அ.தி.மு.க.வில் இருந்து நல்லவர்கள் வந்தால் சேர்த்து கொள்வோம் – கமல்ஹாசன்
கமல்ஹாசன் ஒரு வாரப்பத்திரிகைக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
37 ஆண்டுகளாக நற்பணி செய்து கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு இடத்திலும் எங்களுக்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு கட்டமைப்புக்கான அஸ்திவாரம் எங்களுக்கும் உள்ளது. அதைப் பலப்படுத்த வேண்டும்.
ஆனால், இருப்பவர்களை உற்சாகப்படுத்திச் செயலாற்றப் பணிக்கிறோம். பலரைப் புதிதாக இணைக்கிறோம். ஆனால், ‘இன்னும் பள்ளமே தோண்டலையே’ என்று பேசுவது சரியானதல்ல.
எங்கள் கோபங்களைச் சொல்ல இது நேரமல்ல. இருந்தாலும், கேட்பதால் சொல்கிறேன். நற்பணி செய்வதற்கான தண்டனைகளை நாங்கள் அனுபவித்திருக்கிறோம்.
வெள்ளைக்காரன் ஆட்சியில் காந்தியார் நற்பணி செய்ய சிரமப்பட்டார் என்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், இது என் குடி, என் அரசு. இங்கேயே நாங்கள் நிறைய அனுபவித்துள்ளோம்.
உதாரணத்துக்கு, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, ஓர் அமைச்சரை அவமானப்படுத்தி விட்டார் என்று சொல்ல...









