ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பேரறிவாளன் உட்பட எழுவரை விடுவிக்க வலியுறுத்தி திரைத்துறையினர் முன்னெடுக்கும் மிஸ்டுகால் இயக்கம்

பேரறிவாளன் உட்பட எழுவரை விடுவிக்க வலியுறுத்தி திரைத்துறையினர் முன்னெடுக்கும் மிஸ்டுகால் இயக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட எழுவரை விடுவிக்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் எழுவரின் விடுதலை கேள்விக்குறியாக உள்ளது. பேரறிவாளனை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 19-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், பேரறிவாளன் உட்பட எழுவரை விடுவிக்க பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்த திரையுலகினர், தற்போது மிஸ்டு கால் இயக்கத்தை தொடங்கியுள்ளனர். இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், ராம், தியாகராஜ குமாரராஜா, ராஜு முருகன், கார்த்திக் சுப்புராஜ், நடிகர் கலையரசன், நடிகைகள் ரோகிணி, ரித்விகா உள்ளிட்டோர் மிஸ்டு கால் இயக்கத்தை தொடங்கி வைத்தனர். பொதுமக்களும் 90995-26633 என்ற...
கண்டுபிடிக்கப்பட்ட இந்தோனேசியா விமானத்தின் கருப்புப் பெட்டி!

கண்டுபிடிக்கப்பட்ட இந்தோனேசியா விமானத்தின் கருப்புப் பெட்டி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
இந்தோனேசியாவில் 62 பேருடன் மாயமான விமானத்தின் கருப்புப் பெட்டி  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஸ்ரீவிஜயா ஏர் என்னும் விமானச் சேவை நிறுவனம் இந்தோனேசியாவில் உள்நாட்டுச் சேவை மற்றும் சர்வதேச சேவைகளை அளித்து வருகிறது.   இந்நிறுவனத்தின் போயிங் 737 விமானம் நேற்று மதியம் ஜாகர்த்தாவில் இருந்து மேற்கு காலிமாண்டன் மாநிலத்தில் உள்ள போண்டியானக் இன்னும் இடத்துக்கு கிளம்பியது.  அந்த இடத்தை அடைய விமானத்துக்கு 90 நிமிடங்கள் ஆகும். ஆயினும் விமானம் கிளம்பிய 44 நிமிடங்களில் விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.  விமானத்தினுள் அப்போது 56 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்துள்ளனர்.  காணாமல் போன இந்த விமானத்தைத் தேடும் பணியில் உடனடியாக மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.   இந்நிலையில் ஜாவா கடல் பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் மற்றும் மனித உடல்கள் மீனவர்களிடம் கிடைத்ததால் விமான விபத்துக்குள்ளாகியது உ...
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்கள் என தெரிவித்துள்ளார். மேலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு, கார் பரிசாக வழங்கப்படும். அலங்காநல்லூர் 655, பாலமேடு 651, அவனியாபுரம் 430 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்...
HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சர்வதேச நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. கொரோனா பாதிப்புகளால் பல நாடுகள் தங்கள் விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன இந்நிலையில், இந்தோனேசியா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்படாமல் இருக்க கோடீசுவரர் ஒருவர் தானும் தனது மனைவியும் பயணிக்கும் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டின் ஜகர்தாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பாலி நகரத்துக்கு தன் மனைவியுடன் செல்ல திட்டமிட்டார். ஆனால் பிற பயணிகளுடன் பயணித்தால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் தான் செல்லவிருக்கும் பயணிகள் விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்துள்ளார். இதற்காக அவர்  ரூ. 6 லட்சம் இந்தோனே...
கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம் – முதல்வர் பழனிசாமி உத்தரவு

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம் – முதல்வர் பழனிசாமி உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இணைய வழி கல்விக்காக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தினசரி 2ஜிபி டேட்டா கார்டு இலவசமாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் தமிழக அரசு எடுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் காரணமாக உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில் 32 சதவீதத்திலிருந்து 49 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும், கல்லூரி மாணாக்கர்கள் சிறந்த கணினி திறன்களை பெற்றிட மாண்புமிகு அம்மாவின் அரசு, அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணைய வழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்து கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெ...
பொள்ளாச்சியில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் கோவையில் தடுக்கப்பட்ட கனிமொழி எம்பி!

