இந்தியாவின் தலைசிறந்த காவல் நிலையமாக தேர்வான பட்டியலில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் இடம் பிடித்தது..!
இந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 2016ம் ஆண்டு முதல் நாட்டின் தலை சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. குற்றங்களை கண்டறிதல், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல், விபத்துக்களை குறைத்தல், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், போலீஸ் சமுதாய பணிகள், கணினி மூலம் பராமரிக்கப்படும் குற்றப்பதிவேடுகள், போலீஸ் நிலையத்தில் பொதுமக்களை வரவேற்கும் முறைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.
கடந்த 2017ல் 10 போலீஸ் நிலையங்கள் சிறந்த போலீஸ் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டன. கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையம் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு விருதை பெற்றது. அதே போல 2018ம் ஆண்டு 8-வது சிறந்த காவல் நிலையமாக தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையம...









