பாகிஸ்தானில் மக்களின் ஒருநாள் சராசரி வருமானம் ரூ.600க்கும் குறைவு: அதிர்ச்சி தகவல்!
பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 34 சதவீதம் பேர், நாளொன்றுக்கு வெறும் ரூ.588 வருமானத்தில் வாழ்கின்றனர் என்று உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி வெளியிட்ட பாகிஸ்தான் வளர்ச்சி புதுப்பிப்பு, இரு வருட அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் உயர்ந்து வரும் விலைவாசி, ஏழைக் குடும்பங்களை அதிகமாகப் பாதிக்கிறது.
உணவு மற்றும் எரிபொருளுக்காக மட்டுமே அவர்கள் தங்கள் பட்ஜெட்டில் அதிகப் பங்கைச் செலவழிக்கும் சூழல் உள்ளது.
உலக வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஏழைகள் தங்கள் மொத்த நுகர்வில், 50 சதவீதத்தை உணவுப் பொருட்களுக்கு செலவிடுகின்றனர்.
நடப்பு நிதியாண்டில் உடனடி தீர்வு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், பாகிஸ்தான் பெரும் கடன் சுமைக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்துள்ளது.
தொடர்ந்து அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
அதிகரிக்கும் ...









