சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

கேரளாவில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

கேரளாவில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்ததால் அங்கு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 26 ஆயிரத்து 729 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா தொற்று குறைந்ததால் அங்கு பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு தெர்மல் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை நடத்தி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். வகுப்புகளுக்கு வர விரும்பாத மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பாடங்களை படிக்கலாம் எனவும் அரசு அறிவித்து உள்ளது. ஒன்று முதல் 9-ம் வகுப்பு வ...
பணியில் இருக்கும் போது டிரைவர்கள் செல்போன் பயன்படுத்த தடை!

பணியில் இருக்கும் போது டிரைவர்கள் செல்போன் பயன்படுத்த தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:- ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்துவதாலும், நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்து உரையாடுவதாலும் அதிக விபத்து ஏற்படுகிறது. ஓட்டுநர்கள் பணியின் போது சட்டையின் மேல் பாக்கெட்டில் செல்போன் வைத்திருக்க கூடாது. அதனை நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிவடைந்த பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டும். நடத்துநர் பகல் நேரங்களில் முன் இருக்கையில் அமராமல் பின்புறம் கடைசி இருக்கையில் அமர்ந்து இரண்டு படிகளையும் கண்காணிக்க வேண்டும். பணி நேரத்தில் ஓட்டுநர்கள் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது....
9 கிலோ எடையில் உள்ள மார்பகங்களை அறுவை சிகிச்சை செய்ய நிதி திரட்டு 21 வயது பெண்!

9 கிலோ எடையில் உள்ள மார்பகங்களை அறுவை சிகிச்சை செய்ய நிதி திரட்டு 21 வயது பெண்!

CINI NEWS, NEWS, உலக செய்திகள்
  இங்கிலாந்தில் பெரிய மார்பக்கத்தால் அவதிப்படும் இளம்பெண் ஒருவர் தனது மார்பக அறுவை சிகிச்சைக்காக மக்களிடம் நிதி உதவி கோரியுள்ளார். இயைற்கையாகவே மனித உடல் அமைப்பு என்பது தனித்துவமானது. ஒவ்வொரு மனிதரின் உடலும் மற்றொரு மனிதனிலிருந்து பல வழிகளில் மாறுபட்டதாக இருக்கும். இதில் பலர் தங்களது உடல் அமைப்பில் மகிழ்ச்சி கொள்கின்றனர். ஆனால், ஒரு சிலர் தங்கள் உடல் அமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு காரணமாக இருப்பது பெரும்பாலும் உடல் தோற்றத்தை அடையாளமாக மாற்றி கேலி, கிண்டல் செய்வதாலேயே இருக்கும். அந்தவகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த கார்லி ஸ்மார்ட் (21), என்ற பெண் தனது பெரிய மார்பகங்களால் பல இன்னல்களுக்கு ஆளாகி வந்துள்ளார். அதன் காரணமாக தனது மார்பகத்தை சிறியதாக மாற்ற அறுவை சிகிச்சை செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.   இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷையரில...
கண்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

கண்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கண்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் வாக்கு சேகரித்து வாக்காளர்களை கவர்ந்துள்ளார். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கண்களைக் கட்டிக்கொண்டு நூதன முறையில் வாக்கு சேகரித்தார். கண்களை கட்டியதால் தள்ளாடியபடி சென்ற வேட்பாளரை கட்சி நிர்வாகிகள் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.   இந்த கண் கட்டு எதற்காகவாம் என்றால், “ வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை தீர்த்த பிறகுதான் வாக்காளர்களின் முகத்தை பார்ப்பாராம்” இந்த  பாஜக தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன்.   எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...!...
ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
  முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:- ஐ.சி.சி. உலகக்கோப்பையை 5-வது முறையாக வென்றுள்ள யாஷ்துல் தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 1000 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை பெற்ற இந்திய ஆண்கள் சீனியர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்....
மாஸ்க் இனி வேண்டாமாம் மூக்கை மறைக்கும் “கோஸ்க்” அணிந்தா போதுமாம் – இது தென் கொரியா கலாட்டா

மாஸ்க் இனி வேண்டாமாம் மூக்கை மறைக்கும் “கோஸ்க்” அணிந்தா போதுமாம் – இது தென் கொரியா கலாட்டா

