ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

NEWS

தென் ஆப்பிரிக்க அழகி 2017 மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார்

தென் ஆப்பிரிக்க அழகி 2017 மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார்

HOME SLIDER, NEWS, செய்திகள்
சமீபத்தில் 2017 மிஸ் உலக அழகியா இந்தியாவின் அரியானவை சேர்ந்த மனுஷி சில்லர் தேர்ந்து எடுக்கபட்டார். உலகின் இரண்டாவது போட்டியான்   66 வது மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டி  அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாசில் நடைபெற்றது. இதில் மொத்தம் 92 நாட்டு அழகிகள் கலந்து கொண்டனர். இந்தியாவை சேர்ந்த மிஸ் திவா சாந்தா சசிதர், இந்தியா சார்பில் கலந்து கொண்டார். இவர் இறுதி போட்டிக்கு தேர்வான முதல்15 அழகிகள் பட்டியலில் கூட இடம்பெற முடியவில்லை. மிஸ் யூனிவர்சாக தேர்ந்து எடுகப்பட்ட டெமிக்கு பிரான்சின் ஐரிஸ் மிடேனெரெரால்,  கிரீடம் சூட்டினார். அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஸ்டீவ் ஹார்வி மற்றும் சூப்பர் மாடல் ஆஷ்லே கிரஹாம் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து  வழங்கினர். இந்த போட்டியில் ஜமைக்கா, வெனிசுலா, தாய்லாந்து, மற்றூம் கொலம்பியா ஆகிய நாடு அழகிகள் முதல் 5 இடத்திற்கு வந்தனர்.  ஜமைக்கன் அழகு டேவினா பென்னட் இரண்டாவது ரன்னர்...
“அன்பு செழியனை தண்டிக்க வேண்டும்” நடிகை பூர்ணா

“அன்பு செழியனை தண்டிக்க வேண்டும்” நடிகை பூர்ணா

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் கடன் தொல்லையால் தற்கொலை செய்த சம்பவம் பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பைனான்சியர் அன்பு செழியன் வட்டிக்கு மேல் வட்டி கேட்டு மிரட்டியதாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளதால் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பு செழியனை தேடி வருகிறார்கள். இந்த நிலையில், அன்பு செழியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும், நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நடிகை பூர்ணா டுவிட்டரில் அன்பு செழியனை கண்டித்து கருத்து பதிவிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:- “அசோக்குமார் சிறந்தவர்களில் எப்போதும் சிறந்தவராக இருக்கிறார். நல்ல மனம் படைத்தவர். நீங்கள் எங்களை விட்டு போக முடியாது. எப்போதும் எங்களுடனேயே இருக்கிறீர்கள். அன்பு செழியன் போன்றவர்கள் சினிமாவில் இருக்கக்கூடாது. இந்த உலகத்தை விட்டு அசோக்குமார் சென்...
வைரமுத்து – ஏ.ஆர்.ரகுமான் இருவரையும்  மலை உச்சியில் 5 நாட்கள் ஆனந்த சிறை வைத்த மணிரத்னம்

வைரமுத்து – ஏ.ஆர்.ரகுமான் இருவரையும் மலை உச்சியில் 5 நாட்கள் ஆனந்த சிறை வைத்த மணிரத்னம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  ஏ.ஆர்.ரகுமான்-வைரமுத்து கூட்டணியுடன் மணிரத்னம் தனது புதிய பட வேலையை தொடங்கி இருக்கிறார். கோவா அருகில் உள்ள மலை உச்சியில் பாடல் ‘கம்போசிங்’ நடந்தது. ‘காற்று வெளியிடை’ படத்தையடுத்து மணிரத்னம், ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, பகத்பாசில், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தனது படத்தில் பாட்டுக்கு தனிக்கவனம் செலுத்தும் மணிரத்னம், தனது வெற்றிக்கூட்டணியான கவிஞர் வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரையும் பாடல் ‘கம்போசிங்’குக்காக ஒரு மலை உச்சிக்கு அழைத்து சென்று 5 நாட்கள் ஆனந்த சிறை வைத்துவிட்டார். கோவாவில் இருந்து 4 மணி நேரம் சாலை வழியே பயணித்தால், மராட்டிய மாநிலத்தின் மலைக்குன்றில் சென்று முடிகிறது. அதுதான் இந்தியாவின் மேற்கு எல்லை. அந...
என் மகள்களால் எனக்கு பெருமை கிடைத்திருக்கிறது – பிரபல இந்திப் பட டைரக்டர் மகேஷ் பட்

