கிலாந்து நாட்டில் இருந்து கோவைக்கு வந்த 133 தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் பரிணாம மாற்றம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியது. இதனைத்தொடர்ந்து இந்தியாவில் வரும் 31-ம் தேதி வரை இங்கிலாந்திற்கான விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு கடந்த நவம்பர் மாதம் முதல் வந்த பயணிகளின் விவரங்கள் கண்டறியப்பட்டு, அவர்களை கண்காணித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் கடந்த நவம...
இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா!

இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் இருந்து உலக நாடுகளே திக்குமுக்காடி தற்போது கொரோனா பரவல் குறைந்தது என பெருமூச்சு விட்டிருந்த நிலையில், மீண்டும் புதிய வகை கொரோனா பிரிட்டன் நாட்டில் பரவியுள்ளது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கு இந்தியா தடை விதித்தது. இதே போன்று பல நாடுகளும் இங்கிலாந்துடன் விமான சேவையை ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து டெல்லி விமானநிலையத்திற்கு வந்த 6 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்களுடன் பயணித்த 50 பயணிகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உறு...