மாநகராட்சி சுகாதார தொழிலாளர்களுக்கு முக கவசம், கையுறைகளை வழங்கிய நடிகர் வசந்த் ரவி!
சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு
சுகாதார கருவிகளை வழங்கிய நடிகர் வசந்த் ரவி
'தரமணி' புகழ் நடிகர் வசந்த் ரவி கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி பேசியதாவது :
இந்தப் பருவத்தில் வாழ்க்கையே மாறிவிட்டது. இது நல்லதா கெட்டதா என்பது தெரியாது புரியாது. ஆனால் இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். முக்கியமான பாதுகாப்பாக இருப்போம்.
நமது அரசாங்கம், என்.ஜி.ஓ.க்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் வெற்றி மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
இதைப் பார்க்கும்போது இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை வருகிறது.
ஆனால், சென்ற வாரம் நான் மளிகை கடைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, அந்த பாதையில் தூய்மை பணியாளர்கள், மு...









