சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

பள்ளிகளில் உடல் ஆரோக்யத்தை கட்டாயமாக்க வேண்டும் – கிருத்திகா உதயநிதி பேச்சு

பள்ளிகளில் உடல் ஆரோக்யத்தை கட்டாயமாக்க வேண்டும் – கிருத்திகா உதயநிதி பேச்சு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை அமைப்பின் தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் செயலாளர் ருக்மிணிதேவி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். 35 வயது முதல் 100 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளில் நடந்த ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் போட்டிகளில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்கள் அடுத்து தஞ்சாவூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அடுத்தடுத்து இந்தியா, ஆசியா மற்றும் உலக அளவில் போட்டிகள் நடக்க இருக்கின்றன. நடிகர் ஆர்யா, இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஊக்கப்படுத்தியதோடு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 55+ வயது...
இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம், சுனாமி தாக்குதல்… பலி உயரும் அபாயம்..!

இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம், சுனாமி தாக்குதல்… பலி உயரும் அபாயம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த பேரலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகள் சுனாமி பேரலையில் சிக்கி இடிந்து விழுந்தன. ஏராளமானோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர் இந்நிலையில், இன்று பிற்பகல் நிலவரப்படி நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்ததாக அந்நாட்டின் ப...
ஆந்திராவில் மகாத்மா காந்திக்கு கோயில் – சந்திரபாபு நாயுடு திறந்து வைக்கிறார்

ஆந்திராவில் மகாத்மா காந்திக்கு கோயில் – சந்திரபாபு நாயுடு திறந்து வைக்கிறார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராடி இந்தியாவுக்கு விடுதலை பெற்றுதந்த தேசப்பிதா மகாத்மா காந்திக்கு நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவருக்கென கோயில் ஏதும் உருவாக்கப்படவில்லை. இந்நிலையில், ஆந்திர மாநிலம், பழைய விஜயவாடா நகரில் உள்ள சய்யாட் அப்பாலா சுவாமி கல்லூரி வளாகத்தில்  மகாத்மா காந்திக்கு எழுப்பப்பட்டுள்ள கோயிலை திறந்து வைத்து சிறப்பிக்குமாறு இந்த கோயிலை நிர்மாணித்த சுதந்திரப் போராட்ட தியாகி உப்புலுரி மல்லிகார்ஜுனா சர்மா என்பவர் ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்றுகொண்ட சந்திரபாபு நாயுடு, வரும் 2-ம் தேதி 150-ம் ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தன்று நாட்டிலேயே முதன்முறையாக தேசப்பிதா மகாத்மா காந்திக்கு விஜயவாடாவில் கட்டப்பட்டுள்ள கோயிலை திறந்து வைக்கிறார். தமிழக கிராமங்களில் இன்னமும் மக்க...
சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி !- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி !- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத் தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணிய ஸ்தலம் சபரிமலை. மஹிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலை களுக்கிடையே ஒரு ‎மலையின் உச்சி யில் 914 மீட்டர் உயரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு 10 முதல் 50 ‎வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை ‎மேற்கொள்வதில்லை. மேலும் கோயிலுக்குள் செல்வதற்கு ‎அனுமதியும் வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த ‎வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரியப் பருவத்தில் இருக்கும் பெண்கள் இங்கு ‎வருவதை தடை செய்யப்பட்டதாலும் மேலும் இதர பல ‎காரணங்களாலும் பொதுவாக பெண்கள் இந்தக் கோயிலுக்கு ‎வருகை புரிவதில்லை என்ற நிலையில் சபரிமலை கோயில் வழிப்பாட்டில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தர்விட்டு பெண்களை ...
அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு இரண்டு மாநிலத்தில் வாக்காளர் அட்டை…?! வைரல் ஆகும் பரபரப்பு !

அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு இரண்டு மாநிலத்தில் வாக்காளர் அட்டை…?! வைரல் ஆகும் பரபரப்பு !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திருப்பதியில் வாக்காளர் அட்டை வைத்திருக்கும் சத்ய நாராயணன் அதிமுகவின் தி.நகர் எம்.எல்.ஏ. ஆனது எப்படி ? தி.நகர் அதிமுக எம்.எல்.ஏவாக இருக்கும் சத்யா என்கிற சத்தியநாராயணன் 2011-16ல் சென்னை மாநகராட்சியின் 130 வார்டு கவுன்சிலராக இருந்தார். சி.எம்.டி.ஏவில் நியமன குழு உறுப்பினராகவும் இருந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்த போது, தி.நகரில் மட்டுமே வாக்குரிமை உள்ளதாக அபிடவிட்டில் கூறியுள்ளார். ஆனால் ஆந்திரா மாநிலம் சித்தூர் தொகுதியில் திருப்தியில் 257/பிளாட்405, 4வது மாடி, பத்மாவதி டவர்ஸில் வீடு இருக்கிறது. இந்த முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை எண்.AYM 2119387..ஆனால் பிறந்த தேதி மாறியுள்ளது..10.6.1963 என்று உள்ளது. உண்மையான பிறந்த தேதி 27.2.1963.. 13.10.2016 சத்யாவுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.. இந்த தகவல் உ...
முதல்வரை அடிப்பேன்…  திமிர் பேச்சு… அதிகாலையில் கருணாஸ் கைது..!

