உஷார்… இதே வேகத்தில் போனால் மே மாசத்தில் கொரானா தாக்கம் 10 லட்சத்தை தாண்டுமாம்!
உலகம் முழுதும் பெரும் அச்சத்தையும், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை குடித்து வரும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் தற்போது சுமார் 700 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.
இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி வரை இந்தியாவில் வைரஸ் பரவலின் வேகம் தொடர்பான விவரங்களை வைத்து சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் முடிவில், ‘இந்தியாவில் வைரஸ் தொற்றின் வேகம் இப்போது இருக்கும் இதே வேகத்தில் சென்றால், மே மாத இடைப்பகுதிக்குள் இந்தியாவில் 1 முதல் 13 லட்சம் வரையிலான நபர்கள் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு உள்ளது’ என கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை தடுக்க சமூக விலகல் மிகமிக அவசியம் என்றும் எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள்....









