ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

மகான்-ஆக மாறிய விக்ரம் – வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மகான்-ஆக மாறிய விக்ரம் – வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மகான்-ஆக மாறிய விக்ரம் - வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தை இதுவரை ‘சியான் 60’ என்று அழைத்து வந்தனர். தற்போது இப்படத்திற்கு ‘மகான்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது....
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை!

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை! வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், உள்மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடிமின்னலுடன் மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்ணாசாலை, பாரிமுனை, மெரினா, எழும்பூர் தி.நகர், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், கோயம்பேடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணத்தால் அவதி அடைந்த சென்னைவாச...
அத்தப்பூ கோலம் போட்டு, ஓண சத்யா விருந்துடன் இன்று ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

அத்தப்பூ கோலம் போட்டு, ஓண சத்யா விருந்துடன் இன்று ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அத்தப்பூ கோலம் போட்டு, ஓண சத்யா விருந்துடன் இன்று ஓணம் பண்டிகை கொண்டாட்டம்! தென் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க திருவிழா  ஓணம் பண்டிகை. உலகம் முழுவதும் வசிக்கும் மலையாளிகள் ஓணம் பண்டிகையை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மகாபலி சக்கரவர்த்தியின் அகங்காரத்தை அடக்க திருமால் வாமனராக அவதரித்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி அனுமதி அளித்ததுடன் முதல் அடியில் பூமியையும், 2-ம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், 3-ம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவரை அழிக்க முற்பட்டார். அப்போது மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களை காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டினார். இதை ஏற்று அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், மக்களை காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓண...
ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டில் திருட்டு – தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்!

ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டில் திருட்டு – தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டில் திருட்டு - தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்! பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்தினம் (வயது 92). இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேலாக சண்டை பயிற்சி அமைத்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., ராஜ்குமார், பிரேம்நசீர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைத்து தரப்பு கதாநாயகர்கள் படங்களுக்கு சண்டை பயிற்சி அமைத்து உள்ள இவர் தற்போது வயது மூப்பின் காரணமாக தனது சொந்த ஊரான குடியாத்தம் தரணம்பேட்டை பெரியப்ப முதலி தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி ஜூடோ ரத்தினம் சென்னையில் திரைப்பட நடிகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். பின்னர் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் ஜூடோ ரத்தினத்தின் வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர்கள் அவரின் வீட்டின் கதவு திறந்திருப்...
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை!

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை! கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. முதல் அலை ஓய்ந்த பிறகு கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் மக்கள் முறையானபடி தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் இந்த ஆண்டு தொடக்கத்தில் மிக கடுமையான கொரோனா 2-வது அலை தாக்கியது. தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த முடியாதபடி அதிகரித்தது. அந்த சமயத்தில்தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சியை பிடித்து இருந்தது. மே மாதம் 2-வது வாரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரத்தை எட்டும் அளவுக்கு சென்றது. தினசரி உயிர்ப்பலி நூற்றுக்கணக்கில் இருந்தது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தமிழகம் முழுவ...
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்கள் மற்றும் ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் 20-ந் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யும். 21, 22-ந் தேதிகளில் ஒருசில வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பக...
Simbu’s Mother Usha Thrashes Vishal on “Red Card” issue!

Simbu’s Mother Usha Thrashes Vishal on “Red Card” issue!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
Simbu's Mother Usha Thrashes Vishal on "Red Card" issue! Simbu’s mother Usha T. Rajendar released a video thrashing former President of Tamil Film Producers Council Vishal who imposed red card against the “Eeswaran" actor. The Tamil Film Producers Council and the Film Employees Federation of South India were involved in a face-off after FEFSI allowed the shoot of Silambarasan TR’s new film 'Vendhu Thanindhathu Kaadu' (VTK), directed by Gautham Vasudev Menon. The TPFP has reportedly requested FEFSI not to cooperate with the film's shot till Simbu pays the pending dues. The shooting of 'Vendhu Thanindhadhu Kaadu was abruptly stopped on Thursday due to this issue. Now Simbu's mother Usha opened up about their side of the events and slammed Vishal for the judgement he provided against S...
ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்!

ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்! ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனால் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்தியர்களை அவசரமாக வெளியேற்ற திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தது. அதன்படி, நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சி-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு விமானத்தில், இந்திய தூதரக ஊழியர்கள் உள்பட 40 பேர் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். மற்றொரு விமானப்படை விமானத்தில் மீதியுள்ள இந்தியர்கள் அனைவரையும் அழைத்துவர திட்டமிடப்பட்டது. ஆனால், இந்திய தூதரகம் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு பகுதிக்குள் தலிபான...
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் சில தினங்களுக்கு முன் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99.47 ரூபாய், டீசல் லிட்டர் 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று 5-வது நாளாக பெட்ரோல் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 19 காசுகள் குறைந்து 94.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது....
தலிபான் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்!

தலிபான் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
தலிபான் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்! ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ‘ஆப்கானிஸ்தான்  தலிபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் அங்கு இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின. அதேபோல், ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியிலும் ஒருவித அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து தலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக நேற்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தலிபான்கள் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் நிர்வாக தொடர்புக்க...