பொள்ளாச்சியில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் கோவையில் தடுக்கப்பட்ட கனிமொழி எம்பி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பொள்ளாச்சியில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் கோவையில் தடுக்கப்பட்ட கனிமொழி எம்பி! பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்து தண்டிக்க வலியுத்தி வருகிற 10-ந்தேதி கனிமொழி தலைமையில் திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலத்காரம் செய்து, வீடியோ எடுத்து பணம் பறிக்கும் சம்பவம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது. இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பைனான்சியர் திருநாவுக்கரசு, சிவீல் என்ஜினீயர் சபரிராஜன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த சமயத்தில் இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி....
தை பிறக்கப்போகிறது, வழியும் பிறக்கப்போகிறது – மு.க.ஸ்டாலின்

தை பிறக்கப்போகிறது, வழியும் பிறக்கப்போகிறது – மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி பேசியவர், தை பிறக்கப்போகிறது, வழியும் பிறக்கப்போகிறது என்று கூறினார் சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள அகரம் ஜெயின் பள்ளி பொங்கல் விழாவில் கலந்துகொண்டு திமுக தலைவர் முக ஸ்டாலின், வேஷ்டி, சேலைகளுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை  பொதுமக்களுக்க வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,  சமத்துவப் பொங்கலைக் கொண்டாடும் அதே உணர்வோடு மக்களுக்காகப் பணியாற்றுவோம். எனது தொகுதி மக்களுக்குத் தேவையான மக்கள் நலத் திட்ட உதவிகளை வழங்குவதிலும் நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்து வருகிறேன். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், மக்கள் பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி வருகிறேன். மாற்றத்தை எதிர்பார்த்து, நான் நீங்கள் மட்டுமல்ல, மக்களும் காத்துள்ளனர். எனவே, நீங்கள் அதற்கு வழிவகை செய்ய வேண்டும். தை பிறந்தா...
மீண்டும் சீனாவில் கொரோனா பரவல் 2 நகரங்களில் ஊரடங்கு

மீண்டும் சீனாவில் கொரோனா பரவல் 2 நகரங்களில் ஊரடங்கு

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், 2 நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 17ந்தேதி சீனாவின் வுகான் மாகாணத்தில்  முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்று உலக நாடுகளில் பரவி இதுவரை 19லட்சத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்துள்ளது. இந்த தொற்று பரவலை இதுவரை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. இதற்கு தற்போதுதான் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரத் தொடங்கி உள்ளது. ஆனால், கொரோனா தொற்று பரவல் குறித்து உண்மையான தகவலை தெரிவிக்க சீனா மறுத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது சீனாவில் மீண்டும் தொற்று பரவல் தொடங்கி உள்ளது.  ஹூபே மாகாணத்தில் கடந்த வாரம் புதிதாக 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. குறிப்பாக,  ஷிஜியாஜுவாங் மற்றும் ஜிங்டாய் ஆகிய நகரங்களில் கொரோனா பாதிப்பு பர...
இங்கிலாந்து ராணிக்கும் அவரது கணவருக்கும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி!

இங்கிலாந்து ராணிக்கும் அவரது கணவருக்கும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
இங்கிலாந்து ராணிக்கும் அவரது கணவருக்கும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரின் கணவர் எடின்பரோ கோமகன் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் அரசிக்கு தற்போது 94 வயதாகிறது மற்றும் அவரின் கணவர் இளவரசர் பிலப்பிற்கு 99 வயதாகிறது. இவர்கள் இருவரும் தற்போது கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டனில், குறைந்தபட்சம் 1 டோஸ் கொரோனா தடுப்பு மருந்தாவது எடுத்துக்கொண்ட 1.5 மில்லியன் மக்களில் இவர்களும் அடக்கம் என்று கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ராணியின் குடும்ப மருத்துவர் இந்த தடுப்பு மருந்து டோஸ் செலுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா காரணமாக, ராணியும்,...
‘தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல’ – கே.பி. முனுசாமி

‘தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல’ – கே.பி. முனுசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அ.தி.மு.க.வின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தின் சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக-வின் முக்கியத்தலைவர்கள் பேசினர். அதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பேசியதாவது:- * (தமிழக சட்டசபை தேர்தலில்) தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல. * தேர்தலில் திமுக-அதிமுக இடையேதான் நேரடி போட்டி * ஜனநாயக அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் தான் போட்டி. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அவர் தனது பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். ஆனால், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாக கூறும் பாஜக கூட்டணியின் முதலமைச்சர் ...