ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

சர்வதேச சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது!

சர்வதேச சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, sports, சினி நிகழ்வுகள்
சர்வதேச சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது! விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி மேரி கோம், மில்கா சிங், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது. தற்போது கிரிக்கெட் வீரர் கபில் தேவ், பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவல், பிவி சிந்து, கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோரது படங்களும் தயாராகி வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இவர் இந்தியாவுக்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தமிழகத்திற்கு 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் பெற்று கொடுத்துள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் ஆவார்...
சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் காமெடி நடிகர்

சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் காமெடி நடிகர்

HOME SLIDER, NEWS, politics, நடிகர்கள்
சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் காமெடி நடிகர் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் ஒரு சிலர் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.  எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். அதன்பின் அக்கட்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது....
கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் மு.க.ஸ்டாலின் முதற்கட்ட பிரசாரத்தை இன்று தொடங்கினார்!

கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் மு.க.ஸ்டாலின் முதற்கட்ட பிரசாரத்தை இன்று தொடங்கினார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் மு.க.ஸ்டாலின் முதற்கட்ட பிரசாரத்தை இன்று தொடங்கினார்! தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று முதற்கட்டமாக கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினார். திருவாரூரில் திறந்த வேனில் பிரசாரம் செய்த அவர் பொதுமக்களிடையே பேசியதாவது: முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டத்திலிருந்து எனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளேன். பாஜக - அதிமுக கூட்டணியால் பாழ்பட்டுவிட்ட தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற துடிப்பு ஆர்ப்பரிக்கும் மக்களின் ஒவ்வொரு குரலிலும் எதிரொலிக்கிறது. நாங்கள் சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்! ஆட்சிக்கு வரப்போவதில்லை எனத் தெரிந்து விட்டதாலேயே, தேர்தல் அறிக்கையில்  எடப்பாடி பழனிசாமி ...
தேர்தல் பிரசாரத்தில் கமல் கார் கண்ணாடி உடைப்பு!

தேர்தல் பிரசாரத்தில் கமல் கார் கண்ணாடி உடைப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கமல்ஹாசனின் கார் மீது தாக்குதல் நடத்தியவரை பொதுமக்கள் பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.* காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். காந்திரோடு பகுதியில் பரப்புரையை முடித்துக்கொண்டு கமல்ஹாசன் கிளம்பும்போது வாலிபர் ஒருவர் அவரின் காரை வழிமறித்தார். இதையடுத்து கமல்ஹாசனின் பவுன்சர்கள் அவரை அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மீண்டும் அந்த நபர் கமல்ஹாசனின் கார் மீது ஏறி அவர் அமர்ந்திருந்த முன்பக்க கண்ணாடியை உடைத்தார். இதில் கண்ணாடி சேதமடைந்தது. பவுன்சர்கள் மீண்டும் அந்த நபரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். உடனே கமல்ஹாசன் தனது ஓட்டல் அறைக்கு கிளம்பி சென்றார். இதைப்பார்த்த மநீம தொண்டர்களும் பொதுமக்களும் சேர்ந்து தாக்குதல் நடத்திய நபரை பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்...
துரை முருகன் ஜாதி பாசத்தால் காற்றில் கரைந்த ஸ்டாலின் சவால்!

துரை முருகன் ஜாதி பாசத்தால் காற்றில் கரைந்த ஸ்டாலின் சவால்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  துரைமுருகனின் "ஜாதி" பாசத்தால் காற்றில் கரைந்த ஸ்டாலின் சவால்..! தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. அதன் காரணமாக நடக்க உள்ள 2021 சட்டசபை தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என பல மாதங்களுக்கு முன்பே ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சியில் தொடங்கி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பல்வேறு வகையான நிகழ்வுகளை நடத்தி தேர்தலுக்கு தயார் ஆனது திமுக. அதே நேரம் 1951ம் ஆண்டில் இருந்து கடந்த தேர்தல்வரை அரக்கோணம் தொகுதியை எந்த கட்சி வெற்றி பெருகிறதோ அந்த கட்சிதான் ஆட்சியை பிடித்த வரலாறு உண்டு. திமுக கோட்டையாக இருந்த அரக்கோணம் தொகுதியை தவறான வேட்பாளர் தேர்வால் அதிமுகவிடம் தொடர்ந்து 2 முறை இழந்து நிற்கிறது திமுக. இந்த சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் பனப்பாக்கம் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது " அரக்கோணம் தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. ரவி அமைச்சர்களுக்கு ...
கொரானா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்ட ஸ்டாலின்!

கொரானா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்ட ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics
கொரானா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்ட ஸ்டாலின்!   முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன். குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம். - மு.க. ஸ்டாலின்...
திருமண நிகழ்வில் நடந்த சுவாரஸ்யம்.. அமைச்சரை பாராட்டிய பாக்யராஜ்!

திருமண நிகழ்வில் நடந்த சுவாரஸ்யம்.. அமைச்சரை பாராட்டிய பாக்யராஜ்!

NEWS
நேற்று ஞாயிற்றுக்கிழமை மார்ச் 7 ம் தேதி மதியம் ஒரு மணி இருக்கும், சென்னை புரசைவாக்கம் தனியார் திருமண மண்டபத்தின் வாசல் முன்பு வந்து நிற்கிறது அமைச்சர் ஒருவரது கார்... அது இஸ்லாமிய பிரமுகர் ஒருவரது குடும்பத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. வந்தவர் யாரென அனைவரும் பாக்கிறார்கள்.... காரில் இருந்து இறங்கியவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பதை பார்த்ததும் மேடையில் பாடிக்கொண்டிருந்த இசைக் கலைஞர்கள் அப்போதே முடிவுக்கு வந்துவிட்டனர்,இனிமேல் நமக்கு வேலைக்காகாது அவரே பாடி விடுவார் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டது அவர்களை அறியாமல் மைக்கில் லேசாக ஒலித்தது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அமைச்சர் ஜெயக்குமார் மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். மற்றபடி அவருக்கு பாடும் நோக்கம் எதுவுமில்லை. ஆனால் இவர் ஏற்கனவே பல மேடைகளில் பாடல்களைப் பாடி மக்களை, தொண்டர்களை ரசிக்க...
ஒரே அறையில் கூட்டமாக நிற்க வைத்து நேர்க்காணல் நடத்தும் அதிமுக!

ஒரே அறையில் கூட்டமாக நிற்க வைத்து நேர்க்காணல் நடத்தும் அதிமுக!

HOME SLIDER, NEWS, politics
  அ.தி.மு.கவில் நடைபெறும் நேர்காணல் பரபரப்பு *அ.தி.மு.கவில் போட்டியிட வாய்ப்பு கோரி, 15 ஆயிரம் பணம் கட்டி விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று காலை 9 மணி முதல் நேர்காணல் நடைபெறுகிறது.* *Batch-Batch ஆக தலைமை அலுவலகமாடிக்கு அனுப்பப்படுகிறார்கள்.* *6 மாவட்டங்களுக்கு ஒரு பிரிவு அனுப்பப்படுகிறார்கள்.* *800 முதல் 1000 பேர் வரை செல்கிறார்கள்.* *இருக்கும் நாற்காவிகளில் அமர்ந்தவர்கள் போக மீதமுள்ளவர்கள் நெருக்கி அடித்து நிற்கிறார்கள்.* *அவர்கள் முன்னால், ஓ.பி.எஸ், இ.பி.எஸ், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பா.வளர்மதி, தமிழ் மகன் உசேன், முன்னாள் எம்.பி.வேணுகோபால் ஆகிய ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் தோன்றுகிறார்கள்.* *கே.பி.முனுசாமி அனனவரையும் வரவேற்று ஒரு நிமிடம் பேசுகிறார் -* *இ.பி.எஸ் 2 நிமிடம் பேசுகிறார்.* *புரட்சித் தலைவர் மற்றும் அம்மா ஆட்சியை மீண்டும் அமைக்க நாம் அனைவரும்...
ஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி

ஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி

HOME SLIDER, NEWS, politics
    ஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி ஸ்டாலின் தான் வராரு போர்டுகளை வைத்துக் கொள்ள தேர்தல் கமி‌ஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்துள்ளது. தி.மு.க. எவ்வாறு தேர்தல் பணிகள், பிரசாரங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் திட்டங்களை வகுத்து கொடுத்து வருகிறது. அதன்படி முதலில் முக்கியமான வாசகங்கள் வெளியிடப்பட்டு ஆங்காங்கே வைக்கப்பட்டன. விளம்பரமும் செய்யப்பட்டது. முதலில் ‘அ.தி.மு.க.வை புறக்கணிப்போம்’ என்ற வாசகம் வைக்கப்பட்டது. அதன் பிறகு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரசாரம் செய்யப்பட்டு அந்த தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று பிரசாரம் செய்தார். மேலும் பல்வேறு வாசகங்கள் கொண்ட பேனர்களும் வைக்கப்பட்டன. அதில் ‘ஸ்டாலின்தான் வராரு, விடியல் தர போறாரு’ என்ற வாசகம் அடங்கிய ...
வாழ்த்து மலர்கள்,வெற்றி மாலையாகட்டும் – ஸ்டாலின் கடிதம்

வாழ்த்து மலர்கள்,வெற்றி மாலையாகட்டும் – ஸ்டாலின் கடிதம்

HOME SLIDER, NEWS, politics
  வாழ்த்து மலர்கள்,வெற்றி மாலையாகட்டும்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மக்கள் பேரியக்கத்தின் தலைவர் எனும் பெரும்பொறுப்பைச் சுமந்திருக்கும் நான், உங்களைப் போன்ற உடன்பிறப்புகள் வழங்கிடும் ஊக்கத்தாலும் உணர்வுமிக்க ஒத்துழைப்பாலும் ஓய்வு பற்றி நினைக்காமல் களப்பணியே கண்ணான பணியென்று, கடிகாரம் ஓடும்முன் ஓடி, கழகத்தின் வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். கடும்பாதை - நெடும்பயணம் இதுதான் தேர்தல் களம் என்பதை அறிவேன். உறுதி குலையாத பயணத்தில் களைப்பு தோன்றாதபடி ஊக்கமும் உத்வேகமும் அளிக்கின்ற வகையில், மார்ச் 1-ஆம் நாள் என்னுடைய பிறந்தநாளில் உங்களிடமிருந்து குவிந்த இதயபூர்வமான வாழ்த்துகள் மனதிற்கு இதமளிக்கின்றன. இன்று, நேற்றல்ல… இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் பொழுதிலிருந...