தமிழக சட்டசபை தேர்தல் ஒத்திவைப்பு இல்லை- தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு
தமிழக சட்டசபை தேர்தல் ஒத்திவைப்பு இல்லை- தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து தேர்தல் ஆணையம் சில முடிவுகளை எடுத்துள்ளது.
பீகாரில் இருந்து 2 சுகாதார அதிகாரிகளை தமிழகத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி கேட்டு பெற்றுள்ளார். பீகாரில் கொரோனா கால கட்டத்தில் வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தேர்தல் பாதுகாப்பாக நடத்தப்பட்டது.
அப்போது அங்கு சுகாதாரப் பணியில் அதிகாரிகள் சுதிர்குமார், ரோகினி ஆகியோர் ஈடுபட்டனர். அவர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.
அந்த 2 அதிகாரிகளும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளோடு இணைந்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து மாதிரி வாக்குச்சாவடி மையத்தையும் பார்வையிட்டனர்.
அதன்பின்னர் தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத...









