செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூகவியலாளர், சமூக சேவகர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா, முசாபர்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது பீகார் போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததற்கு தி.மு.க. தலைவர...
பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி  மாமல்லபுரத்தை சுற்றியுள்ள 44 கிராமங்களில் மீன் பிடிக்க தடை

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி மாமல்லபுரத்தை சுற்றியுள்ள 44 கிராமங்களில் மீன் பிடிக்க தடை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி மாமல்லபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாமல்லபுரம் சுற்று வட்டாரத்தில் உள்ள கடப்பாக்கம் முதல் கொட்டிவாக்கம் வரை உள்ள 44 மீனவ கிராமங்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் என மீன் வளத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மீன் வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஈச்சம்பாக்கம் பகுதியில் இருந்து புதுப்பட்டினம் வரையிலும் உள்ள கிராம மக்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லலாம். ஆனால் அவர் கட்டாயம் தங்களது அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் கடல...
விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு!

விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  காப்பான் படத்தில் விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு! சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'காப்பான்' படத்தில் விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் விவசாயிகளோடு நேரில் சந்தித்தார். பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை அப்பட்டமாகப் படமாக்கி, விவசாயிகளின் புரட்சிக் குரலாக முழங்கி இருக்கும் நடிகர் சூர்யாவையும் இயக்குநர் கே.வி.ஆனந்தையும் விவசாயிகள் பாராட்டினார்கள். கடைக்கோடி மக்களுக்கும் புரியும் வண்ணம் விவசாய பிரச்னைகளை உரத்துச் சொல்லி, பெரிய அளவிலான கார்பரேட் நிறுவனங்கள் பின்னுகிற சதி வலைகளை அம்பலப்படுத்தி காப்பான் படம் மிகப்பெரிய விவசாயப் புரட்சிக்கே வித்திட்டிருக்கிறது. விவசாயிகள் நலனில் இவ்வளவு அக்கறை...
தேர்தலில் கால் பதிக்க தனியார் ஏஜென்சியை அழைத்து பேசிய ரஜினிகாந்த்..!

தேர்தலில் கால் பதிக்க தனியார் ஏஜென்சியை அழைத்து பேசிய ரஜினிகாந்த்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த ரஜினி இப்போது பிசியாக மும்பையில் நடித்து வருகிறார். ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றிய பிறகு அரசியலுக்கான பல்வேறு நடவடிக்கைகளை ரகசியமாக ரஜொனி தரப்பு எடுத்து வருவதாக கூறப்புடுகிறது. 2021ல் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல் தான் தனது இலக்கு என்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார்… அடுத்த வருட இறுதியில் மதுரை அல்லது திருச்சியில் மிகவும் பிரம்மாண்டமான மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் ரஜினி.. இந்நிலையில், மும்பையில் பிரசாந்த் கிஷோர் என்பவரை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு சில மணி நேரங்கள் தொடர்ந்திருக்கிறது.. யார் இந்த பிரசாந்த் கிஷோர்... அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் , பிரதமர் மோடி ஆட்சி அமைக்கவும், பீஹாரில், முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆட்சி அமைவதற்கும், ஆந்திர சட்டசபை தே...
தீரன் திரைப்படத்தின் நிஜ ஹீரோ துவக்கி வைத்த தற்காப்புக்கலை சங்கம்

தீரன் திரைப்படத்தின் நிஜ ஹீரோ துவக்கி வைத்த தற்காப்புக்கலை சங்கம்

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  "தீரன் திரைப்படத்தின் நிஜ ஹீரோ துவக்கி வைத்த தற்காப்புக்கலை சங்கம்" அனைத்திந்திய மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் அமைப்பின் அங்கிகாரம் பெற்ற தமிழ்நாடு மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சங்கத்தின் துவக்க விழா மற்றும் பொறுப்பாளர் நியமன நிகழ்ச்சி, சென்னை கீழ்ப்பாக்கதில் உள்ள ஓய்.எம் சி.ஏ. அரங்கில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. திரு.எஸ்.ஆர். ஜாங்கிட்.ஐ.பி.எஸ். அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சங்கத்தின் இணையதள பக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். தி.ரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள், ஒன்பது வருடங்களுக்கு மேலாக, தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பயங்கர கொலை கொள்ளை குற்றங்களை செய்து வந்த பவாரியா கொள்ளை கும்பலை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் கார்த்தி நடிப்பில் வ...
அமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் பிரபல ஓவியர் ஏபி ஸ்ரீதர்

அமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் பிரபல ஓவியர் ஏபி ஸ்ரீதர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  *அமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர்* அமேசான் காடுகள் உலகின் மிக பெரிய காடாக விளங்குகிறது. இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படுகிறது. காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்டுத்தீ யை கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள், இராணுவ விமானங்கள், தன்னார்வலர்கள் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து போராடுகின்றனர். இந்நிலையில், பிரபல ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர் தனது ஓவியங்கள...
சிங்கப்பூரில் மெழுகு சிலையான பாலிவுட் கனவுக்கன்னி ஸ்ரீதேவி..!

