ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 29
Shadow

NEWS

நாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது – மம்தா பானர்ஜி!

நாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது – மம்தா பானர்ஜி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது - மம்தா பானர்ஜி! மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி இன...
ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு!

ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு! ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சில் அசவுகரியமான உணர்வு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சென்றதும் அவருக்கு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது வழக்கமான பரிசோதனைகள்தான் என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறி உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மருத்துவமனைக்கு சென்றதை கேள்விப்பட்ட பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், நேரில் சென்று நலம் விசாரித்தார்....
உதயநிதி ஸ்டாலின் மீது செங்கல் திருட்டு புகார்!

உதயநிதி ஸ்டாலின் மீது செங்கல் திருட்டு புகார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
உதயநிதி ஸ்டாலின் மீது செங்கல் திருடியதாக புகார்! திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விளாத்திகுளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது,மதுரையில் 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தார்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அதைக் கையோடு எடுத்து வந்துவிட்டேன். மதுரையில் அதிமுகவும், பாஜகவும் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான்” எனக் கூறி ஒரு செங்கல்லை எடுத்துக்காட்டினார். மேலும் இது தான் அவர்கள் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறினார். உதயநிதி ஸ்டாலின் செங்கலை காண்பித்து தேர்தல் பிரச்சாரம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி கலக்கியது. இந்நிலையில் அவர் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செங்கலை திருடியதாக அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி நீதிபாண்டியன் கோவில்பட்டி காவல்நிலையத...
புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது?-சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது?-சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது?-சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி! புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், வாக்காளர்களின் மொபைல் எண்களை ஆதார் மூலம் சட்டவிரோதமாக பெற்று பாஜகவினர் பிரசாரம் செய்வதாகவும், இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு ஒத்தி வைத்தனர். அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் பதி...
உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்!

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்!

HOME SLIDER, NEWS, sports, உலக செய்திகள், செய்திகள்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று மதிய நிலவரபடி, மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. அவ்வகையில் இன்று ஆண்கள் அணிக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில், இந்திய வீரர்கள் நீரஜ் குமார், ஸ்வப்னில் குசாலே மற்றும் செயின் சிங் ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். இறுதிச் சுற்றில் இந்திய அணி அமெரிக்க அணியை 47-25 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியாவுக்கு 12வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. முன்னதாக நடந்த கலப்பு இரட்டையருக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத், தேஜஸ்வினி சாவந்த் ஜோடி தங்கம் வென்றது. 25 மீட்டர் ரேபிட் பயர் பிரிவில் விஜய்வீர் சித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 12 தங்கம், 8 வெ...
நடிகர் பக்ருவுக்கு கொரோனா!

நடிகர் பக்ருவுக்கு கொரோனா!

CINI NEWS, helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
நடிகர் பக்ருவுக்கு கொரோனா! கொரோனா மீண்டும் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தி நடிகர் நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி வருகிறார்கள். இரு தினங்களுக்கு முன்பு இந்தி நடிகர்கள் அமீர்கான், கார்த்திக் ஆர்யன், மாதவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் பக்ருவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழில் அற்புத தீவு, தலை எழுத்து, 7-ம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பக்ரு. மலையாளத்தில் அதிக படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி தற்போது வீட...
சென்னையில் இன்று தொடங்கிய தபால் வாக்குப்பதிவு!

சென்னையில் இன்று தொடங்கிய தபால் வாக்குப்பதிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்களுக்கு தபால் ஓட்டு அளிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. கொரோனா தொற்று காலத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதால், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்று திறனாளிகள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு போடும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த புதிய நடைமுறை மூலம் வயதானவர்கள் தங்கள் வாக்கினை வீடுகளில் இருந்தே பதிவு செய்யலாம். வாக்குச்சாவடிக்கு வரத் தேவையில்லை. சென்னை மாவட்டத்தில் தபால் ஓட்டு போடுவதற்கு விருப்பம் உள்ள முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. 12 ஆயிரம் பேர் தபால் ஓட்டு போட விண்ணப்பித்து இருந்தனர். அதனை ஆய்வு செய்தததில் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 7,300 பேர் மட்டுமே தபால் ஓட்டு போடுவதற்கு இறுதி செய்யப்பட்டனர். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற ...
ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் !

ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் !

helth tips, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் மையங்கள்- 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் ! தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கூறியதாவது, தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொது மக்களின் ஒத்துழைப்பு இன்னும் தேவைப்படுகிறது. ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் பன்மடங்கு கொரோனா தொற்று உயர்ந்துள்ளது. கர்நாடகா, டெல்லி, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவல் ஏறுமுகமாகவே உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மகாராஷ்டிரா மாதிரி பன்மடங்கு உயராமல் படிப்படியாகத்தான் உயருகிறது. கொரோனா பன் மடங்கு உயராமல் தடுக்க பொதுமக்கள் இந்த காலகட்டத்தில்தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முககவசம் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொள்ளு...
கலைஞர் கருணாநிதி வழியில் அமைச்சர் ஜெயக்குமார்….நம்ப முடியாத உண்மை!

கலைஞர் கருணாநிதி வழியில் அமைச்சர் ஜெயக்குமார்….நம்ப முடியாத உண்மை!

NEWS
திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம் எழுதுவதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருருந்தார். உடன்பிறப்பே என்று தொடங்கும் அந்த வரிகளில் தான் கோடிக்கணக்கான தொண்டர்களை தன்வசப்படுத்தி இருந்தார். அதேபோல இப்போது அமைச்சர் ஜெயக்குமார் தன் ராயபுரம் தொகுதி மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை வீடுதோறும் அனுப்பியுள்ளார்.அந்தக் கடிதத்தில் இடம் பெற்றுள்ள வரிகள் இதோ! என்னுடலின் உயிர்மூச்சாய் என்னை இயக்கிக் கொண்டிருக்கும் ராயபுரம் தொகுதி சொந்தங்களே! 1991 முதல் இதே தொகுதியில் உங்கள் பெருவாரியான ஆதரவோடு சட்டமன்ற உறுப்பினராக இப்போது வரை இருந்து கொண்டிருக்கிறேன். இதோ இந்த முறை ஏழாவது தடவையாக புரட்சித்தலைவர், இதயதெய்வம் அம்மா ஆகியோர் நல்லாசியுடன் உங்கள் வேட்பாளராக உங்களை தேடி வருகிறேன். நினைவிருக்கிறதா? இத்தனை ஆண்டுகளில் எத்தனை தேர்தல் வந்தபோதும் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை சந்திக்க நான் வருகிறேன். யோசித்துப...
1,900 சிறிய மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு!

1,900 சிறிய மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு!

helth tips, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதலில் மருத்துவர்கள், நர்சுகள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முன்கள பணியாளர்களில் 5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக முதியவர்களுக்கும், நாள் பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 23 லட்சத்துக்கு மேற்பட்டவருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதற்காக தடுப்பூசி மையங்களை அ...