முதலில் சூர்யா அடுத்து ரஜினி கடைசியில் விக்ரம் மூலமாக உருவான “துருவ நட்சத்திரம்” – மனம் திறந்த இயக்குனர் கவுதம்வாசுதேவமேனன்!
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’.இந்தப்படத்தில், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.பல்வேறு சிக்கல்களைத் தாண்டி இம்மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படம், இஸ்தான்புல், சார்ஜா, துருக்கி, அமெரிக்கா, பல்கேரியா, ஜார்ஜியா, ருமேனியா, அபுதாபி போன்ற நாடுகளில் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படம் பற்றி இயக்குநர் கெளதம்மேனன் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவை…
இந்தக் கதையில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது.அது நடக்கவில்லை என்றதும் ரஜினி சாரிடம் இந்தக் கதையைச் சொன்னேன் அப்போது எமோஷனல் காட்சிகளை நீக்கிவிட்டுச் சொன்னேன்.ஸ்டைலிஷான ஆக்ஷன் படமாக இருக்கும் என்று சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. ...









