ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு பா.ஜ.க. அரசின் சதித் திட்டம் – வைகோ கண்டனம்

ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு பா.ஜ.க. அரசின் சதித் திட்டம் – வைகோ கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு முகமை: பா.ஜ.க. அரசின் சதித் திட்டம்! வைகோ கண்டனம் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று (19.08.2020) எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கி உள்ளனர். அதில், மத்திய அரசின் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு, தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (National Recruitment Agency - NRA) உருவாக்கப்படும் என்றும், மத்திய அரசு பணியிடங்களை நீரப்புவதற்கு நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது வங்கிப் பணி, இரயில்வே பணி உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறை பணிகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகளை எழுதுவதால் கால விரயமும், தேர்வு கட்டண செலவு அதிகரிப்பதும், வீண் அலைச்சல...
விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டுக்குள்ளேயே கொண்டாட வேண்டும்: தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டுக்குள்ளேயே கொண்டாட வேண்டும்: தமிழக அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும்: தமிழக அரசு பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இன்று தெரிவித்துள்ளது. கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், இன்று இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்து அமைப்புகள் அரசின் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்....
கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. கொரோனா பாதிப்பு தன்மையை பொறுத்து மாநில அரசாங்கம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய...
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை – கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை – கோர்ட் அதிரடி தீர்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருகிறது. அதனால் அந்த ஆலையை திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்ப...
கேட்டதும் கிடைக்கும் இ-பாஸ்!

கேட்டதும் கிடைக்கும் இ-பாஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கேட்டதும் கிடைக்கும் இ-பாஸ்! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும்முறை இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விண்ணப்பித்தால் உடனே இ-பாஸ் கிடைக்கிறது. திருமணம் போன்ற காரணத்திற்கு ஆதாரங்கள் எதுவும் இன்றி விண்ணப்பித்த நபர்களுக்கு இ-பாஸ் கிடைத்தது. விண்ணப்ப காரணங்களில் புதிதாக எதுவும் சேர்க்கப்படாத நிலையில் உடனே இ-பாஸ் தரப்படுகிறது. ஆதார் அல்லது ரேசன் அட்டை விவரங்களுடன் தொலைபேசி எண்ணையும் சேர்த்து விண்ணப்பித்தால் இ-பாஸ் உடனே கிடைக்கும். 2 நாள் அனுமதி தரப்பட்ட நிலையில் தற்போது ஒருநாள் மட்டுமே இ-பாஸூக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதையடுத்து சென்னைக்கு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதே போல சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் எண...
அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி மீண்டு வர வேண்டும் – நடிகர் மோகன் உருக்கம்

அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி மீண்டு வர வேண்டும் – நடிகர் மோகன் உருக்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி மீண்டு வர வேண்டும் - நடிகர் மோகன் உருக்கம்   திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நான் எஸ்.பி.பி. அவர்களின் ரசிகன். பெங்களூருவில் இருந்த காலகட்டங்களில், அவரின் குரலும் பாடலும் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய பாடல்களைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். கல்லூரி வாழ்க்கையில், அவருடைய எத்தனையோ பாடல்கள் என் கல்லூரி வாழ்க்கையின் பலவற்றில் இரண்டறக் கலந்திருந்தது. அப்போதெல்லாம், நான் சினிமாவுக்குள் வரவேண்டும் என்றோ நடிகனாவேன் என்றோ நினைத்ததில்லை. ஆனால் எப்போதும் எஸ்.பி.பி.யின் பாடல்கள் எனக்கு துணையாகவும் பொழுதுபோக்காகவும் உத்வேகம் கொடுப்பதாகவும் இருந்தன. தெலுங்கில் எனது முதல் படமான 'தூர்ப்பு வெல்லே ரயிலு' (கிழக்கே போகும் ரயில் படத்தின் ரீமேக்) படத்துக்கு எஸ்.பி.பி சார் தான் இசையமைப்பாளர். முள்ளப்புடி வெங்கடரமணா திரைக்கதையில் பாப்பு இயக்கத்தில் வெளியான அந்தப் படத...
இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம். உலகின் தொன்மை மொழியான தமிழோ பேரடையாளம் – அறிக்கையில் தெறிக்க விடும் வைரமுத்து

இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம். உலகின் தொன்மை மொழியான தமிழோ பேரடையாளம் – அறிக்கையில் தெறிக்க விடும் வைரமுத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம். உலகின் தொன்மை மொழியான தமிழோ பேரடையாளம் - அறிக்கையில் தெறிக்க விடும் வைரமுத்து   கவிஞர் வைரமுத்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தி தெரியாவிடில் நீங்கள் இந்தியரா என்ற வினா அதிர்ச்சியூட்டுவது; ஆபத்தானது; அதைத் தொடர்ந்து இன்னொரு மோசமான கேள்விக்கும் ஆயத்தப்படுத்துவது. இந்த வினாவைப் போகிற போக்கில் புறந்தள்ள முடியாது. ஓர் அதிகாரியின் தனிக்குரல் என்று இதை எடுத்துக்கொள்ள முடியாது. ஆதிக்கத்தின் அம்பறாத் தூணியிலிருந்து தெற்கு நோக்கி வீசப்பட்ட நஞ்சில் நனைத்த அம்பு அது. தலையால் சிந்திக்கிற யாரும் இப்படி ஒரு வினாவை வீசியிருக்க முடியாது. மீண்டும் எங்கள் நெருப்பு தன்மீது பூத்திருக்கும் நீறுகளைக் காற்றில் ஊதிக் கங்கு காட்ட வேண்டிய காலம் இது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை நோக்கி மட்டும் கேட்கப்பட்...
அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும் கூல் கேப்டன் – தோனியை புகழ்ந்த ஸ்டாலின்!

அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும் கூல் கேப்டன் – தோனியை புகழ்ந்த ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  "அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும் கூல் கேப்டன் - தோனியை புகழ்ந்த ஸ்டாலின்! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று வெளியிட்டார். இந்த அறிவிப்பு உலக கிரிக்கெட் குறிப்பாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்த நிலையில் டோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியுடன் டோனி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து,  “நெருக்கடியான தருணங்களிலும் தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை வழி நடத்திய 'கேப்டன் கூல்' அவர்! கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. சர்வதேச...
உலக அளவில் கொரானா பாதிப்பில் இந்தியாவுக்கு 3ம் இடம், குணமடைவோர் பட்டியலில் 2ம் இடம்!

உலக அளவில் கொரானா பாதிப்பில் இந்தியாவுக்கு 3ம் இடம், குணமடைவோர் பட்டியலில் 2ம் இடம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    கொரானா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம். மோசமான பாதிப்பு பட்டியலில் 3ம் இடம்.   உலகளவில் கொரானா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவையும், பிரேசிலையும் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் தொற்று சீக்கிரமாக கண்டறியப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு, கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்புவோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. உலக அளவில் பார்த்தால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொரோனாவில் இருந்து வீடு திரும்பியோரின் பட்டியலில் பிரேசில்தான் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 32.26 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளான நிலையில், கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26.16 லட்சமாக உள்ளது. பிரேசிலை தொடர்ந்து இந்...
கொரானா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் பயம் வேண்டாம் – டாக்டர் செளமியா சுவாமிநாதன் தகவல்

கொரானா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் பயம் வேண்டாம் – டாக்டர் செளமியா சுவாமிநாதன் தகவல்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    கொரானா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் பயம் வேண்டாம் - டாக்டர் செளமியா சுவாமிநாதன் தகவல் உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளரான மருத்துவர் சவுமியா சாமிநாதன், “கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கொரோனா வைரஸில் இருந்து காத்துக் கொள்வதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் உலக அளவில் 200 நிறுவனங்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. அதில் இந்தியாவில் மட்டுமே 8 நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. இது மட்டுமல்லாமல், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் வெகுஜன பயன்பாட்டுக்கு இலவசமாகவே கிடைக்கும். அதற்கான நிதி திரட்டல் பணிகளும் கூடவே நடைபெற்று வருகிறது” எனக் கூறியுள்ளார். 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவிட் 19 தடுப்பு பணிக்காக சிறந்த மருத்துவ ஆலோசனைகளை வழங்கிய சவுமியா சாமிநாதனுக்கு தமிழக அரசு சார்பாக முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்க...