ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தமிழக சட்டசபை தேர்தல் ஒத்திவைப்பு இல்லை- தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு

தமிழக சட்டசபை தேர்தல் ஒத்திவைப்பு இல்லை- தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு

HOME SLIDER, NEWS, politics
தமிழக சட்டசபை தேர்தல் ஒத்திவைப்பு இல்லை- தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து தேர்தல் ஆணையம் சில முடிவுகளை எடுத்துள்ளது. பீகாரில் இருந்து 2 சுகாதார அதிகாரிகளை தமிழகத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி கேட்டு பெற்றுள்ளார். பீகாரில் கொரோனா கால கட்டத்தில் வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தேர்தல் பாதுகாப்பாக நடத்தப்பட்டது. அப்போது அங்கு சுகாதாரப் பணியில் அதிகாரிகள் சுதிர்குமார், ரோகினி ஆகியோர் ஈடுபட்டனர். அவர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். அந்த 2 அதிகாரிகளும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளோடு இணைந்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து மாதிரி வாக்குச்சாவடி மையத்தையும் பார்வையிட்டனர். அதன்பின்னர் தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத...
தேர்தலின்போது எந்த வாக்குச் சாவடிகளிலும் முறைகேடு செய்ய விடாதீர்கள்- மம்தா எச்சரிக்கை

தேர்தலின்போது எந்த வாக்குச் சாவடிகளிலும் முறைகேடு செய்ய விடாதீர்கள்- மம்தா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics
தேர்தலின்போது எந்த வாக்குச் சாவடிகளிலும் முறைகேடு செய்ய விடாதீர்கள்- மம்தா எச்சரிக்கை மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராமில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:- வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம். பாஜகவுக்கு வாக்களித்தால் நீங்கள் உங்களது 'தர்மத்தை பின்பற்ற முடியாது. நீங்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்ல வேண்டியிருக்கும், 'ஜெய் சியா ராம்' என்று சொல்ல முடியாது. ராமபிரான் துர்கா தேவியை வணங்குவார், ஏனென்றால் துர்கை மிகவும் உயர்வானவர். கடந்த மக்களவைத் தேர்தலின்போது அவர்கள் (பாஜக) கோல்தூர் பகுதியில் 2 வாக்குச்சாவடிகளில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றார்கள் என்பது எனக்குத் தெரியும். தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் சகோதரர்களே, இந்த முறை எந்த வாக்குச் சாவடிகளிலும் முறைகேடு செய்ய விடாதீர்கள். உங்கள் வாக்குகளை உங்கள் விருப்பப்படி செலுத்துங்கள்....
விஜயகாந்தை சந்தித்தார் டிடிவி தினகரன்!

விஜயகாந்தை சந்தித்தார் டிடிவி தினகரன்!

HOME SLIDER, NEWS, politics
விஜயகாந்த்தை அவரது அலுவலகத்தில் டிடிவி தினகரன் திடீரென சந்தித்தார். நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக - அமமுக கூட்டணி  அமைத்ததை தொடர்ந்து,இன்று சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை  அலுவலகத்தில்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழக  பொதுச்செயலாளர் TTV தினகரன் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்...
விஜயகாந்தை சந்திக்கும் டிடிவி! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன?

விஜயகாந்தை சந்திக்கும் டிடிவி! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன?

HOME SLIDER, NEWS, politics
விஜயகாந்தை சந்திக்கும் டிடிவி! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாளை விஜயகாந்தை சந்திக்கிறார். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மே 2ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் அதிமுக – திமுக கூட்டணிகளுடன் டிடிவி தினகரன், கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அணிகளும் களத்தில் இறங்கியுள்ளன. இதில் டிடிவி தினகரனின் அமமுகவுடன், விஜயகாந்தின் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்த கூட்டணியில், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும் மற்ற 4 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டன. அதிமுக கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் பிரிந்து வந்த தேமுதிகவுக்கு 60 இடங்களை அமமுக ஒதுக்கி இ...
உங்க புருஷன் வெளியூர் சென்றிருந்தாலும் கவலை வேண்டாம். நாங்கள் இருக்கிறோம் என தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு

உங்க புருஷன் வெளியூர் சென்றிருந்தாலும் கவலை வேண்டாம். நாங்கள் இருக்கிறோம் என தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு

HOME SLIDER, NEWS, politics
  தேர்தல் பிரசாரத்தில், உங்க புருஷன் வெளியூர் சென்றிருந்தாலும் கவலை வேண்டாம். நாங்கள் இருக்கிறோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் சலசலப்பு உண்டானது.   சர்ச்சையாகவும் காமெடியாகவும் பேசிவதில் புகழ்பெற்றவர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். பேச்சில் மட்டுமல்ல, சிறுவனை தனது காலணிகளை எடுக்கச் சொல்லி செயலிலும் சர்ச்சையில் சிக்கியவர். இயேசுநாதரைச் சுட்ட கோட்சே என்று ஒருமுறை கூறி சர்ச்சையில் சிக்கினார். பாடகி சுதா ரகுநாதனை பரதநாட்டியக் கலைஞர் என்று விழா ஒன்றில் மாற்றிக் கூறிய அமைச்சர் திண்டுக்கல் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியின் பேரன் ராகுல்காந்தி என்றார்.   தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை மறந்துவிட்டு, இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று இன்னொரு முறை ‘மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார். சட்னி சாப...
முகக்கவசம் அணியவில்லையா… அப்ப அபராதம் கட்டு!

முகக்கவசம் அணியவில்லையா… அப்ப அபராதம் கட்டு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் சிறப்பான வகையில் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 500-க்கு கீழ் பதிவானது. இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாக தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது முகக்கவசம் அணியவில்லை அபராதம் விதிக்கலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீதும் அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்....
வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6-ந்தேதி பொது விடுமுறை

வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6-ந்தேதி பொது விடுமுறை

HOME SLIDER, NEWS, politics
வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6-ந்தேதி பொது விடுமுறை தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் பொது விடுமுறை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. 19-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்....
ஒரே தொகுதி ஏழு முறை; வெற்றி நாயகனாக வலம் வரும் அமைச்சர்!

ஒரே தொகுதி ஏழு முறை; வெற்றி நாயகனாக வலம் வரும் அமைச்சர்!

NEWS
அரசியல் வரலாற்றில் பலரும் தொடர்ந்து, பலமுறை தேர்தலில் வேட்பாளராக நிற்பது உண்டு. ஆனால் எவ்வளவு பெரிய விஐபியாக இருந்தாலும் அவர்களும் கூட அவ்வப்போது தொகுதிகளை மாற்றிக் கொண்ட வரலாற்றை நாம் அறிந்திருப்போம்.ஆனால் தான் பிறந்த மண்ணில் தொடர்ந்து ஏழுமுறை தொகுதி மாறாமல் களம் காணும் ஒரே மனிதர் யார் என்றால் அவர்தான் அமைச்சர் ஜெயக்குமார். 1991 முதல் 2021 வரை ஏழு முறை ராயபுரம் தொகுதியின் ஒரே வேட்பாளர் யார் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லாமல் அதிமுக தலைமை இவரைத்தான் வெற்றி வேட்பாளராக களம் இறங்குகிறது. காரணம் தொகுதி மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் இவர்தான் என்பது அசைக்க முடியாத ஆணித்தரமான உண்மை. அதை நிரூபிக்கும் வகையில் கடந்த ஆறு தேர்தல்களில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது 7-வது முறையாக சந்திக்கும் இவர் ராயபுரம் மக்களின் குறைதீர்க்கும் மனுநீதிச்சோழனாய் வலம் வந்து கொண்டிருக்கிறார். ...
திடீரென ஆட்டோவில் பயணம் செய்த கமல்!

திடீரென ஆட்டோவில் பயணம் செய்த கமல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  திடீரென ஆட்டோவில் பயணம் செய்த கமல்! மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கோவையில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்த பின் தொகுதியில் வாக்கிங் போவதும், நடந்து போவதும் என அதிரடி காட்டும் கமல் இன்று திடீரென ஆட்டோ ஸ்டாண்ட் சென்று அங்கிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி பயணப்பட்டார். கமல் ஆட்டோ பயணத்தால் பரபரப்பான கோவையில் அடுத்த அதிரடியாக பாஜக வேட்பாளர் வானதியும் ஆட்டோவில் பயணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்....
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தம்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தம் கணக்கில் காட்டப்படாத பணம் பதுக்கப்படுவதை தடுக்கும் நோக்கத்துடன் 500, 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் மத்திய அரசு கைவிட்டது. அதன்பிறகு புதிய 500 ரூபாய், நோட்டுகளை மத்திய அரசு அறிமுகம் செய்தபோதும், 1000 ரூபாய் நோட்டுகளை புதிதாக அறிமுகம் செய்யவில்லை. அதற்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக ரூ.2000 நோட்டுகள் புழக்கம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்குர் அளித்த எழுத்துபூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:- 2018-ம் ஆண்டு மார்ச் 30-ந்தேதி நிலவரப்படி 336.2 கோடி ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இது மொத்த பணப் புழக்கத்தில் 3.27 ச...