ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

நடிகர் சங்கத்துக்கு உதவுங்கள் முன்னணி நடிகர்,நடிகைகளுக்கு பூச்சி முருகன் வேண்டுகோள்!

நடிகர் சங்கத்துக்கு உதவுங்கள் முன்னணி நடிகர்,நடிகைகளுக்கு பூச்சி முருகன் வேண்டுகோள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண நிதி உதவி அளிக்க வேண்டும் என முன்னணி நடிகர், நடிகைகளுக்கு நடிகர் சங்க அறக்கட்டளை முன்னாள் உறுப்பினர் பூச்சி முருகன் வேண்டுகோள் விடுத்தார்.   இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:   முன்னணி நடிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்... கரோனா வைரஸ் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் திடீர் ஊரடங்கால் சினிமாத்துறையே முடங்கி கிடக்கிறது. இந்த திடீர் முடக்கத்தால் திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் அன்றாட சம்பளத்துக்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தான். இவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஃபெஃப்சி சார்பில் திரை பிரபலங்களிடம் உதவி கேட்டு வாங்கி உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல நமது சங்க உறுப்பினர்களுக்க...
கொரானாவால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து ஆல்பாஸ்  அறிவியுங்கள் – வைகோ அறிக்கை

கொரானாவால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து ஆல்பாஸ் அறிவியுங்கள் – வைகோ அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். மனித சமூகத்தை அச்சத்தில் உறையச் செய்திருக்கின்ற கொரோனா கிருமியை எதிர்த்து உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவால் மக்கள் கொத்துக் கொத்தாக மடியும் நிலையைக் காணும்போது நெஞ்சம் நடுங்குகிறது. அதுபோன்ற துயரப் பள்ளத்தாக்கில் நமது நாடும் விழுந்துவிடக் கூடாது. கொரோனாவை வெற்றி காண்பது நம் கைகளில் தான் உள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்போம்; வீட்டிலேயே தனித்திருப்போம்; கொரோனா தொற்று பரவாமல் மக்களின் உயிரை காப்போம்! என்ற உறுதியை மேற்கொள்ள தமிழக மக்களை அன்புடன் மீண்டும் வேண்டுகிறேன் இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள், பத்தாம் வகுப்புப்...
கட்சி அலுவலகம், கல்லூரியை கொரானா சிகிச்சை மையமாக மாற்றி கொள்ளுங்கள் – விஜயகாந்த் அறிவிப்பு

கட்சி அலுவலகம், கல்லூரியை கொரானா சிகிச்சை மையமாக மாற்றி கொள்ளுங்கள் – விஜயகாந்த் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தேமுதிக அலுவலகம், ஆண்டாள் அழகர் கல்லூரியை கொரானா தற்காலிக சிகிச்சை மையமாக மாற்றிக் கொள்ளலாம் - விஜயகாந்த் அறிவிப்பு கொரோனா சிகிச்சைக்கு தேமுதிக தலைமை அலுவலகம், கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார். இந்நிலையில், தங்களால் முடிந்த நிதியுதவியை அளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார். அதோடு காலியாக உள்ள கட்டிடங்களை தற்காலிக சிகிச்சை மையங்களாக மாற்றிக் கொள்ள தரும்படி கேட்டிருந்தார்கள். இதனையடுத்து, கொரோனா சிகிச்சைக்காக திமுக அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கையும், நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் தனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தையும், இடதுசாரி கட்சிகள் தங்கள் அலுவலகத்தையும் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவித்தார்கள். இப்போது அந்த வரிசையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது அலுவலக...
கொரானாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய பாலிவுட் பாடகி!

கொரானாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய பாலிவுட் பாடகி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    கொரானாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய பாலிவுட் பாடகி! பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர், கடந்த மாதம் வெளிநாட்டுக்கு சென்று திரும்பினார். அதன்பிறகு அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படத் தொடங்கின. தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியதை பொருட்படுத்தாமல், உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் அடுத்தடுத்து 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் ஒரு விருந்தில், எம்.பி.க்கள், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, உத்தரபிரதேச மாநில சுகாதார மந்திரி ஜெய்பிரதாப் சிங் உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். இதற்கிடையே, கனிகாகபூருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், அவர் கடந்த மாதம் 20-ந் தேதி, லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த அரசியல்வாதிகள் அனை...
கொரானா பாதிப்பு அதிகரிப்பதால் ஊரடங்கு நீடிக்கப்படுமா – முதல்வர் எடப்பாடி பதில்

கொரானா பாதிப்பு அதிகரிப்பதால் ஊரடங்கு நீடிக்கப்படுமா – முதல்வர் எடப்பாடி பதில்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பாதிப்பு அதிகரிப்பதால் ஊரடங்கு நீடிக்கப்படுமா - முதல்வர் எடப்பாடி பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியது: மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.500 கோடி எஸ்.டி.ஆர்.எப்.புக்கு கொடுத்திருக்கிறார்கள். படிப்படியாக நிதி கொடுப்பதாக சொல்லியிருக் கிறார்கள். சீனாவில் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசிடம் போதுமான நிதி இருக்கிறது. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். வைரசினுடைய தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்வதுதான். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த வைரஸ் எளிதாக பரவக்கூடியது, இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் வாயிலாக மக்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்...
தூங்கி எழுந்ததும் ஊரடங்கு உத்தரவு போட்டீர்களா… அடித்தட்டு மக்களை வதைக்கிற அரசு நிலைத்ததில்லை – மோடிக்கு காட்டமாக கடிதம் எழுதிய கமல்

