ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா? மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா? மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதற்குரிய நிதியை ஒதுக்கி, உடனடியாக கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அரசின் மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் அரசுக்கு ஆர்வமில்லை, என்றே தெரியவருகிறது. மேலும் 2019-ம் ஆண்டு ஜனவரில் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை. வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு 2 மாதங்களாகியும், இதுவரை அரசிடமிருந்து முறையாக பதில் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் அமையும் என்று அறிவித்து விட்டு தாமதம் செய்வது ஏன்? மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா? எ...
விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்- மு.க.ஸ்டாலின்

விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்- மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் நிறைவு பெற்றது. முன்னதாக பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்த உண்ணாவிரத போராட்டம் அனுமதியில்லாமல் தடையை மீறி நடைபெறுகிறது. தமிழக அரசு என்ன வழக்கு போட்டாலும் அதனை எதிர்கொள்ள நாங்க தயாராக உள்ளோம். சிறைக்கு போகும் ஆர்வத்துடன் போராட்டத்தை நடத்தினேன்.  “விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. 1957ல் கருணாநிதியின் முதல் சட்டமன்ற பேச்சே விவசாயிகள் பற்றித்தான்; நான் அவருடைய மகன். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார். யாரை பாதுகாக்க வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். போராடும் விவசாயிகளை அந்நியக் கைக்கூலிகள், தீவிரவாதிகள் என மத்திய...
நாளை பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாளை பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்குகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தேர்தலிலும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை கரிய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது வழக்கம். அதன்படி நாளை (18-ந் தேதி) காலை 9 மணிக்கு பெரிய சோரகை செல்கிறார். அங்கு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த கரிய பெருமாள் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட திரளானோர் பங்கேற்கிறார்கள். முன்னதாக அவர் தேர்தல் பிரசாரம் செய்யும் சிறப்பு வாகனம் அந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீரங்கனூர், இருப்பா...
டார்ச் லைட் சின்னம் கோர்ட் படியேறிய கமல் கட்சி!

டார்ச் லைட் சின்னம் கோர்ட் படியேறிய கமல் கட்சி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
டார்ச் லைட் சின்னம் கோர்ட் படியேறிய கமல் கட்சி! இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கியது. கமல் ஹாசன் மக்களவை தேர்தலில்போது பயன்படுத்தி பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்க கேட்டிருந்தார். ஆனால், புதுச்சேரிக்கு மட்டும் மக்கள் நீதி மையத்திற்கு பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், அந்த சின்னத்தை தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் அதிருப்தி அடைந்துள்ளார். எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி பேட்டரி டார்ச் சின்னத்தை விட்டுகொடுக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பேட்டரி டார்ச் சின்னத்தை எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி பயன்படுத்த தடைகோரி சென்னை உயிர்நீதிமன்ற்தில் மக்கள் நீதி மய்யம் ரிட் மனு தாக்கல். மேலும், இதுதொடர்பாக தே...
திமுக பொதுச் செயலாளர் துரை முருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

திமுக பொதுச் செயலாளர் துரை முருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் மூச்சுத்திணறல் காரணமாகத் திருச்சி மாருதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுத் தலைவராக உள்ளார். அவரது தலைமையில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக்கூட்டம் திருச்சியில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கணக்குக் குழு ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர், திருச்சி கட்டுமானப்பணி, மத்தியச் சிறை, வேளாண் கல்லூரி உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நடந்த சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்திற்குப் பின்னர், துரைமுருகன் மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் மாலை சென்னை செல்வதாகத் திட்டமிட்டிருந்தார். ஆனால், திண்டுக்கல்லில் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக் கோளாறு...
லட்சக்கணக்கான ஆபாச வீடியோக்களை நீக்கிய போர்ன் ஹப் இணையதளம்!

