செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

நித்திக்கு புளூ கார்னர் நோட்டீஸ்… விரைவில் ரெட்கார்னர்..!

நித்திக்கு புளூ கார்னர் நோட்டீஸ்… விரைவில் ரெட்கார்னர்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நித்திக்கு புளூ கார்னர் நோட்டீஸ்... விரைவில் ரெட்கார்னர்..! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் இருந்த 2 பெண் சீடர்கள் மாயமானது தொடர்பாக சாமியார் நித்தியானந்தா மீது அம்மாநில போலீசில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், குழந்தைகளை கடத்திச்சென்று அவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்யும் வேலையில் ஈடுபடுத்தியதாகவும் அவர்மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சாமியார் நித்தியானந்தாவை குஜராத் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். ஆனால் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவை விட்டு தப்பிச்சென்று ஈக்குவடார் நாட்டிற்கு அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற பெயரில் புதிதாக நாடு ஒன்றை உருவாக்கி உல்லாசமாக வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், வெளிநாட்டில் உள்ள நித்தியானந்தாவை கைது செய்ய தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளும்படி சிபிஐக்கு...
மலிவான அரசியல் செய்யாமல்  ரஜினி வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லது என்கிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்!

மலிவான அரசியல் செய்யாமல் ரஜினி வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லது என்கிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    ரஜினி வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லது என்கிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்! துக்ளக் விழா, பெரியார் சர்ச்சைப் பேச்சு, மன்னிப்பு கேட்க ரஜினி மறுப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியது; நடிகர் ரஜினிகாந்த் சொன்னது போல, 1971-ல் எதுவும் நடக்கவில்லை. துக்ளக் பத்திரிகையில் எழுதிய சோ, நீதிமன்றத்துக்கு சென்று சில அமைப்புகள் எனக்கு கொடுத்த தகவலின் பேரில் தான் எழுதினேன் என்று தெரிவித்தார். எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது என்றும் கூறினார். நடைபெறாத ஒரு வி‌‌ஷயத்தை நடிகர் ரஜினிகாந்த் சொல்லி மக்களை திசை திருப்புகிறார். நாங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்களில் பெரியாரும் ஒருவர். அதனைத் தொடர்ந்து அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரும் எங்கள் தலைவர்கள் ஆவார்கள். இந்த 4 பெரும் தலைவர்களின் புகழுக்கு சிறு அளவில் இழுக்கு ஏற்பட்டாலும் கூட அ.தி.மு.க. குரல் கொடுக்கும். எதிர்த்து ...
சுமார் 14 லட்சம் பேர் மனு பிப்ரவரி 14ல் இறுதி வாக்காளர் பட்டியல் – தேர்தல் அதிகாரி

சுமார் 14 லட்சம் பேர் மனு பிப்ரவரி 14ல் இறுதி வாக்காளர் பட்டியல் – தேர்தல் அதிகாரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிப்ரவரி 14 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் - சத்யபிரதா சாஹு தமிழகம் முழுவதும் ஜனவரி 4,5,11,12 ஆகிய தேதிகளில் 67 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், திருத்தம் செய்ய இதுவரை 17 லட்சத்து 1 ஆயிரத்து 662 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் புதிதாக பெயர் சேர்க்க 13 லட்சத்து 16 ஆயிரத்து 921 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 454 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 439 பேரும் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களும், இதர பணி நாட்களில் பெறப்படும் விண்ணப்பங்களும் நாளை முதல் பரிசீலிக்கப்பட உள்ளது. அதன்பின், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் ...
வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020

வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    ‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ - தென்னிந்திய இசைப் பயணம் 2020 2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். மண்ணின் மைந்தரான அவர், பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம் 08ம் தேதி சென்னையில் இருந்துத் துவங்குகிறார். ‘Noise and Grains’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்கம், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டுவரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா ம...
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டம்!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வரும் 2022ம் ஆண்டு 3 பேர் அடங்கிய குழு விண்வெளிக்கு செல்ல உள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு முன்னோடியாக மனித உருவிலான பெண் ரோபோவை இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ‘வயோம் மித்ரா’ எனும் பெண் உருவம் உடைய ரோபோ இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் செய்யும் பல வேலைகளை செய்யும் திறமையுடைய இந்த ரோபோ இரு மொழிகளில் சரளமாக பேசும் திறனுடையது. விண்வெளிக்கு அனுப்புவதற்கு மனித உருவ ரோபோ தயாராக உள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சி துறையில் நமது திறமையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி பாதுகாப்பாக திருப்பி கொண்டுவரவும் உதவுகிறது என இஸ்ரோ தலைவர் சிவன் முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்க...
மன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி திட்டவட்டம்

மன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி திட்டவட்டம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    *துக்ளக் விழாவில் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு   நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்..! *இல்லாத ஒன்றையோ , கற்பனையாகவே கருத்து தெரிவிக்கவில்லை..! அதற்காக மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கமாட்டேன். துக்ளக் விழாவில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது . நான் பேசியது உண்மை, நடந்தது மறுக்ககூடிய சம்பவம் அல்ல , மறக்க வேண்டிய சம்பவம் , உண்மையை கூறியதற்கு யாரிடமும் மன்னிப்பு கேட்க இயலாது - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  ...
கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் நலதிட்ட உதவிகள்!

கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் நலதிட்ட உதவிகள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் தற்சார்பு வேளாண்மையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்பை அளிப்பவர்களுக்கு உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. தற்சார்பு வேளாண்மையில் நேரடி விற்பனையில் சிறந்து விளங்கும் விவசாயி திருமூர்த்தி, பாரம்பரிய சிறுதானிய விதைகள் சேமிப்பில் ஜனகன், சிறந்த விவசாயப் பங்களிப்பிற்கு மனோன்மணி ஆகியோருக்கு விருதுகளும் தலா ஒரு லட்சத்திற்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் நடிகர் சிவகுமார் வழன்கினார். அதோடு சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கருவிகளை வடிவமைப்பவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக உடுமலைப்பேட்டை சசிகுமார் அவர்களுக்கு 75 ஆயிரமும் இரண்டாம் பரிசாக வேலூர் ராஜா மற்றும் கரூர் துரைசாமி அவர்களுக்கு 25 ஆயிரமும் மூன்றாம் பரிசாக ஈரோடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கோக...
ரஜினி மீது வழக்கு பதிவு செய்யும் புகார் மனுவை போலீஸ் ஏற்றதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ரஜினி மீது வழக்கு பதிவு செய்யும் புகார் மனுவை போலீஸ் ஏற்றதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர கோவை போலீசில் புகார் மனு - CSR பதிவு செய்த தமிழ்நாடு போலீஸ் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற ஒரு வார இதழ் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் சில தவறான தகவல்களை கூறியதாகவும், வரலாற்றை திரித்து கூறி தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்தியதோடு வீண் பழியை சுமத்தி வன்முறையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார் அதனால் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் மீதான புகாரை பெற்றுக் கொண்டதற்கு சான்றாக புகார் மனு ஏற்கப்பட்டதற்கான அத்தாட்சியை போலீசார் வழங்கி உள்ளனர். அரசின் அனுமதி இல்லாமல் ரஜினிகாந்த் மீதான புகார் மனு ஏற்கப்பட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. ரஜினிகாந்த் மீதான புகார் போலீசில் ஏற்கப்பட்டதால் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய...
வரலாற்றை திரித்து பேசினாரா ரஜினிகாந்த் – சுப.வீரபாண்டியன் அறிக்கையால் பரபரப்பு!

வரலாற்றை திரித்து பேசினாரா ரஜினிகாந்த் – சுப.வீரபாண்டியன் அறிக்கையால் பரபரப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  ரஜினிக்கு ஒரு மறுப்பு! -சுப. வீரபாண்டியன் பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும் நிலையைத் தாண்டி, நேற்றையப் பொய்களைக் கண்டு பொங்கும் மனத்துடன் இந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 14.01.2020 அன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய திரு. ரஜினி, " 1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம, செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப் போனாரு" என்று பேசியுள்ளார். "அதனை எதிர்க்க வேறு எந்தப் பத்திரிகைக்கும் தைரியம் இல்லாதபோது, சோ சார், துணிச்சலா அட்டைப்படத்துலையே போட்டு விமரிசிச்சாரு" என்றும் பேசியுள்ளார். யார் ஒருவருக்கும் தன் கருத்தைச் சொல்ல உரிமை உண்டு. ஆனால் செய்திகளை மாற்றிச் சொல்லவும், திரித்துச் சொல்லவும் யாருக்கும் உரிமையில்லை. ரஜினி அதனைத்தான் செய்திருக்கிறார். ரஜினி குறிப்பிடும் அந்த ஊர்வலம், 24.0...
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட்-30 செயற்கைக்கோள்

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட்-30 செயற்கைக்கோள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட்-30 செயற்கைக்கோள்:_* _இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 30 செயற்கைக்கோள் இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பிரெஞ்சு கயானாவின் கவ்ரவ் விண்வெளி மையத்தில் இருந்து, ஐரோப்பிய விண்வெளி முகமையின் ஏரியேன் - 5 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. மொத்தம், 3 ஆயிரத்து 357 கிலோ எடையுள்ள, ஜிசாட் - 30 செயற்கைக்கோள், தொலைதொடர்பு, டி.டி.எச். மற்றும்,டிஜிட்டல் சேவைகளுக்கு உதவும். இந்த செயற்கைக்கோள், 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது._...