ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா?: தொடர்ந்து இன்றும் விசாரணை!

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா?: தொடர்ந்து இன்றும் விசாரணை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா?: தொடர்ந்து இன்றும் விசாரணை! மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கலந்து கொண்டது தெரியவந்தது. பொதைப்பொருள் பயன்படுத்தியதாக அவருடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நான்கு நாட்கள் தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று முறை ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் சிறையில் இருந்து வெளியில் வர முடியாமல் உள்ளார். இந்த நிலையில் ஆர்யன் கான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மும்பை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியது, விற்பனை செய்த வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என தேசிய பொதைப்பொருள் தடுப்புப்பிரிவு...
நீட் தேர்வு விலக்கு மசோதா- கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

நீட் தேர்வு விலக்கு மசோதா- கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
நீட் தேர்வு விலக்கு மசோதா- கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு! நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 13-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் தந்த அறிக்கையின் அடிப்படையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது சட்டசபையில் நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து விளக்கி கூறினார். மேலும், அந்த மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நீட் தேர்வு விலக்கிற்கு ஆதரவு கோரி ஏற்கனவே 12 மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்- அமைச்சர் மு....
கோவையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கோவையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கோவையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை! தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட் அமைப்பினருடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் வீடுகளில் இன்று காலை 6.30 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 3 மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 23 இடங்களில் நடத்தினர். கோவை மாவட்டத்தில் புலியகுளம், சுங்கம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் நடந்தது. கோவை புலியகுளம் ஏரிமேட்டை சேர்ந்தவர் தினேஷ் (வயது 36). பல் டாக்டர். இவர் இடையர்பாளையத்தில் ஆஸ்பத்திரி வைத்து நடத்தி வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி கேரள மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் டாக்டர் தினேஷ் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்த மாவோயிஸ்ட் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றி...
இந்தியாவில் கொரோனா நிலவரம்- தினசரி பலி எண்ணிக்கை 181 ஆக சரிவு!

இந்தியாவில் கொரோனா நிலவரம்- தினசரி பலி எண்ணிக்கை 181 ஆக சரிவு!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவில் கொரோனா நிலவரம்- தினசரி பலி எண்ணிக்கை 181 ஆக சரிவு! இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 14 ஆயிரமாக குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது. கடந்த மார்ச் 1-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 12,286 ஆக இருந்தது. மறுநாள் 15 ஆயிரத்தை நெருங்கியது. இதன் மூலம் கடந்த 224 நாட்களில் இல்லாத அளவில் ஒரு நாள் பாதிப்பு நேற்று குறைந்திருப்பது புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 6,996 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அம்மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 12-ந் தேதி நிலவரப்படி தினசரி பாதிப்பு 5,692 ஆக இருந்தது. அதன்பிறகு சுமார் 6 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று குறைந்துள்ளது. இதே போல மகாராஷ்டிராவில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக பாதிப்பு நேற்று 1,736 ஆக குறைந்துள்ளது. இந்த இரு ...
பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
  பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்   ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று துபாயில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதல் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 60 ரன்னும் எடுத்தார். ஹெட்மையர் 37 ரன்கள் அடித்தார். ரிஷாப் பண்ட் 51 ரன் எடுத்து அவுட்டாகாமால் இருந்தார். சென்னை அணி சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டும் ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. டுபிளசிஸ்...
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைவது மகிழ்ச்சியளிக்கிறது – கனிமொழி

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைவது மகிழ்ச்சியளிக்கிறது – கனிமொழி

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைவது மகிழ்ச்சியளிக்கிறது - கனிமொழி ஆதிச்சநல்லூரில் 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பிலும், தொடர்ந்து நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த வருடமும், இந்த வருடமும் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 17 ஆண்டு களுக்கு பின்னர் மத்திய தொல்லியல்துறை சார்பில் மீண்டும் அகழாய்வு பணிகள் இன்று தொடங்கியது.  திருச்சி தென்மண்டல மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரும், அகழாய்வு இயக்குநருமான அருண்ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியை தொடங்கி உள்ளனர். அகழாய்வு பணிகள் 3 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த அகழாய்வு பணியை தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.  ”ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் ஆய்வு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ...
2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு! தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் 14,662 பதவிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அன்று 77.43 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இந்த 9 மாவட்டங்களிலும் 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர். விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 6,652 வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். கிராம பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு தனித்தனியாக வாக்குகளை செலுத்தினர். 35 ஊராட்சி ஒன்றியங்களுக்...
ஆயுத பூஜை கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்கம்- அமைச்சர் ராஜகண்ணப்பன்!

ஆயுத பூஜை கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்கம்- அமைச்சர் ராஜகண்ணப்பன்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆயுத பூஜை கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்கம்- அமைச்சர் ராஜகண்ணப்பன்! ஆயுத பூஜை பண்டிகை வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. 15-ந்தேதி விஜயதசமி வருகிறது. தொடர்ச்சியாக சனி, ஞாயிற்றுக்கிழமை வருவதால் பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு பேருந்துகளை கூடுதலாக இயக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதால் பயணிகள் நெரிசல் மூலம் மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் போக்குவரத்துத்துறை கவனமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு பயணிகள் நெருக்கியடித்துக் கொண்டு அதிகளவில் பயணம் செய்வதை தவிர்க்க கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல ஆயுத பூஜைக்காக வெளியூர் செல்லும் பயணிகள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒரே இடத்தில் குவிவதை தடுக்கவும் ஏற்...
நாளை மகாளய அமாவாசை: தமிழகம் முழுவதும் கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை!

நாளை மகாளய அமாவாசை: தமிழகம் முழுவதும் கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாளை மகாளய அமாவாசை: தமிழகம் முழுவதும் கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை! மகாளய அமாவாசை தினத்தில் புண்ணியதலங்களுக்கு சென்று தீர்த்தங்களில் நீராடி எள், தண்ணீர் ஆகியவற்றை இறைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்கள் வழிபாட்டில் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மகாளய அமாவாசை தினத்தில் தமிழகம் முழுவதும் பிரபலமான கோவில்கள் மட்டுமின்றி சின்ன கோவில்கள் மற்றும் நீர்நிலைகளிலும் தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா கட்டுப்பாடு காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. வாரத்தில் மற்ற நாட்கள் கோவில்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாளய அமாவாசை புதன்கிழமை வருவதால் கட்டுப்பாடு இருக்காது. எனவே தர்ப்பணம் கொடுப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று பொது மக்கள் கருதினர். இந்த நிலையில் நாளை...
விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் கார் ஏற்றி கொன்ற வீடியோவை காட்டி மோடியை சாடிய பிரியங்கா காந்தி

விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் கார் ஏற்றி கொன்ற வீடியோவை காட்டி மோடியை சாடிய பிரியங்கா காந்தி

HOME SLIDER, kodanki voice, NEWS, வீடியோ
  #priyankagandhi #panjabistatus #modi விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் கார் ஏற்றி கொன்ற வீடியோவை காட்டி மோடியை சாடிய பிரியங்கா காந்தி   https://youtu.be/roA3QGXyQ24