கொரானா பரவலை தடுக்க அனைத்து வழிகளிலும் அரசு தீவிரம் காட்டுகிறது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்!
கொரானா பரவலை தடுக்க அனைத்து வழிகளிலும் அரசு தீவிரம் காட்டுகிறது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்!
அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது;
கொரோனா நோய் பாதிப்பு அறிகுறியும் பருவகால புளு காய்ச்சல் தாக்குதல் அறிகுறியும் ஒரே மாதிரி தான் இருக்கின்றன. எனவே இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலும், பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியமாகும்.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. நோயை எதிர்கொள்ள எல்லா நிலையிலும் தயார் நிலையில் இருக்கிறோம்.
இந்த நோய் ஒருவரிடத்தில் இருந்து ஒருவருக்கு பரவி விடக்கூடாது என்பது மிக முக்கிமானது ஆகும்.
எனவே அதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். 8 இடங்களில் பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு தனி வார்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
...









