ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல்!

சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் மூச்சுத்திணறலால் பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி ஆனது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை கூறியிருப்பதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருக்கிறது. சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சனைகளும் சசிகலாவுக்கு உள்ளன. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது...
பேரறிவாளன் விடுதலை ஆளுநரே 3 அல்லது 4 நாள்களில் முடிவெடுப்பார் – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பேரறிவாளன் விடுதலை ஆளுநரே 3 அல்லது 4 நாள்களில் முடிவெடுப்பார் – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பேரறிவாளன் விடுதலை ஆளுநரே 3 அல்லது 4 நாள்களில் முடிவெடுப்பார் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மாநில ஆளுநரே 3 அல்லது 4 நாள்களில் முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப்பெற்று சிறையில் இருந்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குதான் உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கு பதிலாக மாநில ஆளுநரே 3 அல்லது 4 நாள்களில் முடிவு செய்வார் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா தெரி...
கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் – கே.எஸ்.அழகிரி

கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் – கே.எஸ்.அழகிரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் 3-வது அணி அமைவதை விரும்பவில்லை என்றும் கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.  தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி, கோவையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது. அவர் திமுக கூட்டணிக்கு வந்தால் அவரை ஏற்றுக்கொள்வோம். நாங்கள் ஒத்த கருத்துடைய அரசியல் கட்சியினர் இல்லை. கூட்டணியிலிருக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து உள்ளது. கமல்ஹாசனால் திமுக கூட்டணியின் ஓட்டுவங்கி பாதிக்கப்படாது” எனக் கூறினார்.  ...
கமிஷனுக்காக 2855 கோடி டெண்டர் அதிமுக ஆட்சியின் கடைசி நேர வசூல் – ஸ்டாலின் திடுக்!

கமிஷனுக்காக 2855 கோடி டெண்டர் அதிமுக ஆட்சியின் கடைசி நேர வசூல் – ஸ்டாலின் திடுக்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அதிமுக ஆட்சியின் கடைசி நேர வசூல்.. கமிஷனுக்காக 2855 கோடி டெண்டர்.. ஸ்டாலின் திடுக்! அதிமுக ஆட்சியின் கடைசி கால வசூல் வேட்டையாக ரூ.2855 கோடிக்கு அவசர, அவசரமாக டெண்டர் விடப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன், வசூல் வேட்டையை நடத்தி முடித்து, குவித்து விட வேண்டும் என்பதற்காக, முதலமைச்சர் பழனிசாமியின் பொறுப்பில் உள்ள பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்றே மாதங்களில் 2855 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்களை விட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நடந்து வரும் டெண்டர் கொள்ளைகளின் தொடர்ச்சியாக, தேர்தல் வரவுள்ள இந்த நேரத்திலும் பழனிசாமி இதுபோன்று, கடைசி நிமிட கையெ...
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டின் போன்டாகைடன் நகரில் இருநது தென்கிழக்கே 219 மீட்டர் தொலைவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 139 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த நடுநடுக்கம் பிலிப்பைன்ஸின் முக்கிய வணிக மையமான கருதப்படும் தவாயோ நகரில் உணரப்பட்டுள்ளதுது. இங்குள்ள வீடுகள் ஆட்டம் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணியளவில் உண்டான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் இல்லை....
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும் – திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும் – திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும் - திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் சென்னையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. *பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுவிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். *புதிய 3 வேளாண் சட்டங்களையும், மத்திய பாஜக அரசு நிபந்தனையின்றி உடனே திரும்பப்பெற வேண்டும். *மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வலியுறுத்தி தீர்மானம். *இந்தியாவில் வேறெங்கும் காண முடியாத அளவுக்கு அதிமுக ஆட்சியில் ஊழல் செய்துள்ளதாக திமுக கண்டனம் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. *பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை மேலும் தாமதமின்றி கைது செய்ய வேண்டும். மேலும், திமுக தலைவர் முக ஸ்...
உயிரிழந்த 4 மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி- முதல்வர் பழனிசாமி உத்தரவு

உயிரிழந்த 4 மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி- முதல்வர் பழனிசாமி உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உயிரிழந்த 4 மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி- முதல்வர் பழனிசாமி உத்தரவு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா (30), உச்சிப்புளி யைச்சேர்ந்த நாகராஜ் (52), செந்தில்குமார் (32), மண்டபத்தைச் சேர்ந்த சாம்சன் டார்வின் (28) ஆகிய 4 பேர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்கரையில் இருந்து 8 கடல் மைல் தொலைவில் (15 கி.மீ.) மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பி செல்வதற்காக அங்கிருந்து வேகமாக புறப்பட்டபோது, மீனவர்களின் விசைப்படகு இலங்கையின் ரோந்து கப்பல் மீது மோதியதாக கூறப்பட்டது. இதில் படகுடன் சேர்ந்து மீனவர்கள் 4 பேரும் மூழ்கினர். அவர்களை பல மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கரை திரும்பிய கோட்டைப்பட்டின...
பிப்2-ந்தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம்!

பிப்2-ந்தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிப்2-ந்தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம்! தமிழக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் 2-ந்தேதி கூடும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சபை கூடும். அதன்பின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மே மாதம் தேர்தல் நடைபெற இருப்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆளுநர் உரையின் மீதான விவாதம், பட்ஜெட் மீதான விவாதங்களும் நடைபெறும். கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பகு குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என சீனிவாசன் தெரிவித்துள்ளார்....
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை!

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை தமிழக மீனவர்கள் 4 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தி, மூழ்கடித்துக் கொன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது”  என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார் இதுகுறித்த அவரது அறிக்கையில் கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த,   கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த  மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி விசைப்படகோடு மூழ்கடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் –  மீன்பிடி உரிமையின் அடிப்படையிலும் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது  கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், இழப்பீடுகள் எதுவும் கொடுக்கமாட்டோம் என்று இலங்கை கடற்படை அறிவிப்பதும் அடாவடியானது, அராஜகமானது!...
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை – திருமாவளவன்

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை – திருமாவளவன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை - திருமாவளவன் தனிச்சின்னத்தில் போட்டியிட ஸ்டாலின் நிர்பந்திப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டிடுகிறேன் என்று முதலில் மதிமுக வைகோ ஆரம்பித்தார். அடுத்து விசிக திருமாவளவன் சொன்னார். அப்புறம் ஐஜேகே என்று தொடர்ந்தது. இதை உணர்ந்த ஸ்டாலினும், தனிச்சின்னத்தில் போட்டியிட நான் நிர்ப்பந்திக்கவில்லை. அது அந்தந்த கட்சிகளின் விருப்பம் என்று சொன்னார் அதாவது, மக்கள் மனதில் இடம்பெற்ற ஒரு சின்னத்தில் கூட்டணி கட்சிகள் விரும்பினால் அதை வழங்கிவிடுவது நல்லது என்றும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கிறேன் என்று செய்தி வருவதால் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சதி நடக்கிறது என்றும் தெரிவித்தார் ஸ்டாலின். இந்நிலையில் இன்று , தேர்தலுக்கு 15 நாட்கள் முன்னர் தனிச்சின்னம் பெற்று அதை பிரபலப்படுத்த முடியா...