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கொரோனா பரவலை தடுக்க மூக்கை மட்டும் மறைக்கும் வகையிலான புதிய வகை மாஸ்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு கோஸ்க் (Kosk) என்று பெயரிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள மாஸ்க் அணிவது, கைகளை சானிட்டைசர் மூலம் சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது ஆகிய நடமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மாஸ்க்கை பொறுத்தவரை சர்ஜிக்கல் மாஸ்க், என்95 மாஸ்க் என பல்வேறு மாஸ்க்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோல, தங்கத்திலான மாஸ்க், விதவிதமான ஃபேன்சி மாஸ்க்களும் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில், தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று, மூக்கை மற்றும் மறைக்கும்வகையிலான புதிய வகையான மாஸ்க்கை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு கோஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. மூக்கு ...
பாண்டி முதல்வர் ரங்கசாமியுடன் கைகோர்த்து பாஜகவை எதிர்த்து ”பாண்டி” ஆட தயாரான விஜய்!

பாண்டி முதல்வர் ரங்கசாமியுடன் கைகோர்த்து பாஜகவை எதிர்த்து ”பாண்டி” ஆட தயாரான விஜய்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  நடிகர் விஜய் உடன் புதுச்சேரி முதல்வர் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பு நடிகர் விஜய்-ன் பனையூர் வீட்டில் நடைபெற்றுள்ளது. இப்போதைக்கு நேரடி அரசியல் இல்லை என்றாலும் நடிகர் விஜய் செயல்பாடுகளும் அவரது ரசிகர்களின் செயல்பாடுகளும் வருங்கால அரசியல் பாதைக்கு விஜய் தயார் ஆவதை சொல்லாமல் சில்கிறது. நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் பல மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் திமுக வெற்றிக்காக பிரசாரத்தில் ஈடுபட்டனர். இப்போது நடைபெற உள்ள  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் களமிறங்கி உள்ளது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றிகளை பெற்றிருந்தனர். அவர்கலை தனது பண்ணை வீட்டுக்கு அழைத்து விஜய் விருந்து வைத்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்த்க்கது. அதைப் போலவே,  நடைபெற உல்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிகளை கைப்பற்றும் என எதிர...
திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழு உறுப்பினராக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிர்வாகி நியமனம்!

திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழு உறுப்பினராக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிர்வாகி நியமனம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சென்னை ஆலோசனைக் குழு உறுப்பினராக (Local Advisory Committee, Chennai) நியமிக்கப்பட்டுள்ளார்.  
”மெல்லிசை ராணி” பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

”மெல்லிசை ராணி” பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92. மும்பையை சேர்ந்த ‛பாலிவுட்' பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். அவரது மறைவால் திரையுலகினரும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.   இந்திய இசையுலகில் மெல்லிசை ராணியாக சுமார் அரை நூற்றாண்டு காலம் வலம் வந்தவர் லதா மங்கேஷ்கர். இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 மொழிகளில் ...
சென்னை புத்தகக் கண்காட்சி டிக்கட்டுகளை இன்று முதல்  இணையத்தில் வாங்கலாம்!

சென்னை புத்தகக் கண்காட்சி டிக்கட்டுகளை இன்று முதல் இணையத்தில் வாங்கலாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இன்று முதல் பபாசி இணைய தளத்தில் சென்னை புத்தகக் கண்காட்சி டிக்கட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு வருடம் ஜனவரி முதல் வாரம் சென்னை புத்தகக் கண்காட்சி நடப்பது வழக்கமாகும்.   இம்முறை புத்தக் கண்காட்சி குறித்து அறிவிப்புகளை பபாசி அமைப்பினர் வெளியிட்ட நிலையில் கொரோனா மூன்றாம் அலை தாக்குதல் கடுமையானது. எனவே புத்தகக் கண்காட்சி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பபாசி அமைப்பினர் சென்னை புததக் கண்காடசிய நடத்த அனுமதிக்குமாறு தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து புத்தகக் கண்காட்சி நடத்த அனுமதி அளித்தார். அதன்படி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 16 முதல் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என பபாசி அமைப்பு அறிவித்தது. இந்த புத்தகக்...