செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

விவேக் நினைவாக வீட்டில் மரக்கன்றுகளை நட்ட நடிகை!

விவேக் நினைவாக வீட்டில் மரக்கன்றுகளை நட்ட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
விவேக் நினைவாக வீட்டில் மரக்கன்றுகளை நட்ட நடிகை! சமீபத்தில் காமெடி நடிகர் விவேக் எதிர்பாராத வகையில் மாரடைப்பால் காலமானார். இது திரை உலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்ற முயற்சியில் விவேக் ஈடுபட்டிருந்தார். 33 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நட்ட நிலையில் அவர் தனது இலக்கை அடையும் முன்னரே காலமாகிவிட்டார். இந்த நிலையில் விவேக் விட்ட பணியை தொடர்ந்து நடத்த வேண்டும் என பல ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஆத்மிகா, மறைந்த விவேக் நினைவாக தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஆத்மிகா கூறும்போது, நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன். என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய மு...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு - மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு! தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 10 ஆயிரத்தைக் கடந்து, பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. முககவசம் அணிவதை தீவிரப்படுத்த அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்தாலும், மற்றொரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. என்றாலும், கொரோனா பரவல் தீவிரத்தைக் கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட இருக்கிறது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். இந்த நேரத்தில், அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வா...
ராகுல் காந்திக்கு கொரானா பாதிப்பு..!

ராகுல் காந்திக்கு கொரானா பாதிப்பு..!

HOME SLIDER, NEWS, politics
  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று தனக்கு உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார் https://twitter.com/RahulGandhi/status/1384442319638867969?s=19  ...
ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை முன்பதிவு செய்த தரிசன டிக்கெட் 90 நாட்களுக்கு செல்லும் – திருப்பதி தேவஸ்தானம்

ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை முன்பதிவு செய்த தரிசன டிக்கெட் 90 நாட்களுக்கு செல்லும் – திருப்பதி தேவஸ்தானம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை முன்பதிவு செய்த தரிசன டிக்கெட் 90 நாட்களுக்கு செல்லும் - திருப்பதி தேவஸ்தானம் கொரோனா 2-ம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்தது ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் எண்ணிக்கையையும் பாதியாக குறைத்துள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், தரிசனத்திற்கு வர முடியாமல் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தொற்று காரணமாக வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் நிலையில், அவர்கள் 90 நாட்களுக்குள் வந்து ஏழுமலை...
மருத்துவமனையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்!

மருத்துவமனையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்!

HOME SLIDER, NEWS, politics
மருத்துவமனையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்! முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் கொரோனா தொற்று பரவல் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார் இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடல் இறக்க பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர். அதன்படி எடப்பாடி பழனிசாமிக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சையை டாக்டர்கள் செய்தனர் அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர் இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஸ் ஆனதை தொடர்ந்து வீட்டில் 3 நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என ...
தென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்!

தென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்!   நாடுமுழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை (20-ந்தேதி) முதல் இரவுநேர ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்கள், அரசு பஸ்கள், வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்களும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவுநேர பஸ்களுக்கு தடை விதிக்கப்படுவதால் தமிழகத்தில் மாவட்டங்களுக்...
ஆம்பூர் அருகே வெள்ளை காகம்

ஆம்பூர் அருகே வெள்ளை காகம்

HOME SLIDER, NEWS
ஆம்பூர் அருகே வெள்ளை காகம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்குள்பட்ட வன்னியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரது வீட்டின் அருகில் நேற்று மாலை வெள்ளை நிறமுடைய காகம் ஒன்று இரை தேடிவந்து தஞ்சம் அடைந்துள்ளது இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வெள்ளை காகம் சுவரின் மீது அமர்ந்திருக்கும் காட்சிகளைக் காணொலியாகவும், புகைப்படமாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்....
தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு…

தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு…

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… தமிழகத்தில் வெளியில் கொளுத்தி வரும் நிலையில், 4 தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடல் பகுதிகளில் 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகம் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி)  ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 20.4.2021 முதல் 22.4.2021 : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய...
முகக்கவசம் அணிய கஷ்டமா இருக்கா ? தளர்வு அளித்த இஸ்ரேல்…

முகக்கவசம் அணிய கஷ்டமா இருக்கா ? தளர்வு அளித்த இஸ்ரேல்…

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் முழுவதும் முகக்கவசம் அணிய கட்டாய படுத்தும் வேளையில் இஸ்ரேலில் முகக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2019 முதல் கொரோனா பரவல் காரணமாக பல கோடி உயிர்கள் பலியாகி வருகிறது. எனவே, இந்த தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அந்நாட்டு அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும், முகக்கவசம் அணியாமல் பொதுஇடங்களில் சுற்றுதல், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இஸ்ரேலில் தற்போது முகக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள 93 லட்ச பொதுமக்களில் 53 சதவீத மக்களுக்கு இரு தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு இரு வாரங்கள் ஆன நிலையில் 68 % மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டதால் கட்டுப்பாடுகளை இஸ்ரேல் தளர்த்தியுள்ளது. அதன் அடிப்படையில் பொத...