என் மகள்களால் எனக்கு பெருமை கிடைத்திருக்கிறது – பிரபல இந்திப் பட டைரக்டர் மகேஷ் பட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  பிரபல இந்திப் பட டைரக்டர் மகேஷ் பட், தனது வாரிசுகளான இரண்டு இளம் நடிகைகளை களத்தில் இறக்கி விட்டிருக்கிறார். மூத்தவரான ஆலியா பட் ஏற்கனவே முன்னணி இடத்தை பிடித்திருக்க, சகோதரி ஷஹீன் பட் திரை உலகில் முன்னுக்கு வர அதிவேகம் காட்டிக்கொண்டிருக்கிறார். பிசியாக இருக்கும் இவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் சந்திக்கவைத்தபோது குடும்பத்தை பற்றிய ருசிகரமான பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள். ஆலியா பட்: நாங்கள் மூவரும் சேர்ந்து இருப்பது போன்ற போட்டோ உள்ளபடியே ரொம்ப அழகானது. நாங்கள் மூவரும் ஒரே துறையிலிருந்தாலும் இதுவரை நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டதில்லை. இந்த போட்டோ எங்களை இணைத்திருக்கிறது. மகேஷ் பட்: என் மகள்களால் எனக்கு பெருமை கிடைத்திருக்கிறது. தன்னைவிட தன் குழந்தைகள் புகழ் பெறவேண்டும் என்று தான் எல்லா அப்பாக்களும் விரும்புவார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். என் ஆசை நிறைவேறிவிட்...
கேபிள் டி.வி உரிமையாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நேரடியாக இணைக்கப்பட உள்ளனர்- விஷால்

கேபிள் டி.வி உரிமையாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நேரடியாக இணைக்கப்பட உள்ளனர்- விஷால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  நெல்லை மாவட்டம் அம்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விஷால் நடிக்கும் இரும்புத்திரை என்ற புதிய சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. அம்பை ஆற்றுச்சாலை, தாமிரபரணி ஆறு, அம்பை தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடிகர் விஷால் நடித்து வருகிறார். இதற்காக அம்பை தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதி, ராணுவ பயிற்சி மையம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. நேற்று ராணுவ மையத்தில் இருந்து விஷால் வெளியே நடந்து வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்கிடையே அம்பை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில் விஷால் கலந்துரையாடல் நடத்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– புதுப்படங்களின் ப...
நான் தான் ஜெயலலிதாவின் மகள்: உரிமை கோரி பெங்களூர் பெண் அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

நான் தான் ஜெயலலிதாவின் மகள்: உரிமை கோரி பெங்களூர் பெண் அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது எப்படி பரபரப்புடன் அவரது செய்கைகள் இருந்ததோ அதே போல அவர் மரணத்திற்கு பிறகும் அவர் குறித்த செய்திகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை என்கிற அளவுக்கு பரபரப்புகள் வந்து கொண்டேதான் இருக்கிறது. மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் ஜெ தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோரி உரிமை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதாவும் (வயது 38) ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரியுள்ளார். ஜெயலலிதா தன் சொந்த தாய் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய அம்ருதா, இதுகுறித்து  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், ஜெயலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஜெய...
பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை

பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இயக்குனர் சசிக்குமாரின் மைத்துனர் அசோக்குமார், பைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் நெருக்கடி அதிகரித்த நிலையில், அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டார். கந்துவட்டி கொடுமை காரணமாக அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அசோக்குமாரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது போலீசார் தேடுவதை அறிந்த அன்புச்செழியன் குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அன்புச்செழியனுக்கு எதிராக காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்  அனுப்பி உள்ளது. வெளிநாடுகளுக்கு அவர் தப்பிச் செல்வவதை  தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  ...
RK நகர் இடைத்தேர்தல் விவரங்கள்

RK நகர் இடைத்தேர்தல் விவரங்கள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி சென்னை மாவட்டத்தற்குட்பட்ட ஆர்.கே.நகர் சட்ட மன்ற தொகுதிக்கு வருகின்ற டிசம்பர்-21 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான சட்டம் ஒழுங்கு பார்வையாளரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளின் அட்டவணை பின்வருமாறு வேட்பு மனுதாக்கல் துவக்க நாள்- 27.11.2017 (திங்கட்கிழமை) மனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாள்- 04.12.2017 (திங்கட்கிழமை) வேட்பு மனு பரிசீலனை- 05.12.2017 (செவ்வாய்கிழமை) வேட்புமனுவினை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள்- 07.12.2017 (வியாழக்கிழமை) தேர்தல் நாள்- 21.12.2017 (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நாள்- 24.12.2017(ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடவடிக்கைகள் இந்த நாளுக்கு முன்பாக முடிவுறும் நாள் 26.12.2017(செவ்வாய்கிழமை) இந்த தேர்தலை முன்னிட்டு காவல்துறை சட்ட ஒழுங்கு பார்வையாளராக இம்மானுவேல்...
ராஜுமுருகன் கதை, வசனத்தில் ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’புதிய படம்

ராஜுமுருகன் கதை, வசனத்தில் ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’புதிய படம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது.  தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனத்தை எழுதுகிறார்.திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்த படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார். இப்படம் குறித்து ராஜுமுருகனிடம் பேசிய போது ரங்கா எப்படி இந்த படத்திற்குள் வந்தார் என்கிற விஷயத்தை சுவாரஷ்யமாக சொன்னார்.  “எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வது போலத்தான் வாழ்க்கையிலும் சில ஈரமான சம்பவங்கள் நிகழ்ந்து விடுகிறது. அடர்த்தியான கதை, எளிமையும் அழகியலுமான திரைக்கதை, நல்ல தயாரிப்பாளர் எல்லாம் அமைந்துவிட்டது. இதன் பிறகு தொடர்ந்து கதாநாயகனுக்கான தேடலில் இருந்தோம். பலரையும் பார்த்து எதுவும் சரியாக அமையாமல் சலித்து போன நேரத்தில் நண்பர் ...
பங்களாவை விற்று கடனை அடைத்தேன்: பார்த்திபன்

பங்களாவை விற்று கடனை அடைத்தேன்: பார்த்திபன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
கடனை அடைத்தது பற்றி பார்த்திபன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:- நான் சினிமா பைனான்சியர் பல பேர் கிட்ட வட்டிக்கு பணம் வாங்கி இருக்கேன். அதுல அன்பும் ஒருவர். வாங்குன பணத்தை ஒத்துக்கிட்ட வட்டியோட சொன்ன தேதியில் கொடுக்க, நான் முதன் முதலாக வாங்குன பங்களாவை கூட வித்திருக்கிறேன். ஆனால் யார்கிட்டயும் தலைகுனிஞ்சி நின்றதில்ல. அந்த திமீர் என்னைப் பிடிச்சிருக்கு. எனக்கும் பிடிச்சிருக்கு. நாலு படத்தில் நடிச்சி கடனை அடிச்சிட்டு மறுபடியும் படம் எடுப்பேன். அது தான் எனக்கு ஏற்படுகிற விடுமுறை. நான் ஆதங்கப்பட்டு குரல் கொடுக்கிறது சக நண்பர்களின் பிரச்சினைகளுக்கு மற்றபடி நான் சந்திக்கிற பிரச்சினைகளை சவாலாகத்தான் எதிர்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்....