முதல்வரை அடிப்பேன்… திமிர் பேச்சு… அதிகாலையில் கருணாஸ் கைது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
முதல்வரை அடிப்பேன்ன்னு அவர் பயப்படுகிறார். ஒரு நாளைக்கே சரக்குக்கு மட்டும் 1 லட்சம் செலவு செய்றேன் என்பது உட்பட பல சர்ச்சை கருத்தை பொது மேடையில் திமிராக பேசிய கருணாஸ் இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம...
உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாமில் நடிகர் கார்த்தி பேச்சு

உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாமில் நடிகர் கார்த்தி பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், வீடியோ
  உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாமில் நடிகர் கார்த்தி பேச்சு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் பிரசாந்த் ஆஸ்பத்திரியும் இணைந்து சென்னையில் சினிமா பத்திரிகையாளர்கள், சினிமா பி.ஆர்.ஓ., உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த இலவச மருத்துவ முகாமை தமிழ் சினிமாவின் கடைக்குட்டி சிங்கம் நடிகர் கார்த்தி துவக்கி வைத்து பேசும்போது: பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைக்க என்னை அழைத்ததற்கு முதலில் இந்த சங்கத்தின் நிர்வாகிகளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். சங்கம் நடத்துவது அத்தனை சுலபம் இல்லை. அதிலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிற பத்திரிகையாளர்கள் சங்கத்தை நடத்துவது ரொம்ப சிரமம். சங்க வேலைகள் பெரும் நேரத்தை எடுத்துக் கொள்ளும். குடும்பத்தை கவனிக்கவே முடியாமல் போய்விடும். https://you...
தாமரையின் ரெக்கார்டு ரெய்டு…! சிக்கிய பிரபலத்தின் சீக்ரெட்..!! அதிர்ச்சியில் நடிகை ஷாக்..!!!

தாமரையின் ரெக்கார்டு ரெய்டு…! சிக்கிய பிரபலத்தின் சீக்ரெட்..!! அதிர்ச்சியில் நடிகை ஷாக்..!!!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
தாமரையின் ரெக்கார்டு ரெய்டு...! சிக்கிய பிரபலத்தின் சீக்ரெட்..!! அதிர்ச்சியில் நடிகை ஷாக்..!!! செய்தியின் தலைப்பை பார்த்ததும் ஏதோ சினிமா செய்திபோல என்று நினைத்தால் இன்னும் நீங்கள் பச்சபுள்ளையாகவே இருக்கிறீர்கள் என்று அர்த்தம்... அதேநேரம், இதில் ஏதோ ஒரு அரசியல் கலந்திருக்கிறது என்று யோசித்திருந்தால் சபாஷ்... போட்டுக் கொள்ளுங்கள்... சமீபத்திய தமிழக நிகழ்வுகளில் அடிக்கடி பேசப்படுபவை வருமானவரித்துறை ரெய்டு... அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகளை மட்டுமே குறிவைத்த ரெய்டு சமீப காலமாக அதிகாரிகள் வீடுகளுக்கும் பரவியிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு சாதமாக நடந்து கொள்ளாமல்போனால் இதுபோன்ற ரெய்டு பயமுறுத்தல்கள் எல்லா ஆட்சியிலும் வழக்கமான ஒன்றுதான். அதிலும் கடந்த 4 ஆண்டுகளில் வருமானவரித்துறை இத்தகைய ரெய்டுகளிலேயே பல மாநிலங்களில் ஆட்சிமாற்றங்கள் நடந்திருக்கிறது என்றாலும் அது மிகையில்லை... விஷயம் ரெ...
காவலாளி ஒரு திருடன் – பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

காவலாளி ஒரு திருடன் – பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:- பிரதமர் மோடி, தான் பிரதமர் ஆக விரும்பவில்லை, நாட்டின் காவலாளியாக இருக்கவே விரும்புவதாக கூறினார். ஆனால், காவலாளி ஒரு திருடன் என்று நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு ‘ரபேல்’ விமான பேரத்தில் இந்த அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளது. ரூ.9 ஆயிரம் கோடி வங்கிப்பணத்தை கொள்ளையடித்த விஜய் மல்லையாவை தப்ப விட்டுள்ளது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கை என்ற பெயரில், மோடி சாதாரண மக்களை வங்கி முன்பு வரிசையில் நிற்க வைத்தார். 15 தொழில் அதிபர்களின் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தார். அவரால் விவசாயிகள் கடனை ரத்து செய்ய முடியாதா? இவ்வாறு அவர் பேசினார்...
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு – அப்பல்லோ பரபரப்பு தகவல்

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு – அப்பல்லோ பரபரப்பு தகவல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய விசாரணை கமி‌ஷனின் காலம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து மீண்டும் நீட்டிக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர், அப்பல்லோ ஆஸ்பத்திரி நர்சுகள், பிசியோதெரபிஸ்ட்கள், டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர், செயலாளர் என அனைத்து தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. விச...