தூங்கி எழுந்ததும் ஊரடங்கு உத்தரவு போட்டீர்களா… அடித்தட்டு மக்களை வதைக்கிற அரசு நிலைத்ததில்லை – மோடிக்கு காட்டமாக கடிதம் எழுதிய கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பணமதிப்பிழப்பு பாணியில் 4 மணி நேர அவகாசத்தில் உத்தவிட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களான அடித்தட்டு மக்களின் நலைனை பிரதமர் மோடி கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு காட்டமான கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை ஒரு பொறுப்புள்ள குடிமகனாகவும் அதே சமயம் நாட்டின் பாதிக்கப்பட்ட குடிமகனாகவும் எழுதுகிறேன். முதலில் உங்களுக்கு கடந்த 23-ஆம் தேதி கடிதம் எழுதினேன். அதில் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டேன். இதற்கு அடுத்த நாளே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பின் போது எப்படி கால அவகாசம் கொடுக்கப்படவி...
பிரதமர், அமைச்சர்கள் உள்பட எம்.பி.க்கள் சம்பளத்தில் 30 சதவீதம் வெட்டு… தொகுதி நிதி 2 ஆண்டுக்கு கட்… கொரானா எதிரொலி!

பிரதமர், அமைச்சர்கள் உள்பட எம்.பி.க்கள் சம்பளத்தில் 30 சதவீதம் வெட்டு… தொகுதி நிதி 2 ஆண்டுக்கு கட்… கொரானா எதிரொலி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிரதமர், அமைச்சர்கள் உள்பட எம்.பி.க்கள் சம்பளத்தில் 30 சதவீதம் வெட்டு... தொகுதி நிதி 2 ஆண்டுக்கு கட்... கொரானா எதிரொலி! புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி வழியே இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில், கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாடு எதிர் கொள்ள உள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் பிரதமர் உள்பட எம்.பி.க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இதேபோன்று குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் மற்றும் ஆளுநர்களின் ஊதியத்திலும் 30 சதவீதம் பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதோடு, முன்னாள் எம்.பி.க்களின் ஓவ்வூதியத்தி...
அமெரிக்காவில் புலிக்கு வைரஸ் தாக்கம்… தொடரும் சோகம்

அமெரிக்காவில் புலிக்கு வைரஸ் தாக்கம்… தொடரும் சோகம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அமெரிக்காவில் புலிக்கு வைரஸ் தாக்கம்... தொடரும் சோகம் மனிதர்களை தாக்கிய கொரானாவுக்கு விலங்குகளும் தப்பவில்லை..! உலகம் முழுதும் மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டு வந்தன. ஆனால், இந்தக்கூற்றைப் பொய்யாக்கும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காவில் பணியாற்றி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே, அந்த நபர் மூலமாக புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும், சில புலிகளுக்கு வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. புலிகள் மற்றும் சிங்கங்களிடம் வைரஸ் எவ்வாறு இருக்கும் என...
பிரதமர் மோடியின் விளக்கேற்றும் அறிவிப்புக்கு மாறாக தவறான கருத்தை பரப்பிய தமிழ் நடிகர்!

பிரதமர் மோடியின் விளக்கேற்றும் அறிவிப்புக்கு மாறாக தவறான கருத்தை பரப்பிய தமிழ் நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    பிரதமர் மோடியின் விளக்கேற்றும் அறிவிப்புக்கு மாறாக தவறான கருத்தை பரப்பிய தமிழ் நடிகர்! உலகம் முழுதும் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானாவை கட்டுப்படுத்த பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி "எப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்தி அல்லது டார்ச் லைட் ஏரிய விடுங்கள். கொரானா இருள் அகலட்டும்" என வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் பேரில் பிரதமர் மோடி டில்லியில் தனது வீட்டில் குத்துவிளக்கேற்றினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தொழிலதிபர் ரத்தன் டாடா, சச்சின், திரைப்பிரபலங்கள் விஜயகாந்...
கொரானா நிவாரண உதவியிலும் மோசடி? 300 மூட்டை அரிசி ஸ்வாகா… ராதாரவி மீது தொடரும் ஊழல் புகார்!

கொரானா நிவாரண உதவியிலும் மோசடி? 300 மூட்டை அரிசி ஸ்வாகா… ராதாரவி மீது தொடரும் ஊழல் புகார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
      கொரானா நிவாரண உதவியிலும் மோசடியா? 300 மூட்டை அரிசி ஸ்வாகா... ராதாரவி மீது மீண்டும் ஊழல் புகார்! உலகையே அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் காரணமாக தொழில்கள் முற்றிலும் முடங்கி உள்ளது. வேலை இழந்துள்ள தமிழ் திரைத்துறை தொழிலாளர்களுக்கு நிதி திரட்டிய பெப்சி தன்னிடம் வந்த நிவாரண பொருட்களை ஒவ்வொரு சங்கத்திற்கும் பிரித்து கொடுத்தது. அதன் படி ராதாரவி தலைவராக உள்ள டப்பிங் யூனியனுக்கு 300 மூட்டை அரிசியும் கணிசமான ரொக்கமும், இன்னபிற நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது பெப்சி வழங்கிய நிவாரண பொருட்களை உண்மையில் சிரமப்படும் டப்பிங் உறுப்பினர்களுக்கு வழங்காமல் ராதாரவி தன் ஆதரவாளருக்கு மட்டும் வழங்கி விட்டு மொத்த நிவாரண உதவியையும் கொடுத்து தீர்த்து விட்டதாக கண்க்கு காட்டிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்...