சட்டசபை தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டாது – பிரசாந்த் கிஷோர் சவால்
மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டாது - பிரசாந்த் கிஷோர்
மேற்குவங்காள மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. இதற்காக திரிணாமூல் காங்கிரசும், பா.ஜ.க.வும் வரிந்து கட்டி தேர்தல் வேலைகளில் இறங்கி உள்ளன.
மேற்குவங்காள மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பெரிய அரசியல் தலைவராகக் கருதப்படும் சுவேந்து அதிகாரியை பா.ஜ.க.வுக்கு வரவேற்றார்.
அமித்ஷா கலந்துகொண்ட கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,எம்எல்ஏக்கள், அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, மம்தா அரசின் மீது, மக்களுக்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடாக தான் பலர் பாஜகவில் இணைந்த வருகின்றனர். மாநிலத்தில் நிலவிவரும் அரசியல் வன்முறை, கடத்தல், ஊழல் மற்றும் வங்க தேசத்தின...









