சாதிவாரி விவரங்களை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து பாமக ராமதாசுக்கு “கொட்டு” வைத்த கோர்ட்!
சாதிவாரி விவரங்களை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து பாமக ராமதாசுக்கு "கொட்டு" வைத்த கோர்ட்!
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டோரின் சாதிவாரி, வகுப்புவாரி விவரங்களை வழங்க உத்தரவிடக் கோரிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பாமக தலைவர் ராமதாஸ் சார்பில், உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் சாதி வாரியாக கணக்கு குறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், 1989ஆம் ஆண்டு முதல் இதுவரை பணிக்குத் தேர்வு செய்யப்பட்டோரின் விவரங்களைச் சாதி வாரியாக விவரம் வெளியிட தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கு தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், சட்டம் ஒழுங்...









