ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி உள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வடதமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றும், நாளையும் வடதமிழகத்தில் மிக மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால்,  தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்...
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்! வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது, படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வரும் 11-ந்தேதி வடதமிழக கடற்கரை பகுதிகளை நெருங்கும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடதமிழகத்தில் நாளை கனமழைக்கும், நாளை மறுநாள் அதீத கனமழைக்கும்  வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் எதிரொலியால், இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளு...
சென்னையில் மழை பாதிப்பு: 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சென்னையில் மழை பாதிப்பு: 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் மழை பாதிப்பு: 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார். சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் கால்வாய் பகுதி, சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையில்  இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து மழை பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்....
சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சம் பேர் பயணம்- பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்!

சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சம் பேர் பயணம்- பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சம் பேர் பயணம்- பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்! தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆண்டுதோறும் தமிழக அரசு  சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது கொரோனா பயம் காரணமாக குறைந்த அளவிலேயே பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்தனர். இப்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மீண்டும் ஆர்வம்காட்டி வருகின்றனர். குடும்பத்தோடு உற்சாகமாக பயணம் செய்கின்றனர். இதனால் இந்த ஆண்டு அதிகளவு மக்கள் பஸ்களை பயன்படுத்தி வருவதால் தமிழக அரசு  பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அதன்படி அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் உள்ள 20 ஆயிரத்து 334 பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கோயம்பேடு...
நீட் தேர்வு முடிவு- தமிழக அளவில் நாமக்கல் மாணவன், மாணவி முதலிடம்!

நீட் தேர்வு முடிவு- தமிழக அளவில் நாமக்கல் மாணவன், மாணவி முதலிடம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வு முடிவு- தமிழக அளவில் நாமக்கல் மாணவன், மாணவி முதலிடம்! அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ சேர்க்கைக்கு தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இந்த ஆண்டு கொரோனா 2-ம் அலை பாதிப்பு மிக மோசமாக இருந்ததால் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், பிளஸ்-2 மாணவர்களுக்கு 10, 11 வகுப்பு தேர்வுகள் மற்றும் பருவ தேர்வுகளில் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதனால் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். அதேநேரம் நீட் ஒரே ஒரு தேர்வுதான் என்பதால் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை பின்பற்றி தேர்வுகளை நடத்தலாம் என்றும் சிலர் வலியுறுத்தினர். இந்தச்சூழலில் கடந்த ஜூலை மாதம்  நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தே...
கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் தீபாவளி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று முதல் செயல்பட உள்ளன. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில், வேலூர், நெல்லை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தொடர...
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு! எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஆட்சியில் இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. சட்டம் நிறைவேற்றப்பட்டு அதற்கான  அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. உயர்நீதிமன்றம் மதுரை கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கு மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது என பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. மேலும், இடஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா? உள்ளிட்ட ஆறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது....
19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வருகை தந்த மாணவ- மாணவிகள்!

19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வருகை தந்த மாணவ- மாணவிகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வருகை தந்த மாணவ- மாணவிகள்! கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், கடந்த 19 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் ஏற்கனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொடரந்து, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு  நவம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். அதன்படி கொரோனா நெறிமுறைகளுடன் இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு வரும் மாணவ -மாணவிகளை ...
கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்! டி20 உலக கோப்பையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ரோகித் சர்மா- கே.எல். ராகுல் அல்லது இஷான் கிஷன்- கே.எல். ராகுல் ஆகியோரில் ஏதாவது ஒரு ஜோடி களம் இறங்கும் என ரசிகர்களும், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி சர்ப்ரைஸ் அளித்தது. கே.எல். ராகுல், இஷான் கிஷன் ஆகியோரை தொடக்க வீரர்களாக களம் இறக்கினார் விராட் கோலி. இது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. மேலும், நியூசிலாந்த...
எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி! அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும்,  எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில்  இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் பிரச்சனை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில்  இதுதொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை முடிந்த பின்னர் இன்று அவர் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது....