நடிகர் சங்கத்துக்கு உதவுங்கள் முன்னணி நடிகர்,நடிகைகளுக்கு பூச்சி முருகன் வேண்டுகோள்!
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண நிதி உதவி அளிக்க வேண்டும் என முன்னணி நடிகர், நடிகைகளுக்கு நடிகர் சங்க அறக்கட்டளை முன்னாள் உறுப்பினர் பூச்சி முருகன் வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:
முன்னணி நடிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்...
கரோனா வைரஸ் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் திடீர் ஊரடங்கால் சினிமாத்துறையே முடங்கி கிடக்கிறது. இந்த திடீர் முடக்கத்தால் திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் அன்றாட சம்பளத்துக்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தான். இவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஃபெஃப்சி சார்பில் திரை பிரபலங்களிடம் உதவி கேட்டு வாங்கி உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல நமது சங்க உறுப்பினர்களுக்க...