லட்சக்கணக்கான ஆபாச வீடியோக்களை நீக்கிய போர்ன் ஹப் இணையதளம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
இந்தியாவில் பாலியல் சம்பந்தமான வெப்சைட்களை பார்ப்பதற்கு கடந்த 2018 ல் அரசு தடை விதித்தது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்தன. எனினும் அவற்றிற்கான தடை இன்று வரை தொடர்கிறது. பாலியல் வீடீயோக்களை அதிகளவில் பார்ப்பவர்கள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் இருந்தது. பல்வேறு சமூக பாலியல் குற்றங்களை தவிர்க்கும் பொருட்டும், சிறுகுழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்கும் நோக்கத்துடனும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. ஆபாச வீடியோக்கள் பல கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் மற்றும் பாலியல் குற்றங்களுக்கும் காரணமாக இருக்கின்றது என்பது நமக்கு நன்றாக தெரியும். எனவே அரசு அத்தடையை விதித்தது. உலக அளவில் பாலியல் தளங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்த போர்ன் ஹப் உட்பட 827 வெப்சைட்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன இந்நிலையில் போர்ன் ஹப் அதன் வெப்சைட்டில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான ஆபாச...
தமிழகத்தில் மின்கட்டணம் உயர வாய்ப்புள்ளதா?

தமிழகத்தில் மின்கட்டணம் உயர வாய்ப்புள்ளதா?

HOME SLIDER, NEWS, செய்திகள்
  நடப்பு நிதியாண்டிற்கான மின்கட்டணத்தை முடிவு செய்யும் மனுவை மின்வாரியம், மின்சாரம் ஒழுங்குமுறை வாரியத்திடம் சமர்ப்பிக்கவில்லை.  ஆதலால் நடப்பு நிதியாண்டில் மின் கட்டணம் உயர வாய்ப்பில்லாததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டுக்கான நிதியாண்டில் மின்கட்டணம் உயர்வு போன்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும்.  இதனை மின்சாரம் ஒழுங்கு முறை வாரியம் வெளியிடும்.  அதுமட்டுமல்லாமல் மின்வாரியத்தின் செயல்பாட்டையும் கண்காணித்து வருகின்றது. ஒவ்வரு ஆண்டும் மின் வாரியம் தனது வரவு,  செலவு, தங்களது தேவை, மின்கட்டணம் தேர்வு போன்ற  மனுவை மின்சாரம் ஒழுங்கு வாரியத்திடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் கொடுத்து வருகின்றனர். அதனை ஆராய்ந்து மின்சாரம் ஒழுங்கு  வாரியம் வரவை விட செலவு கூடினால் மின்கட்டணத்தை அதிகரித்து அதனை அமல்படுத்த மக்களிடம் கருத்து கேட்டு வந்தனர்.  அதன் பின் ...
பிஎஸ்எல்வி C-50 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

பிஎஸ்எல்வி C-50 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோளை ஏவ ஏற்பாடு செய்யப்பட்டது. ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பிற்பகல் 2.41 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 25 மணிநேர கவுண்ட்டவுன் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி இன்று மாலை 3.41 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டின் நான்காவது கட்டத்திலிருந்து செயற்கைக்கோள் வெற்றிகரமாக பிரிந்து அதன் சுற்றுப்பாதையில் நுழைந்தது. கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்...
தலைநகர் டெல்லியில் திடீர் நிலநடுக்கம்!

தலைநகர் டெல்லியில் திடீர் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தலைநகர் புதுடெல்லியின் பல்வேறு பகுதிகளில் இரவு 12 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.   ரிக்டர் அளவுகோளில் 4.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள அல்வார் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. இதனால் பதற்றமடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும், நிலநடுக்கத்தின் அளவு சற்று குறைவாக இருந்ததால் கட்டிடங்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் இன்று 23 ஆவது ந...
முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது- கமல்

முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது- கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி என கமல் ஹாசன் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு, முதலமைச்சர் எடப்படி பழனிசாமி, பிக் பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? பிக் பாஸ் பார்த்தால் ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது என கமல் ஹாசனை தாக்கி கூறியிருந்தார். இந்த நிலையில் முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என கமல் ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். https://twitter.com/ikamalhaasan/status/1339560788902612992?s=20...