ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மண்ணை கவ்விய பாஜக…! ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி… !!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மண்ணை கவ்விய பாஜக…! ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி… !!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மண்ணை கவ்விய பாஜக...! ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி... !! நவம்பர் மாதம் 30 தேதியிலிருந்து டிசம்பர் 20-ம் தேதிவரை மொத்தம் ஐந்து கட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. வெறும் 81 தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்தில் மிகுந்த பாதுகாப்போடு தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று 23.12.2019 வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டன. ஆரம்பம் முதலே  காங்கிரஸ் ஜார்கண்ட முக்திமோட்சா கூட்டணியும், பா.ஜ.க.வும் மாறி, மாறி முன்னிலை வகித்தன. இறுதியில் காங் கூட்டணி 46 தொகுதிகளிலும் 24 தொகுதிகளை பா.ஜ.க.வும் வென்றது. இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியின் முதல்வர் வேட்பாளராக சிபுசோரனின் மகன் ஹேமந் சோரனும், பா.ஜ.க. சார்பாக சிட்டிங் முதல்வர் ரகுபார் தாஸிம் களம் கண்டனர். அதில்  ஹேமந்த் அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வென்றார். அதே நேரத்த...
ஹூஸ்டன் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தமிழக முதல்வர் ஒரு கோடி வழங்கினார்..!

ஹூஸ்டன் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தமிழக முதல்வர் ஒரு கோடி வழங்கினார்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றும், உலகம் முழுவதும் 7 கோடி மக்களுக்கும் அதிகமானோர் பேசும் மொழியுமான தமிழை அனைவரும் படிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த இருக்கையை அமைப்பதற்காக கடந்த ஆண்டு ‘ஹூஸ்டன் தமிழ் இருக்கை’ என்ற தொண்டு நிறுவனம் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் பங்குத் தொகையாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை, ஹுஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சாம் கண்ணப்பன் அவர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்....
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் பேரணி..!

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் பேரணி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இது பேரணி அல்ல ,போர் அணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது. சென்னை எழும்பூரில் தொடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது.இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர் திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.இதன் பின்பு ராஜரத்தினம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் தலைவர்கள்...
டாப் 100 இடங்களில் முதலிடம் விராட்கோலி , ரஜினிக்கு 13ம் இடம்  விஜய்,அஜீத்,தனுஷ் இடம் பிடித்தனர்..!

டாப் 100 இடங்களில் முதலிடம் விராட்கோலி , ரஜினிக்கு 13ம் இடம் விஜய்,அஜீத்,தனுஷ் இடம் பிடித்தனர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  இந்திய அளவில் 2019-ம் ஆண்டில் டாப் 100 இடங்களில் உள்ள பிரபலங்களின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். ஆண்டுதோறும் ஊதியம் மற்றும் மக்களிடம் வரவேற்பை பெற்றதன் அடிப்படையில் டாப் 100 இடங்களை பிடிக்கும் பிரபலங்களின் பெயர்களை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய அளவில் இந்த ஆண்டுக்கான 100 பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய அணியின் கேப்டன் கோலி முதலிடத்தில் உள்ளார். மற்றொரு கிரிக்கெட் வீரர் தோனி 5-வது இடத்திலும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் இந்தியா வரலாற்றில் ஒரு கிரிக்கெட் வீரர் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். இதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர்களான ரிஷப் பண்ட் (30வது இடம்), ஹர்திக் பாண்டியா (3...
ப்ரமோஸ் ஏவுகணையின் பாகம் கரை ஒதுங்கியது

ப்ரமோஸ் ஏவுகணையின் பாகம் கரை ஒதுங்கியது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ப்ரமோஸ் ஏவுகணையின் பாகம் கரை ஒதுங்கியது.* *கடலூர் அருகே தாழங்குடா பகுதியில் ப்ரமோஸ் ஏவுகணையின் ஒருபாகம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு.* * கரை ஒதுங்கி உள்ள ஏவுகணையின் பாகம் பெரிய பந்து வடிவில் உள்ளது.*
விக்ரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு 90 வயது பாட்டி போட்டி..!

விக்ரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு 90 வயது பாட்டி போட்டி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டமாக நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து அணைத்து ஊராட்சிகளிலும் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 90 வயது மூதாட்டி கனகவல்லி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சுமார் 5000 வாக்குகள் கொண்ட இந்த ஊராட்சியில் இதுவரை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே தலைவர்களாக இருந்துவருகின்றனர். கனகவல்லியின் கணவர் அழகேசபூபதி நான்கு முறையும், இவர்களது மகன் பார்த்தசாரதி இரண்டுமுறையும் தலைவர்களாக இருந்துள்ளனர். தற்போது போட்டியிடும் கனகவல்லியும் 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஊராட்சிமன்ற தலைவராக இருந்துள்ளார். தற்போது இந்த தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தலைவர் பதவிக்கு போ...
50 பைசா நிலுவைத் தொகை நோட்டீஸ் – SBI அட்ராசிட்டி

50 பைசா நிலுவைத் தொகை நோட்டீஸ் – SBI அட்ராசிட்டி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ராஜஸ்தானில் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் ஒருவருக்கு 50 பைசா நிலுவை தொகையை கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜுன் ஜுனு பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். இவர் அந்த பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஜன்தன் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியுள்ளார். நீண்ட நாட்களாக கணக்கில் பண புழக்கம் ஏதும் செய்யாமல் இருந்த நிலையில் ஜிதேந்திர குமாருக்கு வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அந்த அறிவிப்பில் ஜிதேந்திர குமார் வங்கி கணக்கில் 50 பைசா நிலுவை தொகை செலுத்த வேண்டியது இருப்பதாகவும், உடனடியாக அதை செலுத்தாத பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கண்டு ஜிதேந்திரகுமார் மற்றும் அவர் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜிதேந்திரகுமாரின் 50 பைசா நிலுவை தொகையை கட்ட சென்ற அவரது தந்த...
பிஜேபி கட்சியில் ஐக்கியம் ஆக ஜீவஜோதி முடிவு..!

பிஜேபி கட்சியில் ஐக்கியம் ஆக ஜீவஜோதி முடிவு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிஜேபி கட்சியில் ஐக்கியம் ஆக ஜீவஜோதி முடிவு..! சென்னையில் மிக பிரபலமாக இருக்கும் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கிடைக்கக் காரணமாக இருந்தவர் ஜீவஜோதி. தன் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல ஆண்டுகளாக கடும் சட்டப் போராட்டங்களை நடத்தி தீர்ப்பு வாங்கியவர். ராஜகோபால் மறைவுக்கு பின் இவரைப்பற்றி தகவல் எதுவும் தெரியாமல் இருந்தது. இப்போது இவர் விரைவில் பா.ஜ.க-வில் சேர இருப்பதாகவும் முக்கியப் பதவி கிடைக்க இருப்பதாகவும் தகவல் ஒன்று பரவி உள்ளது. இதற்கிடையில் பா.ஜ.க-வைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் , ஜீவஜோதியை சந்தித்து பேசியுள்ளனர். இதையடுத்து, சென்னையில் வானதி சீனிவாசனைச் சந்தித்துப் பேசினார் ஜீவஜோதி. கருப்பு முருகானந்தம் ஒரு வகையில் கணவர் சாந்தகுமார் வழியில் உறவுக்காரர். அதனால் அவர் ஆலோசனைப்படி ...
தமிழ் சினிமாவை டிரண்டிங் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக அழிக்கும் கேப்மாரி புரொமோட்டர்கள்..!

தமிழ் சினிமாவை டிரண்டிங் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக அழிக்கும் கேப்மாரி புரொமோட்டர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    தமிழ் சினிமாவை டிரண்டிங் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக அழிக்கும் கேப்மாரி புரொமோட்டர்கள்..! தமிழ் சினிமா 100 ஆண்டுகளை தாண்டி தனது சாதனை பயணத்தை தொடர்கிறது. தொழில்நுட்பம் மாற மாற திரைத்துறையில் பல மாற்றங்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக டிரண்டிங் என்ற வார்த்தையை பயன்படுத்தி தயாரிப்பாளர்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கும் கூட்டம் பட புரொமோஷன் என்ற பெயரில் உலா வருகிறார்கள். முன்பெல்லாம் ஒரு படத்தை பற்றிய செய்திகளை முழுமையாக கொடுத்த பத்திரிக்கைகளுக்கு இணையாக இணைய தளங்கள் அதிகரித்தது. இந்த இணைய தளங்கள் மூலம் உலகம் முழுதும் பட செய்திகள் ஒரு நொடியில் பகிரப்பட்டு அது தயாரிப்பாளர்களுக்கு வியாபார ரீதியாக பலன் தந்தது. அதன் பின் இப்போது 280 எழுத்துக்களில் படத்தை டிரண்டிங் செய்கிறோம் அதுவும் இந்திய அளவில், உலக அளவில் என ஒரு சில கேப்மாரி புரொமோட்டர்கள் தயாரிப்பாளர்களை ...
விஜயகாந்த மகன் விஜய பிரபாகரனுக்கு திருமணம்..!

விஜயகாந்த மகன் விஜய பிரபாகரனுக்கு திருமணம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  *நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன். கட்சி நடவடிக்கைகளில் தலைகாட்டி வரும் இவர், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு கோவை பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. கோவை - பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பெண்ணை கரம் பிடிக்க உள்ளார். குடும்ப உறுப்பினர்கள் பலரும் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர்.*...