ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்!

இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்! தமிழ்நாட்டின் 16-வது சட்டசபையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் கடந்த 21-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. இது குறித்து சட்டசபையில் இடம்பெற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற விவாதம் நடந்தது. அவர்களின் கருத்துகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். 3 தினங்கள் சட்டசபையில் நடந்த விவாதத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்து பேசினார். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச...
மெட்ரோ ரெயிலில் 34 ஆயிரம் பேர் பயணம்!

மெட்ரோ ரெயிலில் 34 ஆயிரம் பேர் பயணம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மெட்ரோ ரெயிலில் 34 ஆயிரம் பேர் பயணம்! மெட்ரோ ரெயில் சேவை ஒரு மாதத்திற்கு பின்பு நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் 5 நிமிடத்திற்கு ஒரு சேவையும் மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு சேவையும் அளிக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ரெயில் நிலையங்களில் குளிர்சாதன வசதி தடை செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது. குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் அதிக அளவு பயணம் செய்தனர். முதல் நாளில் 29 ஆயிரம் பேர் பயணித்தனர். நேற்று இந்த எண்ணிக்கை 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், விமான நிலையங்களில் அதிக பயணிகள் பயணம் செய்தனர். அதேபோல ஆலந்தூர், திருமங...
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி!

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி! தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு விவகாரம் எதிரொலித்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக திமுக, அதிமுக இடையே  விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு திமுக ஒருபோதும் துணை நிற்காது, தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு பெறுவோம் என்றார். ‘அதிமுக ஆட்சியில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட தீர்மானம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது நீட் விவகாரம் குறித்து வலியுறுத்தினேன். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்கவேண்டும்’ என கேட்டுக்கொண்டார். இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வி...
இத்தாலியில் 28ந்தேதி முதல் வெளியே செல்லும் பொதுமக்கள் முக்கவசம் அணிய தேவையில்லை!

இத்தாலியில் 28ந்தேதி முதல் வெளியே செல்லும் பொதுமக்கள் முக்கவசம் அணிய தேவையில்லை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
இத்தாலியில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், வரும் 28ந்தேதி முதல் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவித்து உள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தொற்றின் 2வது அலை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. தொற்று பரவலை தடுப்பதில் தடுப்பூசி சிறப்பாக பணியாற்றுவதால், உலக நாடுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றனர். இத்தாலி நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேவேளையிலர, கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், அங்கு வருகிற 28ந்தேதி முதல்  பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு உள்ள வடமேற்கில் ...
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் – தமிழக முதல்வர் ஸ்டாலின்

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் – தமிழக முதல்வர் ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழக 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் உரையுடன தொடங்கியது. 24ந்தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தொடரில் நேற்று முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இன்று 2வது நாளாக  விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின்போது,  பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி, வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைவைத்தார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 20 விழுக்காட்டில் உள் ஒதுக்கீடாக வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு வழங்கப்பட்டிருக்கிறது. இதைச் ச...
வாகன சோதனையில் மதுபோதையில் இருந்தவரை போலீஸ் லத்தியால் அடித்ததால் போதை ஆசாமி மரணம்!

வாகன சோதனையில் மதுபோதையில் இருந்தவரை போலீஸ் லத்தியால் அடித்ததால் போதை ஆசாமி மரணம்!

HOME SLIDER, NEWS, செய்திகள், வீடியோ
  சேலம் வாழப்பாடி அருகே குடிபோதையில் தகராறு செய்த நபர் மீது போலீஸ்காரர் லத்தியால் தாக்குதல்: குடிபோதையில் தகராறு செய்த நபர் மரணம்! சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாப்பநாயகன்பட்டி சோதனைச்சாவடியில் மதுபோதையில் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை, காவலர் லத்தியால் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. https://youtu.be/wl-Eyt6_UlY இந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போதையில் வந்த முருகேசன் என்பவரின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். பைக்கை பறிமுதல் செய்த போலீசாரை போதையில் இருந்த முருகேசன் சில வார்த்தைகளை அநாகரிகமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீஸ்காரர் ஒருவர் லத்தியால் தாக்கினார். லத்தியால் போலீஸ்காரர் அடித்த நிலையில் முருகேசன் மயங்கி விழுந்தார். சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மதுபோதை முருகேச...
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு- அடையாறு போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு- அடையாறு போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு- அடையாறு போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்! திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி பல முறை கருகலைப்பு செய்ததாகவும் திரைப்பட நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். போலீசார் கைது செய்வதற்கு முன்பு மணிகண்டன் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு கடந்த 16-ந்தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து பெங்களூரு அருகே பதுங்கியிருந்த முன்னாள் அமைச்சரை கடந்த 20-ந்தேதி போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மணிகண்டனை வரும் ஜூலை 2-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி செல்வகுமார் ...
கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினார் இயக்குனர் சுசீந்திரன்!

கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினார் இயக்குனர் சுசீந்திரன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினார் இயக்குனர் சுசீந்திரன்! கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் சிம்புவின் ஈஸ்வரன் படத்தை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கி உள்ளார். கடந்த ஜூன் 14-ம் தேதி ஆன்லைனில் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி வகுப்பு நடத்திய சுசீந்திரன், அதன்மூலம் ரூ.5 லட்சம் நிதி திரட்டினார். அந்த தொகையை தான் தற்போது கொரோனா தடுப்பு பணிகளுக்காக அவர் வழங்கி உள்ளார். இயக்குனர் சுசீந்திரன், ரூ.5 லட்சத்துக்கான காசோலையை, நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினிடம் வ...
தமிழ் மிகவும் இனிமையான மொழி- கவர்னர் உரை!

தமிழ் மிகவும் இனிமையான மொழி- கவர்னர் உரை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ் மிகவும் இனிமையான மொழி- கவர்னர் உரை! தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழக சட்டசபை இன்று கூடியது. இதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: * தமிழ் மிகவும் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள். * அரசின் ஒவ்வொரு செயலும் சமூக நீதி, ஆண்-பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதியை அடிப்படையாக கொண்டிருக்கும். * தனக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எவ்வித பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படும். * அரசின் ஒவ்வொரு செயலும் சமூக நீதி, ஆண்-பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதியை அடிப்படையாக கொண்டிருக்கும். * தனக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எவ்வித பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படும். * உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்க...
ஊரடங்கில் தளர்வு – சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி!

ஊரடங்கில் தளர்வு – சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஊரடங்கில் தளர்வு - சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி! தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்தன. தற்போது அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வருகிற ஜூன் 21ந் தேதி முதல், அதிகபட்சம் 100 பேருடன் படப்பிடிப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது....