தமிழகத்தில் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் 23ம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, இன்றே உருவாகியுள்ளது. சென்னையிலிருந்து 1200 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது.
இந்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகரும் என்பதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஒரே சமயத்தில் அரபிக் கடலிலும் வங்கக்கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. மூன்று பாதைகளில் இந்த தாழ்வு மண்டலம் பிரிந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளதால், காற்றழுத்த தாழ்வு பகுதி எந்த இடத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்படவில்லை.
இந்த நில...
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்த பிறகு, 400க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் கனவு நனவாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கான ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதைத் தொடர்ந்து, கலந்தாய்வின் மூலம் அவர்கள் பல்வேறு கல்லூரிகளில் மருத்துவம் பயில்வதற்கான இடம் ஒதுக்கப்பட்டது.
இருப்பினும், ஒரு சில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதால், அவர்கள் சிரமப்படுவதாக தகவல் வெளியாகியது.
இதனிடையே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்க...
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்ட அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாஜக மாநில தலைவர் எல்.முருகன், மாநில பொறுப்பாளர் சி.டி.ரவி, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அமித் ஷாவை வரவேற்றனர்.
இதேபோல் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரில் சென்று அமித் ஷாவை வரவேற்றனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
விமான நிலையத்திற்கு வெளியே பாஜக மற்றும் அதிமுக சார்பில் தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் அமித்ஷாவை உற்சாகமாக வர...
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையையும், வெளிப்படுத்தும் வகையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று, சட்டப்பேரவையில் நிறைவேற்றித் தந்தும், அதனை மத்திய அரசிடம் உரிய வகையில் வலியுறுத்திச் செயல்படுத்தும் வலிமையும், அக்கறையுமற்ற அதிமுக அரசினால், அரியலூர் அனிதா தொடங்கி ஆண்டுதோறும் பல மாணவர்களின் உயிரைக் கொன்று குவித்தது நீட் எனும் கொடுவாள். அதனால்தான், திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
அதிமுக ஆட்சியாளர்களோ, எத்தனை உயிர்கள் போனால் எங்களுக...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
மு.க.ஸ்டாலின் வாரத்தில் மூன்று நாட்கள் காலை நேரத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் சைக்கிளில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
...
சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தில் இறுதி காட்சியில் வரும் பெண் பைலட் நிஜத்திலும் பைலட் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் தீபாவளி விருந்தாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் நெடுமாறானாக சூர்யா, பொம்மியாக அபர்ணா பாலமுரளி என்று நடித்த அனைவரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.
ஒரு காட்சிக்கு வந்தாலும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் க்ளைமேக்ஸ் காட்சியில் வந்த பெண் பைலட் ஒருவர்.
இவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் பைலட் தான். இவர் பெயர் வர்ஷா. இண்டிகோ விமானத்தில் பைலட்டாக இவர் உள்ளார்.
சென்னையில் வசித்து வரும் இவரது கணவர் லோகேஷ் என்பவரும் பைலட் தான். இவரது பூர்விகம் கேரளா.
சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா கேட்டுக் கொண்டதற்காக சிறப்பு ...
சூரைப்போற்று திரைப்படம் வெகு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தன் கடின உழைப்பால் விமானம் வாங்கிய ஈழத் தமிழன்
நடிகர் சூர்யா நடித்த Soorarai Pottru (சூரரைப் போற்று) படம் தற்போது வெளிவந்து பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் இன் நேரம்.
ஒரு சமூகத்தில் தன் இனத்தில் ஒருவன் – அடையாளப் படுத்தப்படுகின்றான் வெற்றி பெறுகின்றான் சாதனை படைக்கின்றான் என்றால் அவன் சார்ந்த இனம் அவனை வரவேற்று வாழ்த்தவேண்டும்..
கனடாவில் வசித்துவரும் நம் ஈழத் தமிழர் ஒருவர் தனது கடின உழைப்பாலும் ஆற்றலாலும் அவர் திறமையாலும் வெற்றி பெற்று நிற்கின்றார் புலம்பேர் மண்ணில் பலதரப்பட்ட தொழிலதிபர்கள் இருக்கின்றார்கள்.
அவர்களில் குறிப்பிட்ட நபர்களே நம் தேச மக்களுக்காக குரல் கொடுத்தும் உதவிகரம் நீட்டியும் வருகின்றவர்கள் அவர்களில் ஒருவர். கனடாவில் வாழ்ந்து வரும் சந்திரன் ராசலிங்கம் என்பவர். யாழ்ப்பாண இந்து கல்லூரியின் பழைய மாண...
டெல்லியில் அதிகரித்த காற்று மாசால் கோவா சென்றார் சோனியா காந்தி
டெல்லியில் சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதேபோன்று காற்று மாசு அளவும் அதிகரித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி டெல்லியிலுள்ள கங்கா ராம் மருத்துவமனையில் இந்த ஆண்டு ஜூலை 30ந்தேதி சேர்க்கப்பட்டார்.
இதன்பின்பு கடந்த ஆகஸ்டில் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று சென்ற பின்னர், தீவிர மருத்துவ சிகிச்சைகள் அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூட கலந்து கொள்ளாமல் அவரது மகன் ராகுல் காந்தியுடன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார்.
டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசால் மார்பு தொற்று ஏற்பட்டு கடுமையாக அவர் அவதிப்பட்டு உள்ளார். இதனால், தலைநகர் டெல்லியில் வசித்து வந்த சோனியா காந்தியை, அவரது உடல்நலத்திற்காக ஒரு சில நாட்கள் நகரை விட்டு வெளியேறும்படி டாக்டர்...
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஆளும் கட்சியான அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி உள்ளன.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் இல்லாமல் அ.தி.மு.க. முதல் முறையாக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. எனவே அ.தி.மு.க. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அ.தி.மு.க.வில் கட்சி ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், அ.தி.மு.க. அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மாலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், மு...