சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

முதல் பாகத்தை விட 2ம் பாகம் விறுவிறுப்பாக இருக்கும் – கோலிசோடா இயக்குனர் தகவல்

முதல் பாகத்தை விட 2ம் பாகம் விறுவிறுப்பாக இருக்கும் – கோலிசோடா இயக்குனர் தகவல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோலி சோடா 2. சமுத்திரகனி, பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. எடிட்டிங், ஸ்டண்ட் பெரிய அளவில் பேசப்பட்ட படம் கோலி சோடா. கடுகு படத்தில் ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தது. கோலி சோடா 2 படத்துக்கு முழு எடிட்டிங் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்றார் எடிட்டர் தீபக். அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள், நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் வேலை பார்த்தது எங்கள் கேரியரில் உதவும். இது ஒரு டீம் ஒர்க் என்றார் பரத் சீனி. சமுத்திரகனி சார் படப்பிடிப்பில் மிகவும் ஆதரவாக இருந்தார். விஜய் மில்டன் சார், படப்பிடிப்பில் தான் வசனங்களையே கொடுப்ப...
இயக்குனர் அமீர் மீது வழக்கு பதியப்பட்டது தனி மனித சுதந்திரத்தை பறிக்க திட்டமிட்ட சதி..! TMJA கண்டனம்

இயக்குனர் அமீர் மீது வழக்கு பதியப்பட்டது தனி மனித சுதந்திரத்தை பறிக்க திட்டமிட்ட சதி..! TMJA கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இயக்குனர் அமீர் மீது வழக்கு பதியப்பட்டது தனி மனித சுதந்திரத்தை பறிக்க திட்டமிட்ட சதி..! தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்(TMJA) தமிழகத்தில் நடைபெறும் “தொடர் போராட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கா?, அரசியல் காரணங்களுக்கா?” என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில்  (08.06.2018) கோவையில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் திமுக சார்பில் திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பாஜக சார்பில் திருமதி தமிழிசை சவுந்தரராசன், சிபிஐ (எம்) சார்பில் தோழர். பாலகிருஷ்ணன், அஇஅதிமுக சார்பில் திரு. செம்மலை எம்.எல்.ஏ., தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் திரு. ஞானதேசிகன், கொங்கு இளைஞர் பேரவை சார்பில் திரு. உ. தனியரசு எம்.எல்.ஏ., இந்திய குடியரசுக் கட்சி சார்பில் திரு. செ.கு. தமிழரசன் இவர்களோடு இயக்குநர் திரு.அமீர் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து ...
கில்டு தேர்தல் பொய் பிரச்சார வீடியோ வெளியிட்ட ஜாக்குவார் தங்கம் – அதிர்ச்சியில் விஷால்

கில்டு தேர்தல் பொய் பிரச்சார வீடியோ வெளியிட்ட ஜாக்குவார் தங்கம் – அதிர்ச்சியில் விஷால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
தயாரிப்பாளர் சங்க இடத்தை காட்டி பொய் பிரச்சாரத்தில் ஈடுபடும் ஜாக்குவார் தங்கம் விஷால் அதிர்ச்சி தமிழ் திரைப்படத் துறையினருக்காக முதல்வர் கருணாநிதி அவர்களால் பையனூர் பகுதியில் 95 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெப்சி தொழிலாளர் குடியிருப்புக்கு 50 ஏக்கரும், ஸ்டுடியோ, மருத்துவ மனை, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பணிகளுக்கு 15 ஏக்கரும் என பெப்சிக்கு மட்டும் 65 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலம் அப்போது தலைவராக இருந்த வி.சி.குகநாதன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 ஏக்கர் நிலம் சின்னத்திரை நடிகர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், 10 ஏக்கர் நடிகர் சங்கத்துக்கும் , 10 ஏக்கர் தமிழ் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   தயாரிப்பாளர் கில்டு அமைப்புக்கு எந்த நிலமும் ஒதுக்கப்படவில்லை. உண்மை இப்படியிருக்க கில்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற...
கேன்சர் நோயாளிகளுக்கு உதவ இசை ஆல்பத்தில் நடித்த இனியா..!

கேன்சர் நோயாளிகளுக்கு உதவ இசை ஆல்பத்தில் நடித்த இனியா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
இனியாவின் இசை ஆல்பம்    இனியா ... தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள பட உலகிலும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை. மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல் இயல்பாக பழகக் கூடியவர். நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்தை அதிக அளவில் நேசிக்கக் கூடியவர். அதனால் மியா என்ற நடனப் பெண் ஒருவரின் வாழ்க்கைப் பதிவை 8 நிமிட வீடியோ ஆல்பமாக “மியா” என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்.                                                        மியா துடிப்புள்ள ஒரு பெண். பிரபல டான்ஸராகி கொடி கட்டி பறக்க வேண்டும் ..விருதுகளை வாங்கி குவிக்க வேண்டும். இது தான் அந்தப் பெண்ணின் வாழ்க்கை லட்சியம். அந்த லட்சியத்தை அடைய போராடுகிறாள் எவ்வளவோ தடைக்கற்கள். ஆனால் லட்சியத்தை அடைய வேண்டுமென்றால் முயற்சியை கை விடக் கூடாது என்று போரடுகிறாள் அந்த முயற்சி எப்படி வெற்றியாகிறது..இது தான் மியாவின் பதிவு  “ வானத்தில் பறக்க   சிறகுகள்...
சத்தமில்லாமல் போய் தூத்துக்குடியில் ஆறுதல் சொன்ன விஜய்..!

சத்தமில்லாமல் போய் தூத்துக்குடியில் ஆறுதல் சொன்ன விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சத்தமில்லாமல் பைக்கில் வந்து ஆறுதல் கூறிய விஜய். தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியானவர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறும் திரையுலக பிரபலங்களில் விஜய் மனித நேயத்துடன் நடந்து கொண்டார். ரஜினி போவதற்கு முன் நான் நடிகனாக போகிறேன் மக்களை சந்தோஷப்படுத்த என்று சொல்லிவிட்டு... அங்கே போய் மக்கள் நன்மைக்காக போரடியவர்களை சமூக விரோதிகள் என் சொல்லிவிட்டு வந்த ரஜினியின் "சினிமா அரசியல்" ... முன்பாக அறிவித்து ஆர்ப்பாட்டமாக போய் திரும்பிய கமல் அரசியல்... இவைகளுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அறிவிப்பு இல்லாமல் பைக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளுக்கு பந்தா இல்லாமல் போன நடிகர் விஜய் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவரே..! - கோடங்கி...
8 ஆண்டுகளுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் தினேஷ் கார்த்திக் – சாதிப்பாரா? சறுக்குவாரா?

8 ஆண்டுகளுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் தினேஷ் கார்த்திக் – சாதிப்பாரா? சறுக்குவாரா?

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பேஸ்ட்மேனாக இருக்கும் இவர் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியை வழிநடத்தினார். கடந்த 2004-ம் ஆண்டு மும்மையில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 19 வயதில் தினேஷ் கார்த்திக் அறிமுகமானார். அதன்பின்னர், தோனி இந்திய அணிக்குள் நுழைந்ததும் அவரது சிறப்பான செயல்பாட்டால் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. விக்கெட் கீப்பராக தோனி இருக்கும் நிலையில், மற்றொரு விக்கெட் கீப்பரை சேர்க்க அணி நிர்வாகம் விரும்பவில்லை. கடைசியாக 2010-ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிரான போட்டி தினேஷ் கார்த்திக் விளையாடிய கடைசி டெஸ்ட்  ஆகும். அதன் பின்னர், இம்மாதம் 14-ம் தேதி பெங்களூரில் நடக்க உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அவர் விளையாட உள்ளார். முதலில் விருத்திமான் சாஹா தேர்வாகியிருந்தார். காயம் காரணம...
துப்பாக்கிச்சூட்டில் பலியான மீதமுள்ள 6 பேரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி

துப்பாக்கிச்சூட்டில் பலியான மீதமுள்ள 6 பேரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் 30-ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, 7 பேரது உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்...
ஒரு குப்பைக் கதை படத்தை பாராட்டிய வைகோ..!

ஒரு குப்பைக் கதை படத்தை பாராட்டிய வைகோ..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
சத்யஜித்ரே படம் போல இருக்கிறது" ; ஒரு குப்பை ​கதைக்கு வைகோ பாராட்டு  சமீபத்தில் தயாரிப்பாளர் அஸ்லம் தயாரிப்பில் அறிமுக இயக்குந​ர் காளி ரங்கசாமி இயக்கத்தில் 'ஒரு குப்பைக்​கதை' படம் வெளியானது.. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிகசிறந்த படம் என படம் பார்த்தவர்களும், பத்திரிகை, ஊடகங்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி வரும் நிலையில் இந்த சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கொண்ட இந்தப்படத்தைக்​ கட்டாயம் பார்க்கவேண்டும் என மதிமுக கட்​சியின் பொதுச்செயலாளர் ​வைகோ வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த வைகோ ​ இந்தப்படம் குறித்து மிகவும் சிலாகித்து, தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.. "பெண்கள் அனைவரும் சமீபத்தில் வெளியாகியுள்ள 'ஒரு குப்பை கதை' படத்தை பார்க்...
எந்த நேரத்திலும் மெஜாரிட்டியை அதிமுக அரசு நிரூபிக்க தயார்: அமைச்சர் காமராஜ் பேட்டி

எந்த நேரத்திலும் மெஜாரிட்டியை அதிமுக அரசு நிரூபிக்க தயார்: அமைச்சர் காமராஜ் பேட்டி

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி உரிமையை பெற்றதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெரும் பங்கு உள்ளது. சட்ட வல்லுனர்களை கொண்டு சரியான வாதத்தை முன்வைத்ததன் மூலமாக காவிரி விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைத்துள்ளது. மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஆனால் 80 அடி நீர் இருந்தால் மட்டுமே அணையை திறக்க முடியும் என்பது வழக்கம். இருப்பினும் குருவை சாகுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மு.க.ஸ்டாலின் காவிரி பிரச்சினையை உணர்வு பூர்வமாக அணுகவில்லை. அரசியலாகவே பார்க்கிறார். சட்டமன்ற கூட்டத்தொடரில் தூத்துக்குடி பிரச்சினையை காரணம் கா...
சர்ச்சையை கிளப்பியுள்ள எப்.ஐ.ஆர் – துப்பாக்கிச்சூடு குறித்து புகாரே அளிக்கவில்லை என்கிறார் அதிகாரி

சர்ச்சையை கிளப்பியுள்ள எப்.ஐ.ஆர் – துப்பாக்கிச்சூடு குறித்து புகாரே அளிக்கவில்லை என்கிறார் அதிகாரி

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டை தொடர்ந்து வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது. தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து தூத்துக்குடி வடபாகம், சிப்காட், தென்பாகம் போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதில் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் புகார் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலராக கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். கோபால் ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலராக பணியில் உள்ளார். துப்பாக்கி சூடு விவகாரத்தில் போலீசார் தவறுதலாக தனது பெயரை பயன்படுத்தியத...