கொரானாவுக்கு தடுப்பூசி ரெடியாம் வங்க தேச மருத்துவ குழு அறிவிப்பு!
கொரானாவுக்கு தடுப்பூசி ரெடியாம் வங்க தேச மருத்துவ குழு அறிவிப்பு!
உலகம் முழுதும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரானா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முறை தொடங்கி உள்ளது. இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், கொரோனா 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டறிந்திருப்பதாக வங்கதேச மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த தரெக் ஆலம் என்ற மருத்துவரின் தலைமையிலான குழு கொரானா குறித்து ஆய்வு செய்து வந்தனர். இவர்கள் மருத்துவத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படும் ஐவர்மெக்டின் மற்றும் டாக்ஸிசைக்ளின...









