சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

உக்ரைனின் எல்லைப் பகுதியில் ராணுவத்தை குவிக்கும் ரஷ்யா!

உக்ரைனின் எல்லைப் பகுதியில் ராணுவத்தை குவிக்கும் ரஷ்யா!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
    உக்ரைனின் எல்லைப் பகுதியில் தங்களது நாட்டு ராணுவத்தை ரஷ்யா குவித்து வருவதால் பதற்றம் நிலவுகிறது. 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.   இந்த நிலையில் சுமார் 1 லட்சம் படைவீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே போர் சூழல் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகயை அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன.. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “ ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. ரஷ்யா ஏதோ செய்ய இருக்கிறது” என்று ...
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் திருத்த வழக்கு தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் திருத்த வழக்கு தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
      தமிழ்த்தாயை கவுரவிக்கும் விதமாக முழு பாடலையும் பாட வேண்டும் என்றும், இதற்காக அரசு இணையதளம் உள்ளிட்ட ஆவணங்களில் முழு பாடலையும் வெளியிட தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில்,ஜெ.மோகன்ராஜ் என்பவர் கடந்த 2007-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய நீராருங் கடலுடுத்த' என தொடங்கும் பாடல், தமிழ்நாட்டில் அரசு, தனியார் நிகழ்ச்சி, பள்ளி, கல்லூரிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக பாடப்படுகிறது. ஆனால் இதில் பல வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது சுந்தரனார் எழுதிய முழு பாடலில், பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பது போல, கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும், ஆரியம்போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம்...
காமாட்சி அம்மன் கோவில் குளியலறையில் 3 ரகசிய கேமராக்கள்!

காமாட்சி அம்மன் கோவில் குளியலறையில் 3 ரகசிய கேமராக்கள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி பூஜையும், மாசி கொடை விழாவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக தங்குமிடம், கழிவறைகள், குளியலறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த 17-ந்தேதி பவுர்ணமி பூஜையை முன்னிட்டு கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள குளியலறையில் குளிக்க சென்ற பெண் பக்தர் ஒருவர், அங்கு மறைவான இடத்தில் ரகசிய கேமரா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தார். தொடர்ந்து குளியலறைகள் முழுவதும் கோவில் ஊழியர்கள் சோதனை செய்தபோது, அங்கு மேலும் 2 இடங்களில் ரகசிய கேமராக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் பூசாரி முருகன், விளாத்திக...
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நடிகை!

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
    பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்திருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் முதல் குழந்தைக்கு தாய் ஆகி உள்ளார். இந்த தகவலை அவரது கணவர் நிக் ஜோனஸ் தமது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் நிக்கை டேக் செய்து ஒரு குறிப்பைப் பகிர்ந்துள்ள பிரியங்கா, "நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம் என்பதை உறுதிப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறப்பு நேரத்தில் நாங்கள் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத...
ஆஸ்கர் தகுதி பட்டியலில் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம்!

ஆஸ்கர் தகுதி பட்டியலில் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றான ஆஸ்கர் விருது பட்டியலில் சூர்யா நடித்து ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. பல நாடுகளில் இருந்து தேந்தெடுக்கும் படங்களுக்கு விருது வழங்கி ஆஸ்கர் கௌரவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு பல படங்கள் போட்டியிட்டு அதில் சில படங்களே தேந்தெடுக்கப்படும். டி.ஜே. ஞானவேல் இயக்கித்தில் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் போன்ற பலரும் நடித்து அனைவரின் மத்தியில் பெரிதும் வெற்றிப்பெற்ற ஜெய்பீம் திரைப்படம், 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது...
வடக்கு கென்யாவில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை!

வடக்கு கென்யாவில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
    வடக்கு கென்யாவில் உள்ள தேசிய வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த போரா என்ற பெண் யானை சமீபத்தில் இரட்டை குட்டிகளை ஈன்றது. யானைகள் இரட்டை குட்டிகளை ஈன்றெடுக்கும் சம்பவம் எப்போதாவது நடக்கும். இது ஒரு அதிசய நிகழ்வு என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறினர். 80 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு இலங்கையை சேர்ந்த ஒரு யானை இரட்டை குட்டிகளை ஈன்றது. இப்போது வடக்கு கென்யாவில் யானை இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது....
மாஸ்க் போட மறுத்த பயணியால் புறப்பட்ட வேகத்தில் அவசரமாக தரை இறங்கிய விமானம்!

மாஸ்க் போட மறுத்த பயணியால் புறப்பட்ட வேகத்தில் அவசரமாக தரை இறங்கிய விமானம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
மாஸ்க் போட மறுத்த பயணியால் புறப்பட்ட வேகத்தில் அவசரமாக தரை இறங்கிய விமானம்! அமெரிக்காவின் மியாமி நகரில் இருந்து லண்டன் நோக்கி நேற்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் பயணித்த ஒரு பயணி, முக கவசம் அணிய மறுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என விமான பணியாளர்கள் எடுத்துக் கூறியும் அந்தப் பயணி கேட்கவில்லை. பயணி தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்ததால், விமானி உடனடியாக விமானத்தை மியாமி விமான நிலையத்திற்கு திருப்பினார். மியாமி விமான நிலையத்தை தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க அனுமதி பெற்றார். விமானம் தரையிறங்கியதும், முக கவசம் அணிய மறுத்த பயணியை போலீசார் கீழே இறக்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரது பயண அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட பயணிய...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் அரசுக்கு எதிராகவும், முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றசாட்டுகள் கூறியதாக ஸ்டாலின் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இதனிடையே கடந்த ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெற அரசாணையை தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணைகளை ஏற்று முதல்வர் ஸ்டாலின், முரசொலி செல்வம், கலைஞர் டிவி ஆசிரியர் திருமாவேலன் ஆகியோருக்கு எதிரான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன...
ரஜினி பட வெளிநாட்டு உரிமை தருவதாக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 15 கோடி மோசடி!

ரஜினி பட வெளிநாட்டு உரிமை தருவதாக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 15 கோடி மோசடி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
    *ரஜினி பட வெளிநாட்டு பதிப்புரிமை தருவதாக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 15 கோடி மோசட* மலேசியாவில் இயங்கி வரும் தனது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் (Malik Streems Corporation) என்கிற நிறுவனம் வாயிலாக தமிழ் திரைப்படங்களை முறைப்படி உரிமம் பெற்று வெளிநாடுகளில் வெளியிடும் தொழில் செய்து வருபவர் டத்தோ அப்துல் மாலிக். கபாலி போன்ற பல படங்களை இந்த நிறுவனம் தான் வெளியிட்டது. இவரது நிறுவனத்தை அணுகி, ரஜினிகாந்த்தின் ‘பேட்ட’ ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா-3’ மற்றும் தனுஷின் ‘நான் ருத்ரன்’ ஆகிய மூன்று படங்களுக்கான பதிப்புரிமை தன்னிடம் இருப்பதாக கூறி அவர்களை நம்பவைத்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி ராமசாமி, அவற்றை தருவதாக கூறி அந்த நிறுவனத்திடம் இருந்து 30 கோடி ரூபாய் பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் அவரிடம் பேட்ட படத்தின் பதிப்புரிமை இல்லை என்று தெரியவந்து, மாலிக் ஸ்ட்ரீம்ஸ...