சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

HOME SLIDER, NEWS, செய்திகள்
  ஆயுத படைகளில் ஒன்றான இந்திய விமானப்படையில் 80 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு ஏர்போர்ஸ் அப்ரண்டிஸ் பயிற்சி மூலம் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதுபற்றிய விளம்பரம் www.indianairforce.nic.in என்ற வலைதளத்தில் வெளிவந்துள்ளது இந்திய விமானப்படையில் பயிற்சி ஆட்சேர்ப்பு 2022: காலியிடங்களின் எண்ணிக்கை:  மெஷினிஸ்ட்: 04 இடங்கள் ஷிட் மெட்டல்: 07 இடங்கள் வெல்டர் கேஸ் & எலெக்ட்: 06 இடங்கள் மெக்கானிக் ரேடியோ ரேடார் விமானம்: 09 இடங்கள் தச்சர்: 03 இடங்கள் எலக்ட்ரீசியன் ஏர்கிராப்ட்: 14 இடங்கள் பெயிண்டர் ஜெனரல்: 01 இடங்கள் பிட்டர்: 26 இடங்கள் கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் 10வது அல்லது 12வது இடைநிலை வகுப்பு தேர்ச்சி மற்றும்  50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இதுதவிர, ஜடிஜ-யில் தேர்ச்சி மற்றும் 65% மதிப்பெண்களுடன் முடித்திருக்க ...
ஆப்கானிஸ்தானில் திடீரென நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் திடீரென நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் இருந்து கிழக்கு வடகிழக்கே 164 கிலோமீட்டர் தூதரத்தில் நேற்று இரவு 11.34 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது 140 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் பொருள்சேதம், உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது...
ராகுல்காந்தி குறித்த அவதூறு பேச்சால் அசாம் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள் – பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை!

ராகுல்காந்தி குறித்த அவதூறு பேச்சால் அசாம் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள் – பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  ராகுல்காந்தி குறித்த அவதூறு பேச்சால் அசாம் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள் - பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை! உத்தரகாண்டில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நேற்று முன் தினம் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஹிமந்தா, காங்கிரஸ் மீதும் ராகுல் காந்தி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிகல் தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?. நமது ராணுவ வீரர்கள் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பார்கள். ஆதாரம் கேட்டு கேள்வி எழுப்ப உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?’ என்றார். ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் கருத்துக்கள் அரசியலில் பெரும...
பாஜக ஆட்சியை தக்க வைக்க முட்டாள்தனமாக பேசி வரும் அசாம் முதல்வர்!

பாஜக ஆட்சியை தக்க வைக்க முட்டாள்தனமாக பேசி வரும் அசாம் முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று முன் தினம் உத்தரகாண்ட்டில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிகல் தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?. ...
பெண்களுடன் பழக விரும்புகிறீர்களா? பேப்பரில் விளம்பரம் கொடுத்து அரை கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிய பெண்..!

பெண்களுடன் பழக விரும்புகிறீர்களா? பேப்பரில் விளம்பரம் கொடுத்து அரை கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிய பெண்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மராட்டிய மாநிலத்தில் நண்பர்கள் கிளப் என்ற பெயரில் விளம்பரம் செய்து ரூ. 60 லட்சம் ஏமாற்றியதாக நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் 28 வயது பெண் ஒருவரை புனே போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் 28 வயது பெண் ஒருவர் நாளிதழில் பணக்கார பெண்களுடன் டேட்டிங் செல்வதற்காக நண்பர்கள் கிளப் என்ற பெயரில் விளம்பரம் செய்துள்ளார். விளம்பரத்தை பார்த்த நபர், அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அந்தப் பெண் தொடக்கத்தில் பாதுகாப்பிற்காக ரூ.2 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பலமுறை அவரிடமிருந்து பணம் பெற்றுள்ளார். இதுவரை சுமார் அரை கோடிக்கு மேல் அதாவது ரூ.60 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார். இதையடுத்து அந்த நபர் போலீசில் புகாரளித்துள்ளார். தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் வங்கி கணக்கு விவரங்களின் அடிப்படையில், அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அந்தப் பெண்...
மண மேடையில் மணப்பெண் திடீர் மரணம்! துக்கத்திலும் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்!!

