சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

NEWS

மெரீனாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்கியது நீதிமன்றம்..!

மெரீனாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்கியது நீதிமன்றம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்ய மெரீனாவில் அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்கி தரும்படி அரசுக்கு ஸ்டாலின் கடிதம எழுதினார். ஆனால் நீதிமன்றத்தில் பல  வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மெரீனாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இடம் அளிக்க தமிழக அரசு மறுத்து விட்டது. மேலும், காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து திமுக தரப்பில் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவில் விசாரணை நடைபெற்றது. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி இடம் அளிக்க முடியாது என அதிமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதம் செய்தது. இந்த நிலையில் மெரீனாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள அனைத்தும் திரும்ப...
இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’ – ஸ்டாலின்

இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’ – ஸ்டாலின்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’! எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்? என் உணர்வில்,உடலில், ரத்தத்தில், சிந்தனையில்,இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட தலைவா! எங்களையெல்லாம் இங்கேயே ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்? "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று உங்கள் நினைவிடத்தில் எழுத வேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக இடையறாது உழைத்தது போதும் என்ற மனநிறைவுடன் புறப்பட்டு விட்டீர்களா? 95 வயதில்,80 ஆண்டு பொதுவாழ்வுடன் சளைக்காமல் ஓடி, ’நாம் தாண்டிய உயரத்தை யார் தாண்டுவார்கள் பார்ப்போம்’ என்று போட்டி வைத்து விட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா? திருவாரூர் மண்ணில் உங்கள் 95வது பிறந்த நாளாம் சூன் 3 ஆம் நாள் பேசும் போது, ‘ உ...
சிபிஐக்கு மாற்றம்… சிதறுமா சிலை கடத்தல் கேஸ்..!

சிபிஐக்கு மாற்றம்… சிதறுமா சிலை கடத்தல் கேஸ்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் கடமைக்கு கிடைத்த கொடுமை... சிபிஐக்கு மாறிய சிலை கடத்தல் கேஸ்   https://youtu.be/dziebHgeZH4
சிலை திருட்டு வழக்கை விசாரிக்கும் IG பொன் மாணிக்கவேல் பணியை தடுப்பது ஏன்..? கருணாஸ் MLA கேள்வி

சிலை திருட்டு வழக்கை விசாரிக்கும் IG பொன் மாணிக்கவேல் பணியை தடுப்பது ஏன்..? கருணாஸ் MLA கேள்வி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
திருடப்படும் தமிழ்நாட்டுச் சிலைகளை மீட்டெடுக்கும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்?  எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!  தமிழர் நாகரிகம் – தமிழர் தொன்மை – தமிழர் பண்பாடு என நம் முன்னோர் வாழ்ந்த அடையாளங்களே நம்மை நம் சந்ததியினரை அடையாளப்படுத்துகின்றன. அது அடுத்த தலைமுறையின் வாழ்வியலுக்கு வழிகாட்டுகின்றன. இவற்றையெல்லாம் மூடி மறைக்கும் செயல்களில் நம் இன எதிரிகளாய் உள்ளோர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். காரணம் தமிழர் என்ற இனத்தை புதிய உலகத்திற்கு அடையாளம் காட்ட மறுக்கும் சூழ்ச்சி! இனப்பகையின் வெளிப்பாடு! இதன் வெளிப்பாடாகத்தான் நமது தொன்மையான நாகரிகங்களை வெளிக்காட்டவும், அதை மூடி மறைக்கவும் அவர்கள்  முனைகின்றனர். எடுத்துக்காட்டாக, பூம்புகார், கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வாரய்ச்சி அவ்வபோது அரசுகளாலும், எதிரிகளாலும் தடுக்கப்படுகின்றன.  கடந்த சில ஆண்...
திமுக தலைவர் கலைஞரை பார்த்த ராகுல்காந்தி படம் வெளியீடு… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

திமுக தலைவர் கலைஞரை பார்த்த ராகுல்காந்தி படம் வெளியீடு… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக தலைவர் கலைஞர் உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில சிகிச்சை பெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுதும் கலைஞர் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. இந்த வதந்திகளுக்கு பதில் சொல்லும் விதத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா, கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டது. கலைஞர் படுக்கையில் சாய்ந்து படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி தொண்டர்களை நிம்மதி படுத்தியது. அதே போல பல வதந்திகளுக்கு தடை போட்டது. இந்த நிலையில் முதல் முறையாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் திமுக தலைவர் கலைஞரின் தெளிவான புகைப்படம் வெளியானது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து நலம் விசாரித்த போது எடுக்கப்பட்ட படம். கலைஞர் அவர்களிடம் மு.க.ஸ்டாலின் காதோரமாக குனிந்து ராகுல்காந்தி வந்திருப்பதை தெரிவிப்பது போல படம் உள்ளது. https://youtu.be/Vsm9MQDBlyY ...
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கா கோர்ட் வரும் இயக்குனர் ஷங்கரை கண்டித்த நீதிமன்றம்..!

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கா கோர்ட் வரும் இயக்குனர் ஷங்கரை கண்டித்த நீதிமன்றம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘எந்திரன்’. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார்.  இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை  என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற  தலைப்பில் படமாக எடுத்துள்ளனர். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் ஷங்கர் தன் தரப்பில் உள்ள ஆதார ஆவணங்களை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ‘மாஸ்டர்’ கோர்ட்டில் தாக்கல் செய்து, ஏப்ரல் 27...
திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் நடப்பது என்ன..? விளாசும் கவிஞர் பிறைசூடன்

திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் நடப்பது என்ன..? விளாசும் கவிஞர் பிறைசூடன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், வீடியோ
    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் என்ன தான் நடக்குது... கவிஞர் பிறைசூடன் விளக்குகிறாரா... விளாசுகிறாரா...   https://youtu.be/AChMfD7TzQ0
திருட்டு வீடியோவும்… சின்னப்புள்ள தனமும் கோடங்கி-ஒற்றனின் பேச்சு..!

திருட்டு வீடியோவும்… சின்னப்புள்ள தனமும் கோடங்கி-ஒற்றனின் பேச்சு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், வீடியோ
  திருட்டு வீடியோவும்... சின்னப்புள்ள தனமும்... https://youtu.be/mbuePFxAw-o