சிங்கப்பூரில் மெழுகு சிலையான பாலிவுட் கனவுக்கன்னி ஸ்ரீதேவி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  சிங்கப்பூரில் ஸ்ரீதேவியின் அச்சு அசலான மெழுகு சிலை..! தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி பின்னர் பாலிவுட் கனவு கன்னியாக இருந்த ஸ்ரீதேவி சமீபத்தில் துபாய் சென்ற போது திடீரென மரணம் அடைந்தார். இப்போது ஸ்ரீதேவி முழு உருவ மெழுகு சிலை ஒன்று சிங்கப்பூரில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த சிலை திறப்பில் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் கலந்து கொண்டனர். அம்மா ஸ்ரீதேவி சிலையாக தத்ரூபமாக கண்முன் நிற்பதை ஜான்வி பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது....
சந்திராயன் 2 நிலவை நெருங்கியது… விண்வெளி ஆராய்ச்சியில் சாதித்த இந்தியா..!

சந்திராயன் 2 நிலவை நெருங்கியது… விண்வெளி ஆராய்ச்சியில் சாதித்த இந்தியா..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விண்வெளி திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியா, வல்லரசு நாடுகளுக்கு சற்றும் சளைத்ததாக இல்லை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் விஞ்ஞானிகள், உலகின் எந்தவொரு நாட்டினாலும் இதுவரை ஆராயப்படாத நிலவின் தென் துருவப்பகுதியை ஆராய்ந்து அறிவதற்கு ரூ.1,000 கோடி செலவில் சந்திரயான்-2 என்ற விண்கல திட்டத்தை கையில் எடுத்ததே இதற்கு சான்று. சந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 5 முறை உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் 14-ந் தேதி, அதிகாலை 2.21 மணிக்கு பெங்களூரு அருகேயுள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ...
சென்னையில் ஹெலிகப்டர் ஆம்புலன்ஸ் சேவையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்… லண்டனில்  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சென்னையில் ஹெலிகப்டர் ஆம்புலன்ஸ் சேவையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்… லண்டனில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இங்கிலாந்தில் செயல்பட்டுவரும் ஆம்புலன்ஸ் சேவையைப் பார்வையிட்ட முதலமைச்சர்... ஆம்புலன்ஸ் சேவை குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.... சென்னையில் ஹெலிகப்டர் ஆம்புலன்ஸ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்... லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு சுகாதார மற்றும் வெப்ப மண்டல மருந்து ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டார் முதலமைச்சர்... தமிழகத்தில் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த உடன்பாடு... இங்கிலாந்தில் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அவசர காலத்தில் அவை செயல்படும் முறைகள் குறித்து, லண்டன் வாட்டர்லூவில் உள்ள மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்தையும் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுக...
அதி நவீன வசதிகளுடன் தொடங்கிய ரயில் ஆஸ்பத்திரி

அதி நவீன வசதிகளுடன் தொடங்கிய ரயில் ஆஸ்பத்திரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அதி நவீன வசதிகளுடன் தொடங்கிய ரயில் ஆஸ்பத்திரி..! உலகின் அனைத்து வசதிகளும் கொண்ட முதல் ரயில்  மருத்துவமனை   மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. இந்திய ரயில்வேயின் மைல்கல் என்று கூறப்படும் இந்த ரயிலில் ஏழு கோச்கள் உள்ளன. கிராமப்புற மக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே அனைத்துவித மருத்துவ சிகிச்சை பெறும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனை ரயிலில் அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்பட ஒரு நவீன மருத்துவமனையில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளன. ஃலைப்லைன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயங்கும் இந்த ரயிலில் இரண்டு ஆபரேசன் தியேட்டர், ஐந்து ஆபரேஷன் டேபிள் உள்பட உலகின் மிக நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. இந்த ரயில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நிற்கும் போது அந்த பகுதியில் உள்ளவர்கள் தங்களுக்கு இருக்கும் நோயிற்கு சிகிச்சை பெறு கொள்ளலாம். கண் பார்வை, காது கோள...