மண மேடையில் மணப்பெண் திடீர் மரணம்! துக்கத்திலும் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்!!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  திருமணக் கனவுகளுடன், அந்த இனிய நாளுக்காக காத்திருந்தவர் சைத்ரா (வயது 26). அந்த இனிய நாளும் வந்தது. திருமணக் கோலத்தில், மணமகனுடன், விருந்தினர்களை முக மலர்ச்சியுடன் வரவேற்று, புகைப்படங்களுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருந்த மணமகள், திடீரென மயங்கி உறவினர்கள் முன்னிலையில்  சரிந்தார் மணப்பெண் மயங்கி சரிந்து விழுந்ததை கண்டு உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மணமகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவடைந்துவிட்டதாகக் கூறிவிட்டார். கோலார் மாவட்டம் ஸ்ரீனிவாஸ்பூர் பகுதியில் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது. திருமண வீடே சோகத்தில் மூழ்கியது. தனது மகள், தங்களை விட்டுப் பிரிந்து கணவர் வீட்டுக்குச் செல்லப் போகிறார் என்பதையே தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு, மகள் தங்களை...
திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் மாநில தேர்தல் ஆணையம் – ஜெயக்குமார்

திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் மாநில தேர்தல் ஆணையம் – ஜெயக்குமார்

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுகவின் தேர்தல் விதி மீறல்கள் குறித்து அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோர், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், மாநில தேர்தல் ஆணையம் விருப்பு வெறுப்பில்லாமல் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்... ஆனால் மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும் திமுகவின் அராஜகம் அத்துமீறலுக்கு மாநில தேர்தல் ஆணையம் துணைபோகிறது இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.      ...
தேசியக்கொடியை இறக்கி விட்டு காவி கொடியை ஏற்றுவது தான் தேசப்பற்றா? தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கேள்வி

தேசியக்கொடியை இறக்கி விட்டு காவி கொடியை ஏற்றுவது தான் தேசப்பற்றா? தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல வட்டங்களில்  போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பிரச்சாரம் செய்தார். அப்போது மேடையில் பேசிய அவர், கூறுகையில், திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், குடும்ப அட்டைக்கு செல்பேசி தருவதாக அவர்கள் ஆட்சியில் சொன்னார்கள் செய்தார்களா?  மகளிருக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்குவதாக சொன்னார்கள் செய்தார்களா? என கேள்வி எழுப்பினார். கஜானாவை காலி செய்து விட்டு சென்ற பின்பும், பால் விலை குறைவு, மகளிருக்கு பேருந்து பயணம் இலவசம் உள்ளிட்ட  திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார் என்றும் திமுகவை பார்த்து கேள்வி கேட்பதற்கு அதிமுகவிற்கு அருகதை இல்லை என கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,  தமிழ்நாட்டில் மதக...
”ஒரே மடக்கில் ஒரு பாட்டில் ஓட்கா” சரக்கடிக்கும் சவாலில் சிக்கி உயிருக்கு போராடும் வாலிபர்!

”ஒரே மடக்கில் ஒரு பாட்டில் ஓட்கா” சரக்கடிக்கும் சவாலில் சிக்கி உயிருக்கு போராடும் வாலிபர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  சவால் விடலாம்... வரும் சவாலை ஏற்றுக் கொண்டு அதை நிறைவேற்றலாம்... அதிலும் ஆபத்தான சவால்கள் தவிர்க்கப்பட வேண்டும்.  நண்பர்களின் சரக்கடிக்கும் சவாலில் சிக்கி வாலிபர் உயிருக்கு போராடி வருகிறார்... அதென்ன சவால்... இளைஞர் ஒருவர் நண்பர்களின் சவாலை ஏற்று, ஒரே மடக்கில் முழு ஓட்கா மதுபாட்டிலை குடித்து முடித்துள்ளார். இதையடுத்து உடல்நல பாதிப்புக்கு ஆளான அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் பகுதியை சேர்ந்தவர் டேனியல் சான்டுல்லி. 19 வயதாகும் இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மிசோரி பல்கலைக் கழகத்தின் ஹாஸ்டலில் சேர்வதற்காக சென்றுள்ளார். அங்கிருந்த அவரது நண்பர்கள் சான்டுல்லியிடம், 'ஒரே மடக்கில் ஓட்காவை குடித்து விடுவாயா?' என்று ஏளனமான தொனியில் சவால் விட்டுள்ளனர். இதன...
தமிழ் பெண்ணை மணக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்!

தமிழ் பெண்ணை மணக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்!

HOME SLIDER, NEWS, sports, உலக செய்திகள், செய்திகள்
  மார்ச் 27ம் தேதி மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதிகளின் திருமணம் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். ஆல்ரவுண்டராக ஆஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டுபவர் க்ளவுன் மேக்ஸ்வெல். ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐபிஎல்லில் விளையாடினார். இந்நிலையில், மீண்டும் மேக்ஸ்வல்லை ஆர்சிபி அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது   இந்நிலையில், மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, அவர்களுக்கு இந்திய முறைப்படி 2020ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக திருமணத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது மார்ச் 27ம் தேதி மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதிகளின் திருமணம் நடைபெற உள்ளது இந்நிலையில், தம்பதியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகி...