ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

4ம் கட்ட ஊரடங்கு மே 31வரை நீடிப்பு

4ம் கட்ட ஊரடங்கு மே 31வரை நீடிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடு முழுவதும் கொரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட 3ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லையில் சில தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் 12 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை , திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் பெரும்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் தளர்வுகள் எதுவும் இல்லை. இதே போல நாடு முழுவதும் மே 31வரை ஊரடங்கு நீடிக்கப்படும் என்று மத்கிய அரசும் அறிவித்து உள்ளது....
அம்மா அரசு பெயரில் இயங்கும் அடிமை அரசு – கமல் காட்டம்

அம்மா அரசு பெயரில் இயங்கும் அடிமை அரசு – கமல் காட்டம்

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு என்று வழக்கம்போல கடுப்பை காட்டியிருக்கிறார் கமல்ஹாசன். இன்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு என பொங்கி இருக்கிறார் கமல்.   https://twitter.com/ikamalhaasan/status/1261973653320679425?s=19...
ஏழை எளிய மக்களின் வங்கி கணக்கில் உடனடியாக பணம் செலுத்துங்கள் – மோடி அரசுக்கு ராகுல் மீண்டும் கோரிக்கை

ஏழை எளிய மக்களின் வங்கி கணக்கில் உடனடியாக பணம் செலுத்துங்கள் – மோடி அரசுக்கு ராகுல் மீண்டும் கோரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஏழை எளிய மக்களின் வங்கி கணக்கில் உடனடியாக பணம் செலுத்துங்கள் - மோடி அரசுக்கு ராகுல் மீண்டும் கோரிக்கை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் நீண்ட நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டத்தை அறிவித்து உள்ளது. தேவை குறைந்துள்ள நேரத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் அர்த்தம் இல்லை. எனவே இந்த திட்டத்தை நான் எதிர்க்கிறேன். தொழிற்சாலைகளுக்கு நிதி ஆதாரங்களை அளிப்பதன் மூலம் பீகார் போன்ற மாநிலங்களில் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும். உணவும், பணமும்...
வருகிறது ஆம்பன் புயல்… கடலோர பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்!

வருகிறது ஆம்பன் புயல்… கடலோர பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    வருகிறது ஆம்பன் புயல்... கடலோர பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்! தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஆம்பன் புயல் என பெயரிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாக உள்ள ஆம்பன் புயல், வரும் 20ம் தேதி மேற்கு வங்காளம்- வங்காளத் தேசத்தை ஒட்டிய கடற்பகுதியில் கரை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் காரணமாக வங்கக் கடல் பகுதியில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். புயலால் தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யும்....
கொரானாவை இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா அழிக்கும் – டிரம்ப்

கொரானாவை இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா அழிக்கும் – டிரம்ப்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    உலகம் முழுவதும் கொரானா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டிவிட்டது. அமெரிக்காவில் அதிக அளவில் கொரானா பாதிப்பும், உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி இல்லாத கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், கொரானா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி எனக்கு மிகவும் நல்ல நண்பர் என்பது உங்களுக்குத் தெரியும். கொரானாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும். இந்தாண்டு இறுதிக்குள் கொரானாவுக்கு தடுப்பூசி மருந்து கிடைத்துவிடும் என நம்புகிறேன். தடுப்பூச...
எயிட்ஸ் நோயில் தப்பிக்க காண்டம் எப்படியோ அதே போல கொரானாவிலிருந்து தப்பிக்க மாஸ்க் அவசியம் – WHO அட்வைஸ்

எயிட்ஸ் நோயில் தப்பிக்க காண்டம் எப்படியோ அதே போல கொரானாவிலிருந்து தப்பிக்க மாஸ்க் அவசியம் – WHO அட்வைஸ்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  எயிட்ஸ் நோயில் தப்பிக்க காண்டம் எப்படியோ அதே போல கொரானாவிலிருந்து தப்பிக்க மாஸ்க் அவசியம் - WHO அட்வைஸ் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பிக்க காண்டம் பயன்படுத்துவதை போல கொரானாவிலிருந்து தப்பிக்க இனி ஒரே வழி முகக்கவசம்தான் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகி. ஜெனீவாவில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறுகையில், "கொரானா  வைரஸ் மனித சமூகங்களில் உள்ள மற்றொரு வைரஸாக மாறக்கூடும். இந்த வைரஸ் ஒருபோதும் இங்கிருந்து போகாது என்று அதிர்ச்சியூட்டுகிறார். அதோடு, உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ் பரவாமல் தப்பிக்க எப்படி காண்டம் பயன்படுகிறதோ அதே போல கொரானாவிலிருந்து தப்பிக்க மாஸ்க் கட்டாயம் என்று கூறி ஷாக் கொடுக்கிறார். எயிட்ஸ் எப்படி பரவுது... கொரானா எப்படி பரவுது... ஒரு நியாயம் வேணாமா கொமாரு...?...
மருத்துவமனைக்கு போன கர்ப்பிணியை வழிமறித்து சங்கரன்கோயில் போலீஸ் அத்துமீறல் – காட்டமாக வீடியோ வெளியிட்ட இராணுவவீரர்

மருத்துவமனைக்கு போன கர்ப்பிணியை வழிமறித்து சங்கரன்கோயில் போலீஸ் அத்துமீறல் – காட்டமாக வீடியோ வெளியிட்ட இராணுவவீரர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரியும் ஒருவர் வெளியிட்ட வீடியோ சங்கரன்கோவில் காவல்துறையினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரணாபுரம் கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் CRPF வீரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது தந்தை மற்றும் 4 மாத கர்ப்பிணியான தங்கை ஆகிய இருவரும் ரவிக்குமாருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் சங்கரன்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்கள் வாகன சோதனையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் ரவிக்குமார் தந்தை மற்றும் அவரது தங்கை சென்ற வாகனத்தை நிறுத்தி கர்ப்பிணியான பெண் என்றும் பாராமல் அரை மணி நேரம் காக்க வைத்து திருடனிடம் விசாரணை செய்வதை போல் நடந்ததாகவும் குற்றம் சாட்டும...
தந்தையின் நினைவு நாளில் நலிந்த கலைஞர்களுக்கு ரூ.25 லட்சம் பண உதவி – ஐசரி கணேஷ் வழங்கினார்

தந்தையின் நினைவு நாளில் நலிந்த கலைஞர்களுக்கு ரூ.25 லட்சம் பண உதவி – ஐசரி கணேஷ் வழங்கினார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தமிழக முன்னாள் துணை அமைச்சர்  மறைந்த ஐசரிவேலன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. தன் தந்தையின் நினைவு தினத்தையொட்டி ஆண்டுதோறும் மே 14ஆம் தேதி அன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இன் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி K. கணேஷ் அவர்கள், ஆயிரக்கணக்கான நலிந்த நாடகநடிகர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு அறுசுவை உணவும் புத்தாடைகளும் வழங்குவது வழக்கம். இவ்வாண்டு COVID 19 பெரும் தொற்றின் காரணமாக பல நாடக நடிகர்கள் வாழ்வாதாரத்திற்கு போராடுவதால் இவ்வாண்டு, ரூபாய் 25 இலட்சத்தினை அவரவர் வங்கிக் கணக்கிற்கு 1000 ரூபாய் வீதம் 2500 கலைஞர்களுக்கு நேரடியாக செலுத்தியுள்ளார் டாக்டர் ஐசரி கே. கணேஷ். சென்ற மாதம் நடிகர் சங்கத்தின் நலிந்த நாடக நடிகர்களுக்காக ரூபாய் 10 லட்சத்தை நன்கொடையாக அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  ...
மனிதநேயத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் மதிப்பளித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்குங்கள் – ஸ்டாலின் அறிக்கை

மனிதநேயத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் மதிப்பளித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்குங்கள் – ஸ்டாலின் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மனிதநேயத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் மதிப்பளித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்குங்கள் - ஸ்டாலின் அறிக்கை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரானா நோய்த் தொற்றினால் கடந்த மூன்று மாதங்களாக வாழ்வாதாரத்தை அடியோடு தொலைத்துவிட்டுத் துயரத்தில் மூழ்கியிருக்கும் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தரப் பிரிவு மக்கள் ஆகியோருக்கு, நெருக்கடி மிகுந்த இந்தக் காலக்கட்டத்தில் கூட மனிதநேயத்துடன் உதவி செய்ய மத்திய பா.ஜ.க. அரசு மனமிரங்கவில்லை என்பது உள்ளபடியே மிகுந்த வேதனையளிக்கிறது. மாநிலங்கள் வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கிச் சீரழிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு மாநிலமும் ஒரு லட்சம் கோடி வரை நிவாரணம் வேண்டும் என்று கோரியுள்ள நிலையில் மாநில நிதி ஆதாரத்தை வலுப்படுத்த ஏற்ற...
பிரதமரின் 20 லட்சம் கோடி வெற்று உரைக்கு நிதியமைச்சர் விளக்கவுரை…- விடுதலை சிறுத்தைகள் கருத்து

பிரதமரின் 20 லட்சம் கோடி வெற்று உரைக்கு நிதியமைச்சர் விளக்கவுரை…- விடுதலை சிறுத்தைகள் கருத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *வெற்று உரைக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார்!* *நிதியமைச்சரின் அறிவிப்புகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருத்து!* பிரதமர்  தனது உரையில் 20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் திட்டங்களை அறிவிப்பதாகவும் அதன் விவரங்களை நிதியமைச்சர் வெளியிடுவார் என்றும் கூறியிருந்தார். அதனால் நாடே நிதியமைச்சரின் அறிவிப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்தது. இந்நிலையில் சிறு குறு தொழில்கள் தொடர்பான அறிவிப்புகளை இன்று நிதியமைச்சர் வெளியிட்டிருக்கிறார். பிற அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இந்த அறிவிப்புகள் எவையும் உடனடியாக மக்களுக்குப் பயன் அளிக்கக் கூடியவையாக இல்லை. பிரதமரின் வழக்கமான வெற்று உரைக்கு விளக்க உரையாக அமைந்துள்ளதே தவிர வேறேதும் இல்லை என்பதை வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறோம். சிறு குறு தொழிற்சாலைகளில் வகைப்பாடு மாற்றி அமைக்கப்பட்டிருக்கிற...