ஜெ., பிறந்த நாளில் EPS-OPS ஆதரவாக உதயமாகிறது அம்மா டிவி, நமது அம்மா நாளிதழ்..!
அ.தி.மு.க., அதிகாரபூர்வ நாளிதழாக இருந்த, ‘நமது எம்.ஜி.ஆர்.,’ மற்றும் ஜெயா, ‘டிவி’ ஆகியவை, தற்போது சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களை, அ.தி.மு.க.,விலிருந்து ஓரங்கட்டி விட்டதால், அ.தி.மு.க.,விற்கென புதிய நாளிதழ் மற்றும், ‘டிவி’ துவக்க, ஒருங்கிணைப்பாளர்,பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்,பழனிசாமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.
நம் தமிழகத்தில் உள்ள எல்லாக் கட்சிகளும் தங்களுக்கெனத் தனியாக தொலைக்காட்சி வைத்துள்ளன. ஆனால் சசிகலாவிடமிருந்து ஓபிஎஸ் தலைமையில் தனி அணியாக பிரிந்தபிறகு அவர்களுக்கென ஒரு தனி தொலைக்காட்சி இல்லாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஜி டிவி என்ற பெயரில் இயங்கி வந்த சேனல் ஒன்று தொடர்ச்சியாக நடத்த முடியாமல் மூடப்பட்டது. அந்த சேனலை ஓபிஎஸ் அணி விலை பேசி வாங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக பல கோடிகள் கைமாறியதாகவும் தெரிகிறது. அந்த தொலைக்